குண்டர் சட்டம் போடும் அளவுக்கு என்ன தவறு செய்தேன்?.. நீதிபதிகள் முன்பு 'பப்ஜி' மதன் கடும் வாதம்!
சென்னை: குண்டர் தடுப்பு சட்டம் போடும் அளவுக்கு என்ன தவறு செய்தோம்? என்று அறிவுரை கழகத்தில் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி தெரிவித்தனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டை விளையாடவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள்.
Recommended Video
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் 'பப்ஜி' விளையாட்டை யூட்யூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பி, ஆபாசமாக பேசி பெண்களை கீழ்தரமாக பேசியும் பணம் வசூலித்தார் என்று யூடியூபர் பப்ஜி மதனை கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பப்ஜி மதனுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி அவரது மனைவி கிருத்திகாவையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

திடுக்கிடும் தகவல்கள்
பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இருவரும் ஆன்லைன் 'பப்ஜி விளையாட்டு மூலம் பல கோடிகள் சம்பாதித்ததும், சொகுசு கார், வீடு வாங்கியதாகவும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்பட்டது. ஜாமீனில் வெளிவந்த கிருத்திகா தனது கணவர் எந்த சொத்துக்களும் சேர்க்கவில்லை என்றும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டை விளையாடவில்லை என்றும் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அறிவுரை கழகத்தில் ஆஜர்
இதற்கிடையே ஜூலை மாதம் 6-ம்தேதி பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார் பப்ஜி மதன். இந்த நிலையில் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் பப்ஜி மதனை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். தன் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அறிவுரை கழகத்தில் ஆஜராகி பப்ஜி மதன் வாதாடலாம்.

கணவன்-மனைவி ஆஜர்
இந்த நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மாசிலாமணி, ரகுபதி, ராமன் ஆகியோர் முன்பு பப்ஜி மதன் ஆஜரானார். இதனை தொடர்ந்து பப்ஜி மதன் தனது வாதத்தை நீதிபதிகள் முன்பு எடுத்து வைத்தார். கைகுழந்தையுடன் அங்கு சென்று இருந்த பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவும் நீதிபதிகள் முன்பு ஆஜராகி வாதாடினார்கள்.

கொரியா வெர்ஷன்தான் விளையாடினோம்
அப்போது இந்தியாவில் சீனா பப்ஜி செயலிதான் தடை செய்யப்பட்டுள்ளது. கொரியா வெர்ஷன் பப்ஜி ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்படவில்லை. நாங்கள் கொரியா வெர்ஷனை விளையாடிதான் பதிவேற்றினோம். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டிய அளவிற்கு எந்தவித தவறும் செய்யவில்லை. ஆகவே பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று இருவரும் வாதாடியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications