சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பணியுதா" பாஜக.. ஆட்டத்தை கலைத்தாடும் எடப்பாடி.. டக்கென திரும்பி பார்த்த மேலிடம்.. அப்போ அவ்ளோதானா?

எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்த பாஜக மேலிடம் தொடர் முயற்சியை எடுக்கிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து என்ன முடிவெடுக்க போகிறார், ஓபிஎஸ் விவகாரத்தில் என்ன செய்ய போகிறார் என்ற ஆர்வம் எகிறி வருகிறது.. குறிப்பாக பாஜக மேலிடமும் அதிமுகவின் ஒவ்வொரு நகர்வையும் உற்றுநோக்கி வருவதாக கூறுகிறார்கள்.

அதிமுக விவகாரம் முற்றிவிட்ட நிலையில், ஒருமித்த உடன்பாடு இதுவரை ஏற்படவில்லை.. ஆனால், பாஜக அல்லாத கூட்டணியையே, எடப்பாடி தரப்பில் உள்ளவர்கள் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, இன்னும் சொல்லப்போனால், எம்பி தேர்தலின்போதே, பாஜகவை கழட்டிவிட்டு தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி யோசித்திருந்தாராம்..

ஒன்றரை மணி நேரம்.. சடாரென நிர்வாகிகளை அழைத்த எடப்பாடி.. பொதுக்குழு? “முக்கிய முடிவு”.. உடனே ஆக்சன்! ஒன்றரை மணி நேரம்.. சடாரென நிர்வாகிகளை அழைத்த எடப்பாடி.. பொதுக்குழு? “முக்கிய முடிவு”.. உடனே ஆக்சன்!

 செங்கோட்டையன்

செங்கோட்டையன்

இதற்கு காரணம், அப்போதுதான், குடியுரிமை சட்டம், சிஏஏ போன்ற விவகாரங்கள் தலைதூக்கி மக்கள் மனதில் குறிப்பாக சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தி அலை படர்ந்திருந்தது.. எனவே, பாஜகவை தவிர்த்து தேர்தலை சந்திக்க அந்த தேர்தலின்போதே எடப்பாடி முடிவு செய்திருந்தபோது, ஓபிஎஸ் உள்ளே புகுந்து, ஆட்டத்தை கலைத்துவிட்டதுடன், பாஜகவுடன் தான் கூட்டணி என்பதையும் எடப்பாடியை கேட்காமலேயே அறிவித்து விட்டதாக தெரிகிறது. இந்த கோபமும் எடப்பாடி பழனிசாமிக்கு அப்போதே இருக்கத்தான் செய்ததாம்.

 தம்பிதுரை

தம்பிதுரை

சுருக்கமாக சொல்லப்போனால், கடந்த 3 வருட காலமாகவே பாஜக கூட்டணியை விரும்பாமல், மென்று விழுங்கி கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இப்போது ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்க்கும் மனநிலைமைக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.. ஜெயக்குமார், சிவி சண்முகம், கேபி முனுசாமி, தம்பிதுரை, செங்கோட்டையன், பொன்னையன்,போன்றோரும் கிட்டத்தட்ட அதே எதிர்ப்பு மனநிலையில், ஓரணியில் உள்ளதால், இரட்டை இலை இல்லாவிட்டாலும் கூட, அதை சமாளித்துவிட வேண்டும் என்ற முடிவுக்கும் வந்துவிட்டதாகவே சொல்கிறார்கள்.

 அன்வர்ராஜா

அன்வர்ராஜா

கடந்த 3 மாதங்களுக்கு சில செய்திகள் வட்டமடித்தன.. அதாவது, ஓபிஎஸ் அல்லாத கூட்டணிக்கு பாஜக முன்வந்தால் அதை ஏற்க தயார் அல்லது பாஜக இல்லாமலேயே தேர்தலை சந்திக்கவும் தயார் என்பதே எடப்பாடியின் பிளானாக இருந்ததாம். அதுமட்டுமல்ல, அதிருப்தியில் உள்ள அன்வர்ராஜா, கேசி பழனிசாமி, போன்ற சீனியர்களையும் அழைத்து கொண்டு, கட்சியை பலப்படுத்தும் முயற்சியிலும் எடப்பாடி இறங்க போவதாகவும்., மற்றொருபுறம், காங்கிரஸ் நகர்வும் திரைமறைவில் நடந்து வருவதாகவும் அப்போதே கிசுகிசுக்கப்பட்டன..

ஒன்றிணைப்பு

ஒன்றிணைப்பு

ஆனால், பாஜக இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தது.. ஒற்றை தலைமை விவகாரம் முதல், எதையும் கண்டும் காணாமலும், இவர்களை ஒன்றுசேர்க்காமலும் அமைதியாக வேடிக்கை பார்த்தது.. அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று பேட்டிகளை தந்தாலும், ஓபிஎஸ் - எடப்பாடியை ஒன்றுசேர்க்க மறைமுகமான சில முயற்சிகளையும் எடுத்து கொண்டு வந்ததாகவே தெரிகிறது.. ஆனால், எம்பி தேர்தல் நெருங்கி வரும்சூழலில், அதிமுகவை ஒன்றிணைப்பதற்கான முனைப்பில் பாஜக வெளிப்படையாகவே ஈடுபட்டுள்ளது.. ஒருங்கிணைந்த அதிமுகவாக இருந்தால் மட்டுமே, பாஜகவின் வெற்றி ஓரளவு எளிதாகும் என்றும் பாஜக நம்புகிறது.

 சொற்ப வித்தியாசம்

சொற்ப வித்தியாசம்

நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடர வேண்டும் என்பதன் காரணமாகவே, அதிமுக ஒன்றிணைப்பிற்கான அழுத்தத்தை பாஜக கொடுக்க துவங்கி உள்ளதாக தெரிகிறது.. "உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜகவுடனான கூட்டணி முடிந்து விட்டதாக" பொன்னையன் நேற்றைய தினம் கூறியிருந்தது, பாஜகவை கலக்கமடைய செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.. இடைத்தேர்தலில் பாஜக கட்டாயம் போட்டி இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும், அதிமுக பிரிந்து இருந்தால் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடையும் என்ற அச்சமும் பாஜகவிடம் உள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.. எனவே, வரக்கூடிய எம்பி தேர்தலை மனதில் வைத்துதான், எடப்பாடி + ஓபிஎஸின் இணைவுக்கான முயற்சியை தாங்கள் பகிரங்கமாக முடிவெடுத்துள்ளதாகவும் பாஜக தரப்பு தெரிவிக்கிறது.

 சமாதானம்

சமாதானம்

95 சதவீதம் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இவ்வளவு எளிதாக பாஜக மேலிடம் விட்டுவிடாது என்கிறார்கள்.. இதற்காகவே வெளிப்படையான சமாதானத்தை பாஜக மேற்கொண்டுள்ளதாகவும், எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இணைப்பை பாஜக மட்டுமன்றி பிரதமர் மோடியும் உற்று நோக்கி வருகிறார் என்கிறார்கள்.. ஒருவேளை அப்படியும் எடப்பாடி பழனிசாமி சமாதானம் ஆகாவிட்டால், இவர்கள் 2 பேரின் இணைப்பும் அடுத்த 3 மாதத்தில் சாத்தியமாகாவிட்டால், பாஜக அடுத்த கட்ட திட்டமிடலை நோக்கி நகரும் என்றும் பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
When is AIADMK going to unite and What decision is Edappadi Palaniswami going to make
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X