வீடும் இல்ல..தின்பண்டமும் இல்ல..ஏட்டில் எழுதி வைக்கப்பட்ட ஜாதிகள் இல்லையடி பாப்பா! தீர்வே கிடையாதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் தலித் மக்களுக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் வாடகைக்கு வீடு கொடுப்பதில்லை, என பகிரங்கமாக பேசும் பெண்மணி பேசுவதும், குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் கூட தர முடியாது என விரட்டியடிக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன என கேள்வி எழுந்துள்ளது.

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதி பாடிச் சென்ற பாரதி, ஜாதியை ஒழிக்க இறுதி மூச்சு வரை பாடுபட்ட பெரியார் ஆகியோர் வாழ்ந்த தமிழ் மண்ணில் ஆண்டுதோறும் அவர்கள் பிறந்தநாளில் அவர்கள் நினைவு கூறுகிறோம்.

ஆனால் அவர்கள் காட்டிச் சென்ற வழிகளை நாம் பின்பற்றுகிறோமா? என கேட்டால் அது கேள்விக்குறி தான். அந்த அளவுக்கு சமூகம் மாற நினைத்தாலும், அதன் அங்கத்தினர்களான மக்கள் மாறத் தயாராக இல்லை. இல்லையேல் மாற அனுமதிக்கப்படுவதில்லை.

நவீன தீண்டாமை

நவீன தீண்டாமை

தமிழகம் முழுவதும் பல்வேறு சமுதாயத்தினரும் வாடகைக்கு குடியேறி வரும் நிலையில், சில இடங்களில் நவீன தீண்டாமையாக குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வீடு தருவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக கிருஸ்தவ, இஸ்லாமியர் தாழ்த்தப்பட்ட மக்கள் வீடு கேட்டு சென்றால், வீட்டின் உரிமையாளர்கள் ஜாதி கேட்டு தாழ்த்தப்பட்ட, கிருஸ்த்துவ மற்றும் இஸ்லாமியர்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுத்துள்ளனர்.

வீடு இல்லை

வீடு இல்லை

ஒட்டன்சத்தில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளரான பெண்மணி ஒருவர் தாழ்த்தப்பட்டவர்களுக்கெல்லாம் வீடு தரமாட்டோம் என பேசும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், தங்கள் வீடுகளை வாடகைக்கு கொடுத்தால் தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் கெட்டுப் போவார்கள் என பகிரங்கரமாக பேசியிருக்கிறார்.

இதுவே தீர்வல்ல

இதுவே தீர்வல்ல

வீடு தர மறுக்கும் பெண் ஒருவர் பேசும் வீடியோ தற்பொழுது சமூக வளைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்து வருகிறது. இதேபோல் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளிக் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் கூட தரமறுத்த சம்பமும் , அவர்களை கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை சரி தான் என்றாலும், இதுவே தீர்வல்ல.

கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

பள்ளி மாணவர்கள் விரட்டப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடைவிதித்து தென் மண்டல ஐஜி நடவடிக்கை எடுத்துள்ளார். முதல் முறையாக இந்த சட்ட வாய்ப்பை பயன்படுத்துகிறது தமிழ்நாடு காவல்துறை . பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றங்களை புரியும் குற்றவாளிகளை சில காலங்களுக்கு அவ்விடத்தை விட்டு வெளியேற்ற கூடிய சட்ட பிரிவு (Externment provision) வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ளது. மேற்படி சமூக ஒடுக்குமுறையை தடுக்கவும், தொடர்ந்து பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அச்சட்டப்பிரிவை இவ்வழக்கில் பயன்படுத்த உள்ளதாக தென்மண்டல காவல்துறை தலைவர் ஆஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

மாற்றம் அவசியம்

மாற்றம் அவசியம்

ஆனால் இவை தான் தீர்வா என்றால் நிச்சயம் இல்லை. தீண்டாமையோ சாதியோ அது நம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. இந்தச் சமூகத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் ஊடுருவி ஒரு ஆற்ற முடியாத புண்ணாக புரையோடி இருக்கும் சாதி தீண்டாமையை வேரறுக்க வேண்டியது மிகவும் அவசியம். சட்டத்தாலோ காவல்துறையாலோ சாதி தீண்டாமையை அவ்வளவு எளிதில் ஒழித்து விட முடியாது. அப்படி இருந்திருந்தால் அது எப்போது ஒழிக்கப்பட்டிருக்கும். உண்மையில் மாற வேண்டியது மக்கள்தான். தற்போது இல்லை என்றாலும் இளைய சமுதாயம் நினைத்தால் நிச்சயம் சாதியையும் தீண்டாமையும் மண்ணை விட்டு அகற்ற முடியும் என்பதே உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+