மைண்ட் ப்ளோயிங்.. பொருள் அந்த மாறி வர்மா! ஆப்பிள் 16 சீரிஸ்.. ஏஐ சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கலிபோர்னியாவில் நடைபெற்ற 'இட்ஸ் க்ளோ டைம்' நிகழ்வில் ஆப்பிள் 16 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக ஐபோன் 16 சீரிஸில் ஆப்பிள் ஏஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன? அதை எப்படி பயன்படுத்துவது? எப்போது முதல் அது ஃபோன்களில் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

உலக அளவில் செல்போன் விற்பனை பிரிவில் முன்னணி இடத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் நேற்று தனது 'இட்ஸ் க்ளோ டைம்' நிகழ்வில் ஆப்பிள் ஐபோன் 16 ஃபோன்களை அறிமுகம் செய்துள்ளது.

apple iphone16 series technology 16

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த இந்த நிகழ்வில் ஐபோன் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், ஆப்பிள் வாட்ச், ஏர் பட்ஸ், ஐஓஎஸ் ஏ 18 உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளது.

இட்ஸ் க்ளோ டைம் நிகழ்வு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்கியது. ஆப்பிள் நிறுவனத்தின் யூடியூப் சேனல், ஆப்பிள் டிவி மற்றும் ஆப்பிள் இணைய தளத்தில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. கலிபோர்னியாவின் குபர்ட்டினோவில் உள்ள ஆப்பிள் தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் வெளியானது. ஆப்பிளின் அடிப்படை மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களுடன், 4th ஜெனரேஷன் ஏர்பாட்ஸ், ஐஓஎஸ் 18 இயங்கு தளம், ஆப்பிள் வாட்ச் 10 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஐபோன் 15 ஃபோன்கள் வெளியான நிலையில் தற்போது ஐபோன் 16 மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாம்சங், ஓப்போ ஏஐ ஆகியவற்றுக்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனமும் ஆப்பிள் ஆர்டிஃபிசியல் இண்டெலிஜன்ஸ் உடன் ஐபோன்கள் வெளியிடும் என எதிர்பார்த்த நிலையில், அதன்படியே ஃபோன்களை வெளியிட்டுள்ளது. 6, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய போன்களில் இந்த அம்சம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஐபோன் 16 பயனர்கள் என்னென்ன வசதிகளை பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

சாட் ஜிபிடி,google-ன் ஜெமினி,சாம்சங் ஏஐ உள்ளிட்ட பல ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மென்பொருள்கள் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எப்படி இருக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. நேற்று வெளியிடப்பட்ட டெமோவின் அதற்கான விளக்கம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் கொண்ட புதிய ஐபோன்களை நாங்கள் பெருமையுடன் வெளியிடுகிறோம் என ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனரான டிம் குக் பெருமையுடன் கூறியிருந்தார்.

ஜூன் மாதம் ஆப்பிள் இன்டலிஜென்ஸை வெளியிட்டோம்.. தற்போது மற்ற இன்டலிஜென்ஸ்களை விட ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் பல்வேறு வகைகளில் மிகவும் வித்தியாசமானது என அவர் தனது பேச்சின் போது குறிப்பிட்டு இருந்தார். ஏற்கனவே ஐபோன்களின் "சிரி" என்ற மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அதைவிட பல மடங்கு நுண்ணறிவு கொண்டது.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு புகைப்படத்தை எடுக்கிறீர்கள் என்றால் அந்த புகைப்படம் எப்போது எங்கு எடுத்தது அல்லது அந்த புகைப்படம் உங்கள் போனில் இருக்கிறதா என்பதை மறைந்து விடும். ஒருவேளை அந்த புகைப்படத்தை நீங்கள் மீண்டும் பார்க்க வேண்டும் என்றால், டெல்லியில் தாஜ்மஹாலில் எடுத்த போட்டோ என நீங்கள் டைப் செய்தாலே அது தொடர்பான அனைத்து போட்டோக்களும் உங்களுக்கு கிடைத்துவிடும்.

மேலும் தொலைந்து போன அல்லது அழித்துவிட்டதாக நினைத்த வீடியோக்களை நீங்கள் எடுக்க வேண்டும் என நினைத்தால் அது தொடர்பாக நீங்கள் டைப் செய்தாலே அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் உங்களுக்கு கிடைத்துவிடும். இது மட்டுமில்லாமல் சாலையில் நீங்கள் செல்லும்போது ஏதோ ஒரு விஷயத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டாலே அது தொடர்பான அனைத்து விபரங்களும் உங்களுக்கு கிடைக்கும்.

உதாரணத்திற்கு கேஎஃப்சி உணவகத்தை புகைப்படம் எடுத்தல் அந்த கேஜிஎப்சி தொடர்பான அனைத்து விவரங்களும் உங்களுக்கு கிடைக்கும். இது மட்டும் அல்லாமல் உணவு, திரைப்படம், டூர் என பல்வேறு விஷயங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை ஆட்டோ ஃப்ரேம், ஆட்டோ எடிட் செய்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு கடற்கரையில் நீங்கள் புகைப்படம் எடுக்கும் போது பின்னால் ஒரு போட் நிற்கிறது என வைத்துக் கொள்வோம். அப்போது ரிமூவ் போட் என நீங்கள் டைப் செய்தாலே அந்த போட்டை ஆட்டோமேட்டிக்காக ஆப்பிள் ஏஐ எடிட் செய்து அழகாக உங்களுக்கு தந்து விடும். இதன் மூலம் பல்வேறு வகையிலும் வாடிக்கையாளர்கள் தங்கள் புதுமையான ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சத்தை பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் ஆப்பிள் 16 ஃபோன்களை வாங்கிய உடனே நீங்கள் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியாது. சில மாதங்கள் கழித்து ஃபோன்களை அப்டேட் செய்யும் போது ஆப்பிள் இன்டலிஜென்ஸ் சேவை தங்களுக்கு வழங்கப்படும். முதலில் பீட்டா வெர்ஷன் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு மற்ற நாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகப்படுத்தப்படும் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+