சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கிளைமாக்ஸ்?".. சீனில் திடீரென வந்த பண்ருட்டி ராமச்சந்திரன்.. 3 மேட்டர் இருக்கே.. எடப்பாடிக்கே பிளஸ்

பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுக தலைவர்கள் சந்திக்க என்ன காரணம்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார்? சசிகலாவுடன் ஓபிஎஸ் எப்போது இணைய போகிறார்? இதில் தினகரன் ரோல் என்ன என்பது குறித்த எதிர்பார்ப்புகள் எகிறி வந்த நிலையில், திடீரென அரசியல் புயலாக என்ட்ரி தந்துள்ளார் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்... இனி என்ன நடக்கும்?
அதிமுகவின் மாஜி அமைச்சரான இவர், சென்னை அசோக்நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் சசிகலாவை கடந்த 31-ம் தேதி திடீரென சந்தித்து பேசினார்.

அதேபோல, அதிமுகவின் செயற்குழு கூடவிருக்கும் சூழலில், சில முக்கிய சந்திப்புகளை நடத்தி வரும் ஓபிஎஸ்ஸும், பண்ருட்டி ராமச்சந்திரனை மிக ரகசியமாக நேற்றைய தினம் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது..

ஓபிஎஸ் இப்படி பண்ருட்டியை சந்திப்பது இது முதல் முறை கிடையாது.. பொதுக்குழு விவகாரம் வெடிப்பதற்கு முன்பேயே, கடந்த ஜுன் 23-ம் தேதிக்கு முன்பே பண்ருட்டியை தேடி ஓடினார் ஓபிஎஸ்.. ஓபிஎஸ் - சசிகலா என்ற இரு தலைவர்கள் அடுத்தடுத்து பண்ருட்டியை சந்தித்து பேசியது, அதிமுகவையும் தாண்டி தமிழக அரசியலில் சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது.

வாழ்ந்தா உன்னோடு மட்டுமே.. ஆசை காட்டி 30 லட்சம் சுருட்டிய நடிகை! 2 குழந்தைகள் வேற இருக்காம்! வாழ்ந்தா உன்னோடு மட்டுமே.. ஆசை காட்டி 30 லட்சம் சுருட்டிய நடிகை! 2 குழந்தைகள் வேற இருக்காம்!

அட்வைஸ்

அட்வைஸ்

ஓபிஎஸ் பண்ருட்டியிடம் பேசும்போது, "2011-ல் அம்மா ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் நீங்கதான், அதிமுகவுடன் தேமுதிகவை கூட்டணியில் சேர வைத்ததிலிருந்து நீங்கள் எடுத்த ஒவ்வொரு அடியும், அதிமுகவுக்கு வலிமையை தந்தது.. அன்றைக்கு உருவான கூட்டணி பலம்தான் திமுக ஆட்சியை வீழ்த்தி அதிமுகவை அரியணையில் ஏற்றியது.. இப்போதும் அரசியலில் இருந்து நீங்கள் விலகியிருப்பது அதிமுகவுக்கு இழப்பு.. அதனால் பழையபடி நீங்கள் அரசியல் நடவடிக்கையை தொடர வேண்டும்.. உங்கள் ஆலோசனைகள் கட்சிக்கு தேவைப்படுகிறது என்று ஓபிஎஸ் வெளிப்படையாகவே கேட்டுள்ளதாக தெரிகிறது.

கரைத்து குடித்தவர்

கரைத்து குடித்தவர்

அதேபோல, அதிமுகவின் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளது குறித்து சசிகலாவும் பண்ருட்டியிடம் சில விஷயங்களை பேசியுள்ளதாக கூறப்படுகிறது.. பண்ருட்டியை பொறுத்தவரை அரசியலில் மூத்த தலைவர்.. அதிமுகவின் சட்டவிதிகளை கரைத்து குடித்தவர்.. அதனால்தான், 1977ல் இருந்து 1987 வரை அரசியல் காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு அடுத்தப்படியாக பேசப்படும் அளவுக்கு உயர்ந்திருந்தவர் என்பதையெல்லாம் மறுத்துவிட முடியாது.

