அஜித் குமார் வயிற்றில் இருந்தது என்ன? கேட்கவே பதறுதே.. பிரேத பரிசோதனை அறிக்கையில் ஷாக்!
சென்னை: திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. மரணத்திற்கு முன் மிக மோசமாக போலீசார் மூலம் அவர் கொடுமைப்படுத்தப்பட்டது அம்பலம் ஆகி உள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் 12 சிராய்ப்புகள், பெரும்பாலும் மேல் உடலில், மற்றும் தலை முதல் கால் வரை 44 காயங்கள் இருந்தன. இந்த காயங்கள் 9 செ.மீ முதல் 23 செ.மீ வரை நீளமாக இருந்தன. மேலும் அவை தசை ஆழம் அல்லது எலும்பு ஆழம் வரை சென்று, பல்வேறு திசைகளில் ஒன்றுடன் ஒன்று கலந்திருந்தன.

- இடது கையில் 3 இடங்களில் சிகரெட் சூடு
- மூளையில் இரு இடங்களில் ரத்தக்கசிவு
- மண்டை ஓட்டின் இரு பக்கங்கள், நடுமண்டை, தலைப்பகுதி முழுவதுமாக கட்டையால் அடித்த காயம்
- வெளியானது அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை
- நாக்கைக் கடித்ததை போன்ற நிலை; தலையில் அடிபட்டதால் வலிப்பு
- கண்கள் சிவந்து வீங்கியுள்ளன; காதுகளில் ரத்தக்கசிவு
- உடலில் 6 பெரிய காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன; மொத்தமாக உடலில் 50-க்கும் மேற்பட்ட காயங்கள்
- இதயத்தில் இரு இடங்களில் ரத்தக்கசிவு
- கல்லீரலில் ரத்தக்கசிவு ஆகியவை அவருக்கு ஏற்பட்டு உள்ளன.
கடுமையாக தாக்கி உள்ளனர்
லத்தி போன்ற பொருளினால் ஏற்பட்ட காயங்கள் அதிகப்படியாக உள்ளன. 50க்கும் மேற்பட்ட காயங்களில், 45 ஆழமான காயங்கள் இருந்தன. வலி, இரத்த இழப்பு அல்லது காயம் காரணமாக மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கடுமையானதாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். மேலும், இடது வென்ட்ரிக்கிளின் பின்புற சுவரில் பெடெக்கியல் ரத்தக்கசிவுகள், இதயத்தின் உச்சியில் 3 x 1.5 செ.மீ பாதிக்கப்பட்ட பகுதி, குறுகிய கரோனரி ஆஸ்டியா மற்றும் பெருநாடியின் வேரில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளன. இதெல்லாம் அவரின் மரணத்திற்கு காரணமாகி உள்ளது.
வயிற்றில் 220 மில்லி பழுப்பு நிற திரவம் மற்றும் 100 கிராம் பார்ஷியலி செரித்த அரிசி இருந்தன. ஆனால் பெரிய குடல் காலியாக இருந்தது. இதனால் அவர் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்திருக்கலாம். காயங்களின் அமைப்பு ஒரே பகுதிகளில் பலமுறை தாக்கப்பட்டதை காட்டுகிறது. இது ஒரு மிருகத்தனமான தாக்குதலைக் குறிக்கிறது. இளைஞர் அஜித் குமாரின் கஸ்டடி மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளது. அரசின் இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அஜித் குமாரின் இந்த மரண வழக்கில் இரண்டு விதமான விசாரணைகளை சிபிஐ மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்புவனம் காவல் மரண வழக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற காவல் மரண வழக்கு, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குமார் என்ற இளைஞர், விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 5 காவல்துறையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கின் தீவிரத்தை உணர்ந்து, காவல்துறை உயரதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இந்த வழக்கின் விசாரணை சரியாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. அப்போது, அஜித் குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கு ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக அரசின் இந்த அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அடுத்து, சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கான தடையில்லா சான்றிதழை (NOC) தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications