கை கொடுக்கும் கை! அடுத்தடுத்து அறிக்கை அஸ்திரங்கள் தொடுக்கும் ஓபிஎஸ்! குழப்பத்தில் எடப்பாடி & கோ!
சென்னை : கொரோனா தொற்றிலிருந்து வீடு திரும்பிய வேகத்திலேயே அதிமுக 14 மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்திருப்பதாக, அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், எதற்காக இந்த நடவடிக்கை என இபிஎஸ் ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக மோதல் ஏற்பட்டதை எடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுகவில் இரு துருவங்களாக செயல்பட்டு வருவது அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள், தலைமை நிலைய நிர்வாகிகள், சார்பு அணிநிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தனக்கே இருப்பதால் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக பதவியேற்க எடப்பாடி பழனிச்சாமி தயாராகி வருகிறார். தற்போது அவர் இடைக்கால பொதுச்செயலாளர் என்றாலும், நிரந்தரமாக பொறுப்பேற்க தயாராகி வருகிறார்.

ஒற்றைத் தலைமை விவகாரம்
கிட்டத்தட்ட அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ள நிலையில் , டெல்லிக்கு சென்ற போது அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மத்திய அரசு எடப்பாடி பழனிசாமியை மட்டுமே அங்கீகரித்துள்ளதாக எடப்பாடி தரப்பைச் சேர்ந்த ஆர்.பி.உதயகுமார் கூறியிருந்தார். ஆனால் குடியரசுத் தலைவர் பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரதமர் வணக்கம் வைத்ததோடு சரி, அடுத்து தனியாக சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.

ஓ பன்னீர்செல்வம்
பாஜகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரம் கேட்டிருந்தார் அப்போது ஓ பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் புகார் அளிக்கலாம் என நினைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அமித் ஷாவும் பிரதமர் நரேந்திர மோடியை போலவே எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை இதனால் தனது டெல்லி பயணித்திட்டங்களை பாதியிலேயே முடித்துவிட்டு இன்று காலை சென்னை திரும்பினார் எடப்பாடி பழனிச்சாமி. அங்கு அவரது ஆதரவாளர்கள் அவரை வரவேற்றாலும் வழக்கமான உற்சாகம் எடப்பாடி பழனிச்சாமியின் முகத்தில் இல்லை.

அதிரடி அறிக்கை
அதே நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு இன்று வீடு திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் வந்த வேகத்திலேயே 14 மாவட்ட செயலாளர்களை நியமிப்பதாக அதிரடி அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். குறிப்பாக கோவை மாவட்ட அதிமுக செயலாளராக கோவை செல்வராஜ் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளராக மாநிலங்களவை உறுப்பினரான தர்மரை நியனம் செய்வதாக அறிவித்தார் .இதற்கு பின்னணியில் என்ன காரணம் என்பது அதிமுகவில் இருக்கும் பலருக்கே புரியவில்லை. நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார் அதில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் அவரவர் உதவிகளை மீண்டும் தொடர அனுமதிக்கப்படுகிறார்கள் என கூறியிருந்தார்.

பின்னணி என்ன?
எதற்காக ஓ பன்னீர்செல்வம் இப்படி அடிக்கடி அறிக்கைகள் விட்டு வருகிறார் என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. குடியரசுத் தலைவர் பிரியாவிடை நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமியை மட்டுமே அழைத்ததாக அவரது தரப்பு ஆதரவாளர்கள் கூறிய நிலையில் ஓபிஎஸ் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கொரோனா காரணமாக அவர் டெல்லி செல்லவில்லை எனவும் மருத்துவமனையில் இருந்தபோது பாஜகவின் முக்கிய தலைவர்கள் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாகவும் எதுவாக இருந்தாலும் தங்கள் ஆதரவு இருக்கும் என கூறியுள்ளனர்.

நெருக்கடி கொடுக்க திட்டம்
இதனால் உற்சாகமடைந்த ஓபிஎஸ் அடிக்கடி அறிக்கை அஸ்திரங்களை கையில் எடுத்துள்ளார். ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தேர்தல் ஆணையம் தங்களுக்கு எதிராக தீர்ப்புகளை வழங்கினாலும் அதிமுகவின் உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் குறிப்பிட்ட நபர்களை மாவட்ட செயலாளராக நியமித்து நாங்கள்தான் உண்மையான அதிமுக என எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்க ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாகவும் இதன் அடிப்படையிலேயே முதல் கட்ட மாவட்ட செயலாளர் அறிவிப்பு எனவும், வரும் காலங்களில் அடுத்தடுத்து மாவட்ட செயலாளர்கள் மாவட்ட இணைச் செயலாளர்கள் மாநில அளவிலான நிர்வாகிகள் நியமனம் என அதிரடி காட்ட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications