"முக்குலத்தோர்".. இரட்டை இலை முடங்கினால் ஆட்டமே மாறும்! என்னாகும் தெரியுமா? வல்லுனரின் பளீர் கணிப்பு
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்கினால் அடுத்து என்ன நடக்கும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நடக்கும் உட்கட்சி மோதல் இப்போதைக்கு முடிவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. அதிமுகவில் பொதுக்குழுவில் நினைத்தபடியே இடைக்கால பொதுச்செயலாளர் ஆகி எடப்பாடி பழனிசாமி சாதித்துவிட்டார். அதோடு முறையாக தேர்தலை சந்தித்து நிரந்தர பொதுச்செயலாளர் ஆகும் திட்டத்திலும் அவர் இருக்கிறார்.
இதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார். அதோடு உச்ச நீதிமன்ற வழக்கும் நிலுவையில் உள்ளது.

சின்னம் முடக்கம்
இந்த நிலையில் அதிமுக சின்னம் முடக்கம் தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அதிமுகவில் நடக்கும் மோதல் என்பது, தோற்றுப்போன கட்சியில் உள்ள பிளவு. முன்பு ஆளும் அதிமுகவில் ஏற்பட்டதை போன்ற பிளவு இது கிடையாது. இப்போது உள்ளது சொதப்பலாக.. அப்படியே நீண்ட நாட்களுக்கு செல்லும். அதிமுகவில் எல்லோரும் ஒன்றாக இருந்தும் கூட திமுகவை இவர்களால் வீழ்த்த முடியவில்லை. இப்போது மோதல் காரணமாக அதிமுகவில் வாக்கு வங்கி பிரியும். எடப்பாடிக்கு வன்னியர்கள் இடஒதுக்கீடு காரணமாக அவர்களின் வாக்குகள் கிடைக்கும்.

ஜாதி வாக்கு
அதேபோல் கொங்கு வேளாள கவுண்டர்களின் வாக்குகள் கிடைக்கும். 95 சதவிகித கட்சி அவருக்கு ஆதரவாக இருக்கும். 60 எம்எல்ஏக்கள் வரை எடப்பாடி பக்கம் இருப்பார்கள். ஓ பன்னீர்செல்வத்திற்கு மீதம் உள்ளவர்களின் ஆதரவு இருக்கும். ஆனால் சின்னம் மட்டும் முடங்கினால் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவான நிலை ஏற்படும். பொது வாக்குகள் பல ஓ பன்னீர்செல்வம் பக்கம் செல்லும்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வமும், எடப்பாடியும் சமமான ஆட்கள். இருவரும் முதல்வராக இருந்தவர்கள். இதனால் பன்னீர்செல்வத்திற்கும் கட்சியில் வாக்குகள் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. அவருக்கான வேல்யூ வரும் நாட்களில் கூடும். இப்போது எடப்பாடி ஆதரவாளர்கள் அவரை கொண்டாடினாலும் போக போக ஓ பன்னீர்செல்வம் ஆதரவு கூடும். ஒவ்வொரு பகுதியில் இருக்கும் அதிமுக அதிருப்தி ஆட்களை தங்கள் பக்கம் எடப்பாடி இழுப்பார்.

சின்னம் முடங்குமா?
சின்னம் முடங்குமா, முடங்காதா என்று சொல்ல முடியாது. சின்னம் முடங்கினால் ஓ பன்னீர்செல்வத்திற்கு மதிப்பு கூடும். ஓ பன்னீர்செல்வத்தின் அணிக்கு டெல்டா, தெற்கில் ஆதரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட நேரத்தில் எடப்பாடி ஓ பன்னீர்செல்வத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை. முக்குலத்தோர் வாக்குகள், பொது வாக்குகள் ஓ பன்னீர்செல்வத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. வலிமையான ஸ்டாலினை எதிர்க்க இவர்கள் ஒன்றாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
எடப்பாடி சமம்
பன்னீர்செல்வமும், எடப்பாடியும் சமமான ஆட்கள். அவருக்கு பெண்கள் மத்தியில், ஜெயலலிதா ஆதரவாளர்கள் மத்தியில், ஜாதி ரீதியாகவும் வாக்குகள் வரும். இதை புரிந்து கொள்ளாமல் எடப்பாடி ஆதரவாளர்கள் டயலாக் பேசுகிறார்கள். நாளை இவர் கூட்டு சேர்வார்கள். திமுக - மதிமுக கூட்டணி போல இவர்கள் கூட்டு சேரும் காலம் தூரம் இல்லை. பன்னீர்செல்வம் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார், என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்!












Click it and Unblock the Notifications