Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரங்கு அம்மை அறிகுறிகள் என்ன? யாரையெல்லாம் எளிதில் தாக்கும்? பாதுகாப்பாக இருப்பது எப்படி? முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவில் குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அறிகுறிகள் என்ன? யாரையெல்லாம் எளிதில் தாக்கும்? பாதுகாப்பாக இருப்பது எப்படி? என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனாவை தொடர்ந்து உலக நாடுகளை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த இந்த குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் நுழைந்துள்ளது.

இதனால் இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசு அறிவுரைகள் வழங்கி உள்ளது.

Recommended Video

    Monkey Pox.. தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை!

     கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு

    கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு

    இந்தியாவை பொறுத்தமட்டில் கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதி வளைகுடா நாட்டில் இருந்து கேரளா திரும்பிய 35 வயது நபருக்கு குரங்கு அம்மை இருப்பது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமாக உள்ள நிலையில் மத்திய குழு கேரளா விரைந்துள்ளது.

     எல்லைகளில் கண்காணிப்பு

    எல்லைகளில் கண்காணிப்பு

    மேலும் நோய் பரவலை தடுக்கும் வகையில் அவருடன் பயணித்தவர்கள், குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளா-தமிழகம் எல்லைப்பகுதியில் கண்காணிப்பு நடக்கிறது. மேலும் 63 வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதா என்று சோதனை நடத்தப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். அதோடு இதுவரை தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

     குரங்கு அம்மை என்பது என்ன?

    குரங்கு அம்மை என்பது என்ன?

    இந்நிலையில் தான் குரங்கு அம்மை நோய், அறிகுறி பற்றிய விபரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வது அவசியமாக உள்ளது. இதன்மூலம் குரங்கு அம்மை பாதிப்பில் இருந்து ஒவ்வொருவரும் தப்பித்து கொள்ள முடியும். குரங்கு அம்மை என்பது ஒருவகையான அம்மை நோய். இது வைரசில் இருந்து பரவுகிறது. சின்னம்மை, பெரியம்மை நோய் போல குரங்குகளிடம் இருந்து பரவிய அம்மை நோய் முதன் முதலில் ஆப்பிரிக்கா நாடுகளில் பரவியது.

    அறிகுறிகள் என்ன?

    அறிகுறிகள் என்ன?

    இந்நிலையில் தான் இந்த ஆண்டு ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் குரங்கு அம்மை நோய் பரவல் துவங்கியது. இந்த நோய்க்கு உடல் தளர்ச்சி, காய்ச்சல், உடல் முழுவதும் கொப்பளங்கள், நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, உடல் சோர்வு, தொண்டை புண், இருமல், கண்வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, வலிப்பு, மூச்சு விடுவதில் சிரமம், இடுப்பு வலி உள்ளிட்டவை அறிகுறிகளாக அறியப்பட்டுள்ளன.

    யாரை எப்படி பாதிக்கும்?

    யாரை எப்படி பாதிக்கும்?

    இந்த அறிகுறிகளுக்கு பிறகு குரங்கு அம்மை நோயானது ஆறு முதல் 13 நாட்களில் தீவிரமடையலாம். அப்போது கொப்புளங்கள் அதிகரிக்கலாம். இந்த நோய் 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கலாம் என சுகாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். குரங்கு அம்மை நோய் அனைத்து வயதினரையும் தாக்கும் தன்மை கொண்டுள்ளது. இருப்பினும் ஊட்டசத்து குறைபாடு, இணைநோய் பாதிப்பு கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரின சேர்க்கை வைத்து கொள்ளும் நபர்கள் எளிதில் நோய் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என கூறப்படுகிறது.

    உஷாராக இருக்க அறிவுரை

    உஷாராக இருக்க அறிவுரை

    இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதோடு வளர்ப்பு பிராணிகள் உள்பட விலங்குகளிலும் இருந்து விலகி இருக்க வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுதல், மூக்கு, வாய் பகுதிகளை அடிக்கடி தொடாமல் இருத்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றலாம் என ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+