செங்கோட்டையன்+ ஓபிஎஸ்+ டிடிவி+ சசிகலா.. இணைந்தால் அதிமுகவுக்கு என்னாகும்.. ஒரு அலசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி கொண்டாட்டமாகவும், அதிமுக பாஜக கூட்டணிக்கும் சவாலாக இருக்கும் என்று பல அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதற்கு காரணமாக அவர்கள் கூறுவது அதிமுகவில் ஏற்பட்டு வரும் குழப்பங்கள். ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன்,சசிகலா ஆகியோர் அடுத்தடுத்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், அடுத்ததாக செங்கோட்டையனும் கட்சி பொறுப்பில் நீக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையன்+ ஓபிஎஸ்+ டிடிவி+ சசிகலா இணைந்தால் அதிமுகவிற்கு என்னாகும் என்பதை பார்ப்போம்.

2026 தேர்தல் 2016 தேர்தல் போல் கிடையாது. 2016 தேர்தலில் சரியான கூட்டணி அமைக்காமல் விட்டதால் திமுக தோற்றுப்போனது. ஒருவேளை அன்றைக்கு தேமுதிக, விசிக, கம்யூனிஸ்டுகள், மதிமுக ஆகியவற்றை தன் பக்கம் ஸ்டாலின் இழுத்திருந்தால் அன்றைக்கு திமுக தோற்று போயிருக்க வாய்ப்பே இருந்திருக்காது.ஆனால் அந்த தவறை உணர்ந்த ஸ்டாலின், அதிரடியாக 2019ல் மிகப்பெரிய கூட்டணி அமைத்தார். இதனால் தேனி ஒன்றை தவிர, புதுச்சேரி உள்பட அத்தனை தொகுதியிலும் வென்றது திமுக கூட்டணி.

What will happen to AIADMK if Sengottaiyan OPS TTV Sasikala join hands

வலுவான எதிர்க்கட்சி

இந்த கூட்டணி 2021 சட்டசபை தேர்தலில் தொடர்ந்தது. ஆனால் அதிமுக வலுவாக இறங்கி அடித்தது. கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் சென்னை, டெல்டா, தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஏற்பட்ட பெரிய தோல்வியால் அதிமுக ஆட்சியமைக்க முடியாமல் போனது. 10 வருடம் ஆட்சியில் இருந்தும், 65 இடங்களில் வென்று வலுவாக எதிர்க்கட்சியாகவே அதிமுக வந்தது. வெறும் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளில் தான் அதிமுக ஆட்சியை பறிகொடுத்தது.

அமமுகவே காரணம்

2021 சட்டசபை தேர்தலில் , 40 தொகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளால்தான் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில் 21 தொகுதிகளில் டிடிவி தினகரனின் அமமுகவே தோல்விக்கு காரணமாக இருந்தது. கமல் ஹாசனின் கூட்டணியும் கணிசமான வாக்குகளை பறித்தது. ஒருவேளை டிடிவி தினகரன் மற்றும் கமல்ஹாசனை தங்கள் பக்கம் அப்போது அதிமுக கொண்டு வந்திருந்தால் முடிவுகளே மாறியிருக்கவும் வாய்ப்பு உள்ளது.

பாஜக கூட்டணி இல்லாததால் தோல்வி

அதேநேரம் திமுக கிடைத்த எல்லா வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தியது. கூட்டணியை உடையாமல் தடுத்தது. அத்துடன் 2024 தேர்தலில் கமல்ஹாசனையும் தன் பக்கம் இழுத்தது. டிடிவி தினகரனை பொறுத்தவரை அதிமுகவின் ஓட்டுகளை பிரித்ததால், 2024 தேர்தலிலும் பெரிய தோல்வியை அதிமுக சந்தித்தது. 2024 தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி பிரிந்த காரணத்தால் தர்மபுரி, விருதுநகர் உள்பட குறைந்தது 7 முதல் 10 தொகுதிகளில் வெற்றி பறிபோனதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

விஜய் ஏற்படுத்த போகும் தாக்கம்

இந்த சூழலில் 2026 தேர்தலில் நடிகர் விஜய் களம் இறங்கி உள்ளார். அவரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற கருத்து பலரிடமும் உள்ளது. இளைஞர்களின் வாக்குகள் பெரிய அளவில் அவருக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. விஜய் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனாலும், 10 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை வாங்கி, கணிசமான இடங்களை வென்றாலே அது பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் அதிமுகவிற்கு தான் சிக்கலாகும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

தொண்டர்களின் எண்ணம்

எனவே அதிமுக வலிமையாக மாற வேண்டும் என்பது தொண்டர்களின் எண்ணமாகவுள்ளதாம் . அதைப் பிரதிபலிக்கும் வகையில், சசிகலா, ஓபிஎஸ், செங்கோட்டையன் இணைந்து ஒரு பொதுக்குழுவைக் கூட்டி, அமமுகவையும் இணைத்து, இதுவே ஒன்றுபட்ட அதிமுக என்று அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தென் மாவட்டங்களில் பாதிப்பு

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து, செங்கோட்டையனை முன்னிலைப்படுத்தினால், வரும் சட்டப்பேரவை தேர்தலில், தென் மாவட்டங்களில் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்படும் என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.அமமுக ஓபிஎஸ் அணி, செங்கோட்டையன் ஆகியோர் கணிசமான வாக்குகளை பிரிந்தால், அது அதிமுக பாஜக வெற்றியை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே வலுவாக உள்ள திமுகவை வெல்ல, அதிமுக ஒன்றுபட வேண்டியது மிக முக்கியம் என்று பாஜக நினைக்கிறது. அதனால் தான் டிடிவி, ஓபிஎஸ் என எல்லோரையும் ஒருங்கிணைக்க அண்ணாமலையும் தற்போதுள்ள தலைவர் நயினார் நாகேந்திரனும் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

எடப்பாடி எதிர்ப்பது ஏன்

செங்கோட்டையன் இந்த முயற்சியை நேரடியாக கட்சியில் இருந்தபடியே மேற்கொள்ளும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது தலைமைக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி சம்மதிக்கவில்லை என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒட்டுமொத்தமாக பார்த்தால், திமுகவுக்கு சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் ஆதரவு, கூட்டணி பலம் சாதகமாக இருப்பதால், திமுகவை வீழ்த்த அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+