எல்லாம் ‘அவர்’ விட்ட வழி! எடப்பாடியை ஃபாலோ பண்ணும் ஓபிஎஸ்! டெல்லிக்கு பறக்கும் மெயின் தலை! இதுதானா?
சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் கடந்த சில நாட்களாக அமைதியோ அமைதியென இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது தீடீரென அதிரடி அரசியல் பாதைக்கு மாறியிருக்கிறார். திடீரென மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட காரணம் என்ன? அதற்கு பிறகாக அவரது நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை பொதுவெளியில் முதன்முறையாக போட்டு உடைத்தவர் அதிமுக முன்னாள் அமைச்சரும் சென்னையைச் சேர்ந்த முக்கிய தலைவருமான ஜெயக்குமார்.
அவர்தான் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முடித்துக் கொண்டு வெளியே வந்தவுடன் ஊடகங்களிடம் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது என பேசினார்.

ஒற்றைத் தலைமை
அப்போது ஆரம்பித்தது தான் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம். அன்று மாலையே ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள வீட்டில் ஆலோசனை நடத்திய நிலையில் மறுபுறம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒற்றை தலைமை விவகாரம் முதல் பொதுக்குழு கூட்டம் வரை ஓபிஎஸ் தரப்பில் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், ஜேசிடி பிரபாகர், தர்மர், தேனி சையது கான், கன்னியாகுமரி அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது அவர்கள் எடுத்த நிலைப்பாட்டில் தான் தற்போது வரை தொடர்வதாக கூறுகின்றனர் தேனி அதிமுகவினர்.

ஓபிஎஸ் அதிரடி
அதன் பின்னர் எம்.எல்.ஏ.க்களை இழுப்பது, ஒன்றிய செயலாளர்கள் என ஓரளவு ஆதரவு கிடைத்தது. தொடர்ந்து மாவட்ட செயலாளர்களை அதிரடியாக நியமித்தார் ஓபிஎஸ். அதன் பின்னர் இணைப்பு முயற்சிகளை பாஜக தொடர்ந்ததால் அமைதி காத்தார் ஓபிஎஸ். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி உடன் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் ஆதரவளிக்க பாஜக தலைமை முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகின.

எடப்பாடி பழனிச்சாமி
இதனால் மிகுந்த அதிருப்தியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டி விட்டு விடலாமா எனவும் யோசிப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் திடீரென மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதற்கு காரணம் என்ன என அவரது ஆதரவாளர்கள் சிலரிடம் விசாரித்த போது பல தகவல்கள் கிடைத்தன. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு இருந்தாலும் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. எனவே எடப்பாடி முதன் முதலில் மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டியது போலவே தற்போது ஃபார்மாலிட்டிக்காகவே அவர் மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டி இருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

பொதுக்குழு கூட்டம்
அதன்பிறகு எடப்பாடி அறிவித்தது போல அன்றிலிருந்து 15 நாட்கள் அதாவது தைப்பொங்கலுக்கு முன்னதாக அதிமுக பொது குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட இருக்கிறது. இதை அடுத்து ஓ.பன்னீர்செல்வதால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் அதிமுகவின் பொது செயலாளர் ஓ.பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பொதுச்செயலாளர் பதவி வேண்டாம் ஒருங்கிணைப்பாளராகவே தொடரலாம் என ஓபிஎஸ் முடிவு செய்திருப்பதாக இன்னொரு தகவலும் உலாவுகிறது.

பின்னணி?
இதையடுத்து அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் கட்சியின் அவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் தாக்கல் செய்ய இருக்கிறார். இதனால் இருவருமே அதிமுகவுக்கு உரிமை கொண்டாட முடிவு செய்திருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவின்படி இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதற்கெல்லாம் பின்னணியில் டெல்லி தலைமை இருப்பதாகவும் இதனால் தான் இவ்வளவு நாட்களாக அமைதியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது திடீரென மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார் என்கின்றனர் தேனி ரத்தத்தின் ரத்தங்கள்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications