அப்படியே காலில் விழுந்து! உருக்கமாக கிசுகிசுத்த சசிகலா! உறைந்து பார்த்த நிர்வாகிகள்.. என்னாச்சு?
சென்னை; அரசியல் சுற்றுயப்பயணம் மேற்கொண்டு இருக்கும் சசிகலா தஞ்சாவூர் செல்லும் வழியில் வரிசையாக பல்வேறு கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார். நேற்று காலை இவர் தனது இரண்டாம் கட்ட அரசியல் பயணத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக அதிமுக கட்சி ஆடிப்போய் இருக்கும் நிலையில், தோல்வியை பயன்படுத்தி எப்படியாவது அதிமுகவில் மீண்டும் நுழைந்துவிட வேண்டும் என்று சசிகலா தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார். இதற்காக அடுத்தடுத்த சுற்றுப்பயணங்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 4ம் தேதிதான் சசிகலா தூத்துக்குடி, திருச்செந்தூர், நெல்லை ஆகிய பகுதிகளுக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்தினார்.

இரண்டாம் கட்ட பயணம்
அதோடு அதிமுகவை கைப்பற்றும் விதமாக சசிகலா ஓ பன்னீர்செல்வம் தம்பி ஓ ராஜாவை சந்தித்தார். இதையடுத்து ஓ ராஜாவை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் நீக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இரண்டாம் கட்ட சுற்றுப்பயணமாக தஞ்சாவூர் புறப்பட்டார் சசிகலா. சாலை மார்க்கமாக செல்லும் அவர் வழியில் பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார். மிக நீண்ட பயணமாக அவர் இதை திட்டமிட்டுள்ளார்.

வழிபாடு
இந்த பயணத்தின் போது சசிகலா செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரிக்காத்த ராமர் கோயிலில் நீண்ட நேரம் வழிபாடு நடத்தினார். அங்கு சிறப்பு பூஜை நடத்தி, சாமி பெயரில் அர்ச்சனை செய்தார். அதை தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலிலும் வழிபாடு செய்தார். இங்கும் அவர் சிறப்பு அர்ச்சனை செய்தது குறிப்பிடத்தக்கது. இடையில் தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோயில் சென்றவர் அங்கே சில நிமிடங்கள் அமர்ந்து வழிபாடு செய்தார்.

விநாயகர்
ஜெயலலிதா, சசிகலா இருவருக்கும் விருப்பமான கடவுள் விநாயகர். அதோடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆறுக்கும் விநாயகர் விருப்பமான கடவுள். ஒரு காலத்தில் எம்ஜிஆர் சென்னை வெள்ளத்திற்கு இடையே போட்டில் போய் விநாயகர் கோவில் ஒன்றில் வழிபட்டது எல்லாம் வரலாறு. அதேபோல் சசிகலா, ஜெயலலிதா ஆகியோரும் போயஸ் கார்டனில் உள்ள விநாயகர் கோவிலில் அடிக்கடி வழிபடுவது வழக்கம். அதேபோல் நேற்று தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோயிலில் அவர் வழிபாடு செய்தார்.

வேறு எங்கு சென்றார்
பின்னர் திருவக்கரை வக்கிர காளியம்மன் கோயிலில் இதே போல அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார். அடுத்ததாக மயிலம் முருகர் கோவிலும் அவர் வழிபாடு நடத்தினார். வரிசையாக எல்லா கோவிலிலும் சசிகலா அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார். சில இடங்களில் சாமி பெயரிலும், சில இடங்களில் தன்னுடைய பெயரிலும் இவர் அர்ச்சனை செய்துள்ளார். சசிகலா செல்லும் வழியில் எல்லாம் அதிமுக நிர்வாகிகள் சிலர் அவரை சந்தித்தனர்.

சந்திப்பு
அவரை கோவிலுக்கு உள்ளேயும், வெளியிலும், சாப்பிட ஓய்வு எடுக்கும் போதும் நிர்வாகிகள் சிலர் சந்தித்தனர். இந்த நிலையில்தான் மயிலம் பொம்மபுர ஆதினத்தின் இருபதாம் பட்ட சிவஞான பாலைய சாமியை சந்தித்ததும் சசிகலா கிட்டத்தட்ட கண்ணீரே விட்டுவிட்டார். மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்ட அவர் அப்படியே ஆதீனம் காலில் விழுந்து சில நொடிகள் ஆசி பெற்றார். பின்னர் அவர் காதில் எதோ சொல்லி.. அருள் கேட்டார். ஆதீனமும் அவருக்கு அருள் வழங்கினார். சசிகலாவை சுற்றி இருந்த சிலர் இதை வியந்து பார்த்தனர்.

அருள் ஆதீனம்
சசிகலா இந்த நிகழ்வு நடந்த போது கொஞ்சம் உருக்கமாக காணப்பட்டார். தஞ்சாவூரில் டெல்டா மாவட்ட தலைவர்களை சசிகலா சந்திக்க உள்ளார். அதன்பின் 20 ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள விளார் கிராமத்திற்கு சென்று நடராஜனின் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார். பின்னர் அங்கிருந்து அப்படியே சேலத்திற்கு நேராக செல்லும் திட்டத்தில் சசிகலா இருக்கிறார். இந்த பயணத்தில் சசிகலாவை சந்தித்த சில அதிமுக தலைகள் மீது அதிமுக இரட்டை தலைமை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று தகவல்கள் வருகின்றன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications