"இருப்பா இருப்பா.. அதெல்லாம் பேசக்கூடாது"- கட்சி பிரமுகர் கேள்வியால் பதறிப்போய் அதட்டிய ஜெயக்குமார்!
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரஸ்மீட்டின் போது, உடன் இருந்த அதிமுக நிர்வாகி ஒருவர் செய்தியாளரிடம் கேட்ட கேள்வியால் பதறிப்போன ஜெயக்குமார், அதெல்லாம் பேசக்கூடாது என தடுத்தார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்புக்கு எதிராக ஈபிஎஸ் செய்த மேல்முறையீட்டு வழக்கில் நேற்று எடப்பாடி தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்தது.
இதையடுத்து ஈபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி வீட்டில் குவிந்தனர். முக்கிய நிர்வாகிகள் பலரும் ஈபிஎஸ்ஸை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது உடன் இருந்த ஈபிஎஸ் ஆதரவாளர் கேட்ட கேள்வியால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஈபிஎஸ் டீம் உற்சாகம்
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கூடினர்.

ஒன்றரை கோடி தொண்டர்களும்
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியடையும் வகையில் உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும், தனி நீதிபதி உத்தரவு ரத்து ஆகிய இரு உத்தரவையும் அதிமுகவினர் எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

ஓபிஎஸ் நீக்கம் செல்லும்
இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ற அங்கீகாரத்தையும், ஒற்றைத் தலைமை செல்லும் என்ற அங்கீகாரத்தையும் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதன்மூலம் ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எந்த அடிப்படையில் பொதுக்குழுவை கூட்டினார்களோ அதையே பின்பற்றி பொதுக்குழு கூட்டப்பட்டது.

ஜீரோ ஓபிஎஸ்
ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாக கூறுகிறார்களே கேவியட் மனு தாக்கல் செய்வீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "அது குறித்து சட்ட வல்லுநர்கள் குழு ஆலோசித்து முடிவெடுக்கும். எங்கு சென்றாலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்" என்று பதிலளித்தார். அரசியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு 'ஜீரோ' என்று பதிலளித்தார் ஜெயக்குமார்.

அப்படியெல்லாம் பேசக்கூடாது
செய்தியாளர் ஒருவர், போன வாரம் அவர்கள் தீர்ப்பை கொண்டாடினார்கள், இப்போது நீங்கள் கொண்டாடுகிறீர்கள், இறுதியில் யார் வெற்றியைக் கொண்டாடுவது எனக் கேள்வி எழுப்பினார். அப்போது ஜெயக்குமாருக்கு பின்னால் நின்ற அதிமுக பிரமுகர் ஒருவர் 'நீ எந்த டிவி?' என்கிற ரீதியில் ஒருமையில் கேள்வி கேட்டார். இதனால் பதறிப்போன ஜெயக்குமார், "இருப்பா இருப்பா.. அப்படியெல்லாம் பேசக்கூடாது" என அடக்கினார். இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications