சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண்ணசைத்த "லீடர்".. ஓபிஎஸ் பக்கம் அந்த "புள்ளி" வருகிறாராமே..நடுவில் ஆடிட்டர் வேற.. ஒர்க்அவுட் ஆகுமா

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் அடுத்த பிளானை துவக்கி உள்ளாராம்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக விவகாரம் இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில், ஓபிஎஸ் சில முக்கிய அதிரடிகளை தற்சமயம் முடுக்கி விட்டுள்ளாராம்.. இதையடுத்து, எடப்பாடி டீமும் அலர்ட் ஆகி வருகிறது.

அதிகார மோதல் எடப்பாடி - ஓபிஎஸ் தரப்பில் வெடித்துள்ளது.. இதனால், இருவருமே கோர்ட்டை நாடியுள்ளனர்.. கோர்ட்டில் இது தொடர்பான விவாதங்கள் நடந்து முடிந்த நிலையி்ல், இன்னும் எந்தவிதமான தீர்ப்பும் வரவில்லை..

எப்படியும் நீதிமன்ற தீர்ப்பு தமக்கு சாதகமாக வரும் என்பதால், கட்சியை அப்போது சசிகலாவிடம் ஒப்படைப்பேன் என்றும் நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம் ஓபிஎஸ்..மற்றொருபுறம், அதேசமயம், எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு மூலமாக பல வழிகளில் நெருக்கடிகளை உருவாக்கிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளாராம் ஓபிஎஸ்..

'கோவை குண்டு வெடிப்பு’ பாஜக பேரணியில் சர்ச்சையான முழக்கம்! பாஜகவினர் 7 பேர் மீது வழக்குப் பதிவு! 'கோவை குண்டு வெடிப்பு’ பாஜக பேரணியில் சர்ச்சையான முழக்கம்! பாஜகவினர் 7 பேர் மீது வழக்குப் பதிவு!

 ஷாக்கிங் பிளான்

ஷாக்கிங் பிளான்

அதாவது பொதுச்செயலாளர் சசிகலா, துணைப்பொதுச் செயலாளர் ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் கவுரவப்பதவி, கொங்குவில் உள்ள சீனியர்களுக்கு டாப்மோஸ்ட் பதவி என பல பிளானில் உள்ளாராம் ஓபிஎஸ்.. இவ்வளவையும் நடக்க போகும் பொதுக்குழுவில் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் இந்த பொதுக்குழு எப்போது என்றுதான் தெரியவில்லை.. போட்டி பொதுக்குழு இதுவென்பதால், எடப்பாடிக்கு ஒரு ஷாக் தர வேண்டும் என்று நினைக்கிறாராம்.. ஆனால், எடப்பாடிக்கு உள்ள நிர்வாகிகளின் ஆதரவு ஓபிஎஸ்ஸுக்கு இல்லை என்பது யதார்த்தமான உண்மை..

 ஓவர் நம்பிக்கை

ஓவர் நம்பிக்கை

பொதுக்குழுவை கூட்டினால், இதில் தன்னுடைய ஆதரவாளர்களாக எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்பதும் தெரியவில்லை.. இப்போதைக்கு மிக குறைந்த அளவு நிர்வாகிகளே ஓபிஎஸ் பக்கம் உள்ளதால், இந்த பொதுக்குழுவை கூட்டிவிட்டால், அது தனக்கே பாதகமாகிவிடும் என்றும் யோசிக்கிறாராம்.. எனவேதான், இந்த பொதுக்குழு தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதாக தெரிகிறது.. அதனால், பொதுக்குழுவை கூட்டுவதற்கு முன்பு, மாவட்ட ரீதியாக பொறுப்பாளர்கள், நிர்வாகிகளை நியமித்து, அவர்களுக்கான வேலைகளையும் பிரித்து தந்தால், களப்பணி விறுவிறுப்பாக நடக்கும் என்று ஓபிஎஸ் டீம் நம்புகிறதாம்..

டாஸ்க்

டாஸ்க்

எனவே, இந்த மாதத்திற்குள் பொதுக்குழு நடக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள்.. அதேசமயம், இந்த பொதுக்குழுவை கூட்டுவதற்குள், எடப்பாடி டீமில் இருப்பவர்களுக்கும் வலையை வீசி, தங்கள் பக்கம் இழுத்து வரும் டாஸ்க்கும் தரப்பட்டுள்ளது.. அந்தவகையில், ஒரு முன்னாள் பெண் அமைச்சர் ஓபிஎஸ் பக்கம் வரக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.. இது எடப்பாடி தரப்புக்கு கடுப்பை ஏற்படுத்தி வருகிறது..

ஆடிட்டர்

ஆடிட்டர்

இன்னொரு தகவலும் வட்டமடிக்கிறது.. அதிமுக பொதுக்குழு தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும், மற்றொரு தரப்பு அப்பீலுக்கு போக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் யாருக்கு சாதகமாக தீர்ப்பை சொல்லப்போகிறதோ என்ற எதிர்பார்ப்புதான் அதிகமாக ஏற்பட்டுள்ளது.. இது விஷயத்தில் ஓபிஎஸ், தனக்கு நெருக்கமான ஆடிட்டர் ஒருவர் மூலம் டெல்லி மேலிடத்திற்கு அழுத்தம் தந்து வருவதாக தெரிகிறது.. ஆனால், டெல்லி எந்த முடிவையும் இதில் எடுக்கவில்லையாம்.. எனினும், நீதிமன்ற உத்தரவும் சரி, தேர்தல் ஆணைய உத்தரவும் சரி, இரண்டுமே தங்களுக்கு சாதகமாக வரும் என்று காலரை தூக்கிவிட்டு சொல்கிறார்கள் ஓபிஎஸ் டீம்.. அடுத்து என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!

English summary
When does OPS hold General Committee meeting and whats his next plan எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் அடுத்த பிளானை துவக்கி உள்ளாராம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X