ஆனந்தம்.. ஆனந்தம் பாடும்! அப்பாவை விஜய் வெறுக்க இவர்தான் காரணமா? வெளியான பகீர் தகவல்! உண்மையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய் சில மனக்கசப்புகள் காரணமாக தனது தந்தையை நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருக்கும் நிலையில் அதற்கு காரணம் என்ன? எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் விஜய் ஆகிய இருவருக்கும் இடையே தடுப்புச் சுவராக இருப்பது யார் என்பது குறித்தான தகவல்கள் வெளியாகி உள்ளன.

திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் எப்படி சின்ன குழந்தைகள் கூட ரஜினிகாந்தை கைகாட்டுமோ அதேபோல இளைய தளபதி என்றாலோ தளபதி என்றாலோ உடனே அனைவரும் நடிகர் விஜய்யை தான் கூறுவார்கள்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நாயகனாக வலம் வரும் விஜய்க்கு எம்ஜிஆர் ரஜினிக்கு இணையான ரசிகர் பட்டாளம் உண்டு. லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் ஆஸ்தான நாயகனாகவும் அண்ணனாகவும் நடிகர் விஜய் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

தளபதி விஜய்

தளபதி விஜய்

சுமாரான படங்கள் என்றாலும் சூப்பர் ஹிட் ஆக மாற்றும் வல்லமை அவரது ரசிகர்களுக்கு உண்டு இதன் காரணமாக அவர் சமீபத்தில் நடித்த பெரும்பாலான படங்கள் 100 கோடியை தாண்டி வருகின்றன. ஆரம்பத்தில் இயக்குனரும் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களை குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் அதன் பிறகு நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக அவதாரம் தரித்தார். ஆரம்பத்தில் உருவ கேலி, இரட்டை அர்த்த வசனங்களால் எழுந்த விமர்சனங்கள் காரணமாக நடிகர் விஜய் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் பூவே உனக்காக திரைப்படம் அவரது வாழ்விலும் திரை உலகிலும் திருப்புமுனையாக அமைந்தது.

 விஜய் மக்கள் இயக்கம்

விஜய் மக்கள் இயக்கம்

அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக உயர்ந்த அவரை அரசியல் சர்ச்சைகளும் சூழ்ந்து கொண்டது. தலைவா, காவலன், சர்க்கார், மெர்சல் என அடுத்தடுத்து வெளியான படங்கள் ஆளும் கட்சியினரையும் பிற கட்சியினரையும் உசுப்பேற்ற விஜய்க்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. இருந்த போதும் அதுவே படத்திற்கு விளம்பரமாக அமைய இந்த படங்கள் பல கோடிகளை வாரி குவித்தது. இந்த நிலையில் தான் அரசியல் ஆசை காரணமாக விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கினார் விஜய்.

நீதிமன்றம்

நீதிமன்றம்

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டு குறிப்பிடத்தகுந்த வெற்றிகளையும் பெற்றது. விஜய்யின் அரசியல் ஆசைக்கு அச்சாரமாக விஜய் மக்கள் இயக்கம் இருந்தாலும் தந்தை மகனுக்குமான உறவை உடைத்துப் போட்டதும் அந்த இயக்கம் தான். தன் பெயரில் கட்சி ஆரம்பித்த தந்தைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என நீதிமன்றம் வரை சென்ற விஜய் அதன் பிறகு தந்தையுடன் நேரடி தொடர்பை முடித்துக் கொண்டார். அவரது பிறந்தநாளுக்கு கூட நேரில் வாழ்த்து சொல்லவில்லை என தகவல்கள் வெளியானது.

என்ன தான் பிரச்சினை?

என்ன தான் பிரச்சினை?

இதனால் பலரும் நடிகர் விஜய் கடுமையாக விமர்சித்த நிலையில் இருவருக்கும் என்ன பிரச்சனை என்பது குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. நடிகர் விஜய் நடித்த வில்லு திரைப்படம் வெளியான போது மாவட்ட மாவட்டமாக சுற்றி விஜய்யின் மக்கள் இயக்கத்துக்கு உயிரூட்டியவர் எஸ்.ஏ சந்திரசேகர். பின்னர் அந்த இயக்கத்தை பிரம்மாண்டமாக விழா எடுத்து மக்கள் மத்தியிலும் கொண்டு சேர்த்தார். நிர்வாகிகள் நியமனம் மன்ற இயக்க நிர்வாகிகள் கூட்டம் செயல்பாடுகளை கண்காணித்து வந்தார் எஸ்.ஏ.சி.

 யார் அந்த நிர்வாகி?

யார் அந்த நிர்வாகி?

இந்நிலையில் தான் விஜய் மக்கள் இயக்கத்தில் வேறு ஒருவருக்கு கூடுதலாக முக்கியத்துவம் தரப்பட்டது. நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அந்த நிர்வாகி தான் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே நடக்கும் பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர் விவரம் அறிந்த திரையுலகினர். தந்தை மீதான கோபம் சற்றும் குறையாமல் அவர் பார்த்துக் கொள்வதாகவும் விஜய் பேச நினைத்தாலும் ஏதாவது ஒரு விவகாரத்தை கூறி திசை திருப்பி தற்போது வரை நடிகர் விஜய் தந்தையை சந்திக்காமலேயே வைத்திருக்கிறார் என்கின்றனர். அதே நேரத்தில் தந்தை மீது விஜய்க்கு பாசம் உண்டு எனவும் தனது தாயிடம் தொலைபேசியில் பேசும் போதெல்லாம் தந்தையைப் பற்றி விசாரிக்கிறார் என்கின்றனர் அவரது நெருங்கிய வட்டாரத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+