நடுவானில் சக்கரம்! புயலாகிறதா? வானிலையில் என்ன நடக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் தந்த 4 முக்கிய வார்னிங்
சென்னை: தமிழ்நாடு வானிலை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான 4 அப்டேட்களை வெளியிட்டு இருக்கிறார்.
அந்தமான் கடல் பகுதிகளில் வரும் டிசம்பர் 5ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஆனால் இது தாழ்வு மண்டலமாக மாறுமா, புயலாக மாறுமா என்று அறிவிக்கவில்லை.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர்.
2ம் தேதி முதல் 3ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர்.
மேகம் கருக்கும்.. மின்னல் சிரிக்கும்.. சாரல் அடிக்கும்! கீழே “ஹெவி”.. மேலே “லைட்” - வானிலை அப்டேட்

வானிலை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த மாதத்தின் முதல் 14 நாட்கள் மிக கனமழை பெய்தது. தமிழ்நாடு முழுக்க பரவலாக கனமழை பெய்து வந்தது. முதல் மழைக்கு காரணம் - வளிமண்டல மேலடுக்கு சுழற்சி. இரண்டாவது மழைக்கு காரணம் காற்றழுத்த தாழ்வு பகுதி. இதில் முதல் மழை சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஏற்பட்டது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எதிர்பார்த்ததை விட அதிக மழையை கொடுத்தது. அடுத்ததாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

புயல் இல்லை
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை வடக்கு பகுதிக்கு அருகில் இருந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்தது. ஆனால் இது இரண்டும் புயலாக மாறவில்லை. ஏனென்றால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் நிலத்திற்கு மிக அருகில் இருந்தது. கடைசியாக உருவான தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. ஆனால் நிலத்தை அடையும் முன் வலிமை இழந்தது. இதனால் மழையும் இல்லாமல் போனது.

வெதர்மேன்
இந்த நிலையில் தமிழ்நாடு வானிலை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான 4 அப்டேட்களை வெளியிட்டு இருக்கிறார். அதில், 1 - நவம்பர் 27-29ம் தேதிகளில் தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இன்றில் இருந்து அந்த மழை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். .
2- டிசம்பர் 1-4 தேதிகளில் கிழக்கு காற்று மூலம் மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் ஆங்காங்கே கொஞ்சம் மழை பெய்யும்.

நான்கு அப்டேட்கள்
3- டிசம்பர் 8-12 தேதிகளில் சக்கரம் பற்றி பார்க்க வேண்டும். இது இந்தியாவின் வங்கக்கடலுக்கு வருகிறதா, அல்லது சீனாவில் இருந்து கொண்டே இந்தியா பக்கம் வராமல் மடிகிறதா, இது நிறைய மழையை கொடுக்குமா? இதனால் நிறைய காற்று வருமா? போன்ற கேள்விகளுக்கு எல்லாம் வரும் நாட்களில் நேரம் செல்ல செல்ல பதில் கிடைக்கும்.
4- ஆனால் தற்போது Madden Julian Oscillation காரணமாக கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமான நவம்பர் 20-25ல் ஏற்பட்ட 94 B போல "பூட்ட கேஸ்" ஆக இல்லாமல் இது புயலாக மாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதை பற்றி போக போகத்தான் தெரியும் நேற்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.