தீர்ப்பு மட்டும் சாதகமா வரலைனா? பதறியடித்து வீட்டுக்கே ஓடிய டீம்! வேற வழி இருக்கு! கூலாக்கிய ஓபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு நாளை வர உள்ளது. இந்த தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்றாலும் வேறு விதமான பிளான் ஒன்றை ஓ பன்னீர்செல்வம் தரப்பு வைத்து இருக்கிறதாம்.

Recommended Video

    எடப்பாடியை அதிமுகவிலிருந்து நான் நீக்குகிறேன்! ஓபிஎஸ் பரபரஅறிவிப்பு

    அதிமுக பொதுக்குழு நாளை நடக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    ஓ பன்னீர்செல்வம் தொடுத்த இந்த வழக்கில் நாளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை தீர்ப்பளிக்க உள்ளார். இவர் நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளார். 9.15 மணிக்கு பொதுக்குழு நடக்க உள்ளது.

    என்ன உத்தரவு

    என்ன உத்தரவு

    இந்த நிலையில் இந்த தீர்ப்பில் பொதுக்குழுவை நடத்தலாம் என்று உத்தரவு வர அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்படி பொதுக்குழுவை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிவிட்டது. இதனால் அதே தீர்ப்பை உயர் நீதிமன்ற தனி நீதிபதியும் அளிக்க வாய்ப்புகள் உள்ளனர். பெரும்பாலும் இந்த தீர்ப்புதான் வரும் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில்தான் இந்த தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்றாலும் வேறு விதமான பிளான் ஒன்றை ஓ பன்னீர்செல்வம் தரப்பு வைத்து இருக்கிறதாம்.

    தீர்ப்பு

    தீர்ப்பு

    தீர்ப்பு மட்டும் சாதகமாக வரவில்லை என்றால் என்ன செய்வது என்று ஆலோசிக்க நிர்வாகிகள் இன்று காலை ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றுள்ளனர். மனோஜ் பாண்டியன், ஆர்பிசி பிரபாகர், வைத்தியலிங்கம் ஆகியோர் ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கு விரைந்துள்ளனர். நாளை பொதுக்குழு நடக்க உள்ளதே என்ன செய்யலாம் என்று கேட்பதற்காக அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    ஆலோசனை

    ஆலோசனை

    அப்போது பொதுக்குழு நடத்தப்படலாம் என்று தீர்ப்பு வந்தாலும் கவலை இல்லை. அதை எதிர்த்து உயர் நீதிமன்ற 2 நீதிபதி அமர்வு, பின்னர் உச்ச நீதிமன்றம் செல்லலாம். ஏனென்றால் பொதுக்குழுவை சட்டப்படி நடத்த வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றம் சொன்னது. நான் அழைக்காத போது.. அந்த பொதுக்குழு சட்டப்படி நடப்பதாக அர்த்தம் கிடையாது. இது நீதிமன்றத்தில் செல்லாது.

    ஓபிஎஸ் கூல்

    ஓபிஎஸ் கூல்

    அதோடு அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர முடியாது. நேரடியாக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் மட்டுமே நடத்த முடியும். இதை எடப்பாடியே சசிகலா வழக்கில் வாதமாக வைத்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது அவரே எப்படி இடைக்கால பொதுச்செயலாளர் ஆக முடியும். அதற்கு வாய்ப்பே இல்லை. அதுவும் சட்டப்படி செல்லாது.

    நமக்கு எதிராக உத்தரவு

    நமக்கு எதிராக உத்தரவு

    நாளை நமக்கு எதிராக என்ன நடந்தாலும் சட்ட ரீதியாக அதை எதிர்கொள்ள வேண்டும்., என்று ஓ பன்னீர்செல்வம் கூலாக சொல்லி இருக்கிறாராம். அதோடு நம்முடைய பலத்தை நாளை காட்ட வேண்டும். இதற்கு நிர்வாகிகள் அதிக அளவில் களமிறக்கப்பட வேண்டும் என்றும் ஓ பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளனர். நாளை பொதுக்குழு நடக்கும் பட்சத்தில் ஓ பன்னீர்செல்வம் அதில் கலந்து கொள்ள வாய்ப்பு குறைவு, அவரின் ஆதரவாளர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+