தமிழ்நாடு.. ஊரடங்கில் வருகிறது கூடுதல் தளர்வுகள்.. பஸ், ஜவுளி, நகைக்கடை.. இன்னும் என்னென்ன?
சென்னை: கொரோனா ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின், சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். மருத்துவ வல்லுநர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஊரடங்கு ஜூன் 28ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால் இன்று ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி முடிவு எடுக்கப்பட உள்ளது.
கடந்தமுறை ஊரடங்கு நீடிக்கப்பட்டபோது, 3 மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.

சென்னைக்கு அதிக தளர்வுகள்
காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இருப்பதிலேயே அதிகமான தளர்வு வழங்கப்பட்டன. கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு குறைவான தளர்வு வழங்கப்பட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு ஓரளவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது.

மேலும் பல மாவட்டங்களுக்கு தளர்வுகள்
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தின்போது, மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவையை தொடங்குவது குறித்து முதலமைச்சர் யோசனை கேட்டுள்ளார். கடந்த மே மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா விகிதம் குறைந்தது. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் வாரா வாரம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

3வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள்
மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன மாவட்டங்கள். ஒவ்வொரு வகை மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு வகை தளர்வுகள் தரப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு வரும் 28ம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த வாரம் முதல்தான் இப்படி மாவட்டங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது எப்படி மாவட்டங்கள் பிரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

11 மாவட்டங்களில் கட்டுப்பாடு நீக்கம்
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருப்பதியேலேயே அதிக கட்டுப்பாடுகள் உள்ளதால், இனி, சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. பாதிப்பு குறைந்துவரும் பிற மாவட்டங்களில் கடைகள் செயல்படுவதற்கான நேரம் அதிகரித்து வழங்கப்படும். திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்போர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

பஸ் போக்குவரத்து
கொரோனா பரவல் குறைவாக கூடிய பிற 23 மாவட்டங்களில் 50 சதவீதம் நகரப் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. பெரிய கடைகள், குளிர்சாதன வசதி இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் இயங்க அனுமதி வழங்கப்படும். நூலகம், அருங்காட்சியங்கள் திறப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.

ஜவுளிக் கடைகள்
ஜவுளி மற்றும் நகைக் கடைகளில் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்பட அனுமதி தரப்படும். இவ்வாறு பல்வேறு தளர்வுகள் இந்த வாரம் கொடுக்கக்கூடிய அரசு அறிவிப்பில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் நாளை, அல்லது நாளை மறுதினம்தான் வெளியிடப்படும்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications