ஷாக் தந்த லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள்.. திமுக ரியாக்ஷன் என்ன! வந்து விழுந்த பரபர கருத்து
சென்னை: லோக்சபா தேர்தலின் எக்ஸிட் போல் முடிவுகள் இப்போது வெளியாகி வரும் நிலையில், இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், அதன் பிறகு பல்வேறு மாநிலங்களிலும் லோக்சபா தேர்தல்கள் நடந்து முடிந்தன.

கடைசிக் கட்ட தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், இன்று மொத்தம் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றன. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
லோக்சபா தேர்தல்: நாட்டில் மொத்தம் 543 தொகுதிகளில் வெல்லும் கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கும். லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இப்போது பல்வேறு செய்தி நிறுவனங்களும் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. எதிர்க்கட்சி கூட்டணி கடந்த முறையைக் காட்டிலும் கூடுதல் இடங்களில் வெல்லும் என்றாலும் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கும் என்றே பெரும்பாலான எக்சிட் போல் சர்வேக்களில் கூறப்பட்டுள்ளது.
தமிழக கள நிலவரம்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு பெரும்பாலான தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதிலும் கூட கடந்த முறையைக் காட்டிலும் இடங்கள் குறைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பாஜக ஓரிரு தொகுதிகளில் வெல்லும் என்றே பெரும்பாலான எக்ஸிட் போல் சர்வேக்களில் கூறப்பட்டுள்ளது.
திமுக ரியாக்ஷன் என்ன: இதற்கிடையே எக்ஸிட் போல் முடிவுகள் இப்போது வெளியாகி வரும் நிலையில், இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "சில மாநிலங்களில் "இந்தியா" கூட்டணி வெல்லும் என்று தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் சர்வேக்களில் கூறப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் போன்ற ஒரு சில மாநிலங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதாக எக்ஸிட் போல் சர்வேக்கள் கூறுகிறது. ஆனால், நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
நம்பிக்கை: இந்தியா கூட்டணி எளிதாக 300+ சீட்களில் வெல்லும் என்பதே எனது கணிப்பு.. பாஜகவின் என்டிஏ கூட்டணி பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பல தொகுதிகளை இழக்கும். மத்தியப் பிரதேசத்தைத் தவிர அனைத்து மாநிலங்களில் பாஜக சீட்களை இழக்கும்.
குஜராத்தில் கூட மக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தியது அனைவருக்கும் நினைவில் இருக்கும். எனவே, பாஜக இந்த முறை பல்வேறு தொகுதிகளை நிச்சயம் இழக்கும்" என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications