பச்சை பொய்.. எடப்பாடி பழனிசாமி ரொம்ப மோசம்.. விடமாட்டேன்.. ஜெயிலுக்குள் புலம்பிய ஓபிஎஸ்.. என்னாச்சு?
எடப்பாடி ஓபிஎஸ் இடையே பனிப்போர் வெடித்துள்ளது
சென்னை: அதிமுகவுக்குள் புகைச்சல் அதிகமாகி கொண்டிருக்கிறது.. ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்து வரும் நிலையில், ஓபிஎஸ் புது அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார்.
தேர்தல் தோல்விக்கு பிறகு, அதிமுகவிற்கு வேறு தலைமை வேண்டும் என்ற உறுதிப்பிடிப்பு கட்சிக்குள் ஏற்பட்டுள்ளது..
"கட்சியின் பொதுக் குழுவை கூட்டுங்கள், தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும்" என்று சில மாநில நிர்வாகிகள் பலரும் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் அழுத்தம் கொடுக்க துவங்கி விட்டனர். உள்ளாட்சியில் ஏற்பட்ட தோல்வி, கட்சியின் தலைமை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற விவாதத்தையும் இது தற்போது உருவாக்கி வருகிறது.

சசிகலா
சசிகலா தலைமையேற்க வந்தே ஆக வேண்டும் என்பதை அதிகமாகவே உணர்ந்து வருவதாலோ என்னவோ, சில மூத்த தலைவர்கள் கூட "ஒற்றை தலைமை" தான் கட்சிக்கு சரியாக இருக்கும் என்கிற விமர்சனத்தை துவக்கியிருக்கிறார்கள்... இந்த 5 வருட காலமும் இரட்டை தலைமை என்ற விஷயத்தை நம்பிதான் கட்சியை கோட்டை விட்டுவிட்டோம், இனியும் ஈகோவை காட்டிக் கொண்டிருந்தால், இருக்கும் தொண்டர் பலத்தையும் இழந்துவிட வேண்டியதுதான் என்ற முணுமுணுப்புகளும் எழுந்துள்ளது.

ஜெயக்குமார்
இந்த விஷயமெல்லாம் கேள்விப்பட்டு எடப்பாடி தரப்பு அப்செட் ஆனதாக தெரிகிறது.. ஆனால், மாஜிக்கள் தரப்பே, ஜெயக்குமார் கைதுக்கு பிறகு இடிந்து போய் உட்கார்ந்து விட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், ஓபிஎஸ், எடப்பாடி இடையே மறைமுகமான மோதல் போக்கு வெடித்துள்ளது.. கடந்த 24-ந்தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்ததும், ஓபிஎஸ்சிடம் சொல்லிக்கொள்ளாமலே, புழல் சிறைக்கு சென்று ஜெயக்குமாரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடியின் இழுப்பு
இதனை அறிந்து, செம டென்சன் ஆனார் ஓபிஎஸ். இதன் விரிவான தகவலை 24-ந்தேதி அனுப்பி வைத்திருப்பேன். எடப்பாடியின் இழுப்புக்கு இனி இடம் தரக்கூடாது.. மோதி பார்த்துவிடுவது என்ற கோதாவில் இறங்க ஓபிஎஸ் முடிவு செய்து விட்டார் என்பதே அதிமுகவின் முணுமுணுப்பாக நிலவி வந்தது.. இந்த நிலையில், தனது நண்பர்களான கட்சியின் சீனியர்கள் கே.பி.முணுசாமி, வைத்தியலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டவர்களோடு, புழல் சிறைக்கு சென்று ஜெயக்குமாரை சந்தித்துள்ளார் ஓபிஎஸ்.

எடப்பாடி பழனிசாமி
அந்த சந்திப்பில், " உங்களை சந்திக்க வருவதாக ஒரு வார்த்தைக் கூட எடப்பாடி என்னிடம் சொல்லவில்லை. எல்லா தலைவர்களும் ஒன்றாக வந்து உங்களை பார்த்தால்தானே தொண்டர்களுக்கு நம்பிக்கை வரும். ஆனா. நம்பிக்கைக்கு உரியவராக எடப்பாடி இல்லை" என்று தனது வருத்தத்தை ஜெயக்குமாரிடம் தெரிவித்திருக்கிறார் ஓபிஎஸ்!.. தொடர்ந்து பேசிய அவர்கள், "உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். கவலைப்படாதீர்கள் " என சொல்லியிருக்கிறார்கள் ஓபிஎஸ்சும் மற்றவர்களும்.

ஆர்ப்பாட்டம்
இதனிடையே, ஜெயக்குமார் கைதை கண்டித்து நடத்தும் ஆர்பாட்டம் தனக்கு தெரியாது என்பதால் அதனை புறக்கணித்துள்ளார் ஓபிஎஸ்... ஜெயக்குமாரை சந்தித்த பிறகும்கூட, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை.. அதாவது, இந்த சந்திப்பை தொடர்ந்து, எடப்பாடியுடம் மோதுவதை வெளிப்படையாக காட்டத் துவங்கிவிட்டார் ஓபிஎஸ் என்கிறார்கள்..!

எம்பி தேர்தல்
இதெல்லாம் கேள்விப்பட்ட மற்ற நிர்வாகிகளோ கவலை தெரிவித்து வருகின்றனர்.. இவங்க 2 பேருமே இப்படி சண்டை போட்டுக் கொண்டால் எப்படி? எம்பி தேர்தல் வரப்போகிறது.. 1998ல் நடந்த எம்பி தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெற்றது... அதேபோல, வரும் எம்பி தேர்தலில், அதிமுகவே மகுடம் சூட வேண்டுமானால், அந்த வெற்றியை பெறுவதற்கான சூழ்நிலையை, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், எடப்பாடியும்தான் உருவாக்க வேண்டும்...

எடப்பாடி
2 பேரில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து, ஒற்றைத் தலைமை உருவாக வழி வகுக்க வேண்டும்... அப்போதுதான், கோஷ்டிகள் குறைத்து, கட்சி கட்டுப்பாட்டோடு செயல்பட முடியும்... இப்போதே வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள், திமுக பக்கம் தாவ ஆரம்பித்துவிட்டனர்.. இப்படியே போனால், மற்ற கட்சிகளுக்கு தொண்டர்களும், நிர்வாகிகளும் ஓடுவது தொடர்கதையாகிவிடும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications