கறார் காட்டிய அமித் ஷா.. உடனே பறந்து போன எடப்பாடி.. அதிமுக கூட்டணியில்.. யாருக்கு எத்தனை சீட்!
சென்னை: தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது. இந்த நிலையில், இன்று டெல்லிக்கு அவசரமாக சென்றுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார். கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் எண்ணிக்கையை பகிர்ந்துகொள்வது குறித்து ஆலோசனை நடக்கிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட் என்பதை எடப்பாடி முடிவு செய்து வைத்திருக்கிறார். அதனடிப்படையில் தான் இந்த பேச்சு வார்த்தை இருக்கும் என்கிறார்கள் அதிமுகவின் மூத்த தலைவர்கள்.

அதிமுக - பாஜக - கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்
அவர்களிடம் நாம் விசாரித்தபோது, ''பாஜகவுக்கு 25 சீட், பாமக அன்புமணிக்கு 18 +1, (டாக்டர் ராமதாஸ் இந்த கூட்டணிக்கு வந்தால் அவரது தரப்புக்கு 5 சீட்), தினகரனுக்கு 7 சீட் , ஜி.கே. வாசனுக்கு 3 என மொத்தம் 53 இடங்களை ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்துள்ளார் எடப்பாடி. அதற்கேற்ப பேச்சுவார்த்தையைத் தொடங்குவார்.
இதில், மிக அழுத்தம் தரப்பட்டால் ஓரிரு சீட்டுகள் எல்லா கட்சிகளுக்கும் கூடும். ஆனால், பாமக அன்புமணியைத் தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளுக்குமாக 50 சீட்டுகளை கேட்கிறது பாஜக. அதாவது, பாஜகவுக்கு 50 சீட்டுகள் தந்துவிட வேண்டும். பாமக அன்புமணிக்கு தேவையானதை எடப்பாடி ஒதுக்கிக் கொள்ளட்டும் என்பது பாஜக தலைமையின் திட்டம். ஆனால், இதற்கு எடப்பாடி சம்மதிக்காத நிலையில் தான் எடப்பாடியின் டெல்லி பயணம்'' என்கிறார்கள்.
டெல்லியில் எண்ணிக்கையும் தொகுதிகளையும் இறுதி செய்து விட்டு, மார்ச் 6-ந்தேதி கூட்டணிக்கான தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அதனை ரிலீஸ் செய்ய திட்டமிடுகிறார் எடப்பாடி. ஆனால், அவ்வளவு எளிதாக இதனை நடக்க பாஜக விட்டுவிடுமா? என்கிற கேள்வி அதிமுகவினரிடம் எதிரொலிக்கச் செய்கிறது.
தேர்தல் ஆணையம்
இதற்கிடையே, டெல்லியில் அமித் சாவை சந்திக்கும் போது சில கோரிக்கைகள் வைக்கவும் திட்டமிட்டுள்ளாராம் எடப்பாடி. குறிப்பாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும்.
2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் பெரும் மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) விதியின் பேரில், மாவட்ட ஆட்சியர்கள் உட்பட பல முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் கெடு விதித்திருந்தது. இதற்கான காலக்கெடு வரும் பிப்ரவரி 27-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தலைமைச் செயலாளர் முருகானந்தம் இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த டி. சினேகா, ஐஏஎஸ், தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த எஸ். மாலதி ஹெலன், ஐஏஎஸ், பதவி உயர்வு பெற்று அதே மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ளார்.
கரூர் மாவட்டம்: பொன்னேரி சார் ஆட்சியராக இருந்த கே. ரவிக்குமார், ஐஏஎஸ், கரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுவாக தேர்தலுக்கு முன், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் மாற்றப்படுவது இயல்பாக நடக்கும். ஆனால், இந்த உயரதிகாரிகளில் யாரெல்லாம் திமுகவின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்கிற ஒரு பட்டியலை தயாரித்து எடுத்துச் சென்றுள்ளார் எடப்பாடி. அந்த பட்டியலை அமீத்சாவிடம் கொடுத்து இவர்களை தமிழகத் தேர்தல் பணியில் ஈடுப்படுத்தக்கூடாது அல்லது வேறு மாநில தேர்தல் பணிகளுக்கு அனுப்பி வையுங்கள் என கோரிக்கை வைக்கவிருக்கிறாராம் எடப்பாடி என்றும் உயர்மட்ட தகவல்கள் கிடைக்கின்றன.
- சிறப்பு நிருபர் எழில்
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications