சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நான் ரெடி".. ரஜினியிடம் ஆளுநர் ரவி சொன்னது என்ன? பின்னால் இருந்து இயக்க போகும் தலை! நோட் பண்ணீங்களா

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த பின் அளித்த பேட்டியில் பல்வேறு அரசியல் ஒளிந்து இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அவர் பேட்டியில் சொன்ன விஷயங்களில் அரசியல் ஒளிந்து இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

Recommended Video

    Rajini-ஆளுநர் சந்திப்பு பின்னணி என்ன? *Politics | Oneindia Tamil

    தமிழ்நாடு அரசியலில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நுழைவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். 2021 சட்டசபை தேர்தலுக்கு முன் 2 வருடங்களாக இதோ வருகிறேன்.. அதோ வருகிறேன் என்று ரஜினிகாந்த் கூறி வந்தார்.

    ஆனால் கடைசி வரை அரசியலுக்கு வராமலே ஒதுங்கிக்கொண்டார். முதலில் ரஜினிதான் முதல்வர் வேட்பாளர் என்று கூறப்பட்டது.

    பின்னர் கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர் என்று ரஜினிகாந்த் கூறி வந்தார். அதன்பின் உடல்நிலை காரணமாக ரஜினிகாந்த் சிகிச்சை பெற வேண்டி இருந்தது.

    ஆளுநர் ரவியிடம் அரசியல் பற்றி பேசினேன்.. ரஜினிகாந்த் அதிரடி பேட்டி!ஆளுநர் ரவியிடம் அரசியல் பற்றி பேசினேன்.. ரஜினிகாந்த் அதிரடி பேட்டி!

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    உடல்நிலை சரியாகி மீண்டும் வந்த ரஜினிகாந்த் "அண்ணாத்தே" போதும் " அரசியல்" வேண்டாம் என்று மொத்தமாக ஒதுங்கிக்கொண்டார். அரசியலுக்குள் வராமலே அரசியலில் இருந்தே ஒதுங்கி இருக்க போகிறேன் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில்தான் இத்தனை நாட்கள் கழித்து மீண்டும் தமிழ்நாடு அரசியலில் ரஜினிகாந்த் லைம் லைட்டிற்கு வந்துள்ளார். இன்று அவர் ஆளுநர் ரவியை சந்தித்துதான் இந்த விவாதங்களுக்கு காரணம்.

    அரசியல்

    அரசியல்

    இன்று ஆளுநரை சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் ரஜினிகாந்த் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தவர்.. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இருந்தாலும் இதில் அரசியல் பேசினோம். ஆனால் அதை பற்றி உங்களிடம் சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் இருக்கும் ஆன்மீக உணர்வு ஆளுநர் ரவிக்கு பிடித்து இருக்கிறது. . தமிழ்நாட்டின் நன்மைக்காக நான் என்ன செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.

    ஆளுநர் சந்திப்பு

    ஆளுநர் சந்திப்பு

    அரசியல் பற்றிய திட்டம் என்னிடம் எதுவும் இல்லை என்று ரஜினிகாந்த் கூறினார். இதில் ரஜினிகாந்த் மறைமுகமாக இரண்டு விஷயங்களை சொன்னதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். ரஜினியுடன் கடந்த காலங்களில் நெருக்கமாக பணியாற்றிய சிலர் இதை பற்றி நம்மிடம் பேசுகையில், ரஜினி சொன்னதில் அரசியலுக்கு வர மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரசியல் பேசினோம் என்றும் சொல்கிறார்.

    அரசியலுக்கு வராதவர்

    அரசியலுக்கு வராதவர்

    அரசியலுக்கு வராதவர் ஏன் அரசியல் பேச வேண்டும்? பெரும்பாலும் இதன் அர்த்தம் ரஜினியின் ஆதரவை பாஜக பெறும் என்பதாக இருக்கலாம். அதாவது ரஜினி நேரடியாக அரசியலுக்கு வராமல் பாஜகவிற்கு பின்னால் இருந்து சப்போர்ட்டாக இருக்கலாம். பாஜக பல மாநிலங்களில் இந்த அரசியலை செய்கிறது. நேரடியாக சிலரை இறக்காமல், பின்னால் இருந்து கட்சிக்காக அவர்களை பயன்படுத்தும். அதன்படியே ரஜினியை பாஜக பயன்படுத்த போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தமிழ்நாடு நன்மை

    தமிழ்நாடு நன்மை

    அதோடு தமிழ்நாடு தமிழ்நாட்டின் நன்மைக்காக நான் என்ன செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று ரஜினிகாந்திடம் ஆளுநர் தெரிவித்து இருக்கிறார். நன்மை செய்ய ரெடி என்று ஆளுநர் கூறியது ஏன்? இதன் உண்மையான அர்த்தம் என்ன? அரசியல் ரீதியான மாற்றங்களை மாற்றங்களை இது குறிக்கிறதோ என்றும் ரஜினியுடன் கடந்த காலங்களில் நெருக்கமாக பணியாற்றிய சிலர் நம்மிடம் தெரிவிக்கிறார்கள். சமீபத்தில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் பேசினார்.

    ஆன்மிகம்

    ஆன்மிகம்

    இந்த நிகழ்ச்சியில் முற்றும் துறந்தவர் போல ரஜினிகாந்த் பேசினார். மக்கள் பட கூடிய கஷ்டம் தொடங்கி ஞானம் வரை பல விஷயங்களை பேசினார். ஆனால் அதே ரஜினி இப்போது அரசியல் பேசினேன் என்று கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். பாஜகவிற்காக இவர் பிரச்சாரம் செய்ய போகிறாரா அல்லது வேறு ஏதாவது அரசியல் அல்லது பதவிகள் இவருக்கு வரப்போகிறதா என்று கேள்விகள் இந்த பேட்டியால் எழுந்துள்ளது.

    English summary
    What did Governor Ravi talk to Actor Rajinikanth in his meeting? நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த பின் அளித்த பேட்டியில் பல்வேறு அரசியல் ஒளிந்து இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அவர் பேட்டியில் சொன்ன விஷயங்களில் அரசியல் ஒளிந்து இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X