விஜயகாந்த்

விஜயகாந்த்

அதேசமயம், ஓபிஎஸ், சசிகலா இருவருமே பண்ருட்டியை தனித்தனியாக சந்தித்து பேசியதற்கு முக்கிய காரணமே, சீனியர் தலைவரான பண்ருட்டியிடம் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்காகத்தான் என்கிறார்கள்.. ஆரம்ப காலத்தில் தேமுதிக மக்களை முழுவீச்சில் சென்றது என்றால், பண்ருட்டியிடம் விஜயகாந்த் பெற்ற ஆலோசனைகளால்தான் என்பதையும் இந்த தமிழகம் அறியும்.. அந்த வகையில்தான், குழப்பமான இந்த சூழலில், பண்ருட்டியிடம் சசிகலா - ஓபிஎஸ் பேச்சு நடத்தி உள்ளனர் என்கிறது ஒரு தரப்பு..

பிரபாகரன்

பிரபாகரன்

மற்றொரு பக்கம், இதுபோன்ற சந்திப்புக்கு ஒரு அரசியல் கணக்கு இருக்கிறது என்கிறார்கள்.. பண்ருட்டியை சந்திக்க செல்லும்போது ஓபிஎஸ் மட்டும் செல்லவில்லை.. கூடவே, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, ஜேசிடி பிரபாகரன் ஆகியோரும் சென்றுள்ளனர்.. இவர்கள் இருவருமே வன்னியர்கள் என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.. இதெல்லாம் பிளான் செய்துதான், அவர்களை தன்னுடன் ஓபிஎஸ் அழைத்து சென்றுள்ளார்.

முகம் - பிரபலம்

முகம் - பிரபலம்

சமீபகாலமாகவே, வன்னியர் சமூகத்தின் ஆதரவை பெறும் வகையில் வன்னியர் சமூக தலைவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சிகளை ஓபிஎஸ் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.. அதனால்தான், ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளின்போது, அவரை பாராட்டியும் ஓபிஎஸ் பேசியிருந்தார்.. ஒரு பிரபலமான வன்னிய சமூகத்தின் "முகம்" அதிமுகவில் இருப்பது கட்சிக்கு பலம் என்று ஓபிஎஸ் நினைக்கிறாராம்..

என்ட்ரி

என்ட்ரி

அதுமட்டுமல்ல, அதிமுகவுக்கு புதிய அவை தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரனை களமிறக்கவும் ஓபிஎஸ் பிளான் செய்வதாக கூறப்படுகிறது. சசிகலாவும் சரி, ஓபிஎஸ்ஸும் சரி, பண்ருட்டி ராமச்சந்திரனை இந்த நேரத்தில் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? பண்ருட்டி ராமச்சந்திரனின் என்ட்ரி, அதிமுகவுக்குள் புதிய மாற்றத்தை தரப் போகிறதா? என்ற எதிர்பார்ப்புகள் ஒருபக்கம் எழுந்தாலும், யதார்த்தங்கள் வேறு மாதிரியாக உள்ளதையும் கவனிக்க வேண்டி உள்ளது...

கண்ட்ரோல்

கண்ட்ரோல்

முதலாவதாக, ஆலோசனை பெற்றுக் கொள்வதற்காகத்தான் பண்ருட்டியை சசிகலா சந்தித்தார் என்பதை ஏற்க முடியவில்லை.. காரணம், ஜெயலலிதாவுக்கே ஆலோசனைகளை தந்து வந்ததுடன், 30 வருடமாக அதிமுக லாபியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் சசிகலா.. இந்த 30 வருட காலத்தில், பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஆலோசனை பெற வேண்டிய தேவை சசிகலாவுக்கு இருந்ததில்லை.. இப்போது சிறையில் இருந்து வெளிவந்து, கட்சியை கைப்பற்ற 2 வருடமாக தன்னந்தனியாகத்தான் முயற்சிகளை எடுத்து வருகிறாரே தவிர, அப்போதும் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் சசிகலா செல்லவில்லை.

எடப்பாடி

எடப்பாடி

சசிகலா நினைத்திருந்தால், விடுதலையாகி வந்துமே, கட்சியை எப்போதோ கன்ட்ரோலில் கொண்டு வந்திருப்பார்.. எடப்பாடியை சமாளிப்பதெல்லாம் அவருக்கு ஒரு விஷயமே இல்லை.. எனினும் அவரது பொறுமைக்கு பின்னால் வேறு சில காரணங்கள் உள்ளதாக தெரிகிறது.. எனவே, பண்ருட்டி ராமச்சந்திரன் என்றில்லை, வேறு யாரிடமிருந்தும் சசிகலாவுக்கு ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு, அதன்மூலம் கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை.

சந்தர்ப்பவாதம்

சந்தர்ப்பவாதம்

இரண்டாவதாக, பண்ருட்டிக்கே இப்போது கட்சிக்குள் பலம் இல்லை... அன்று செல்வாக்கு மிக்கவராக இருந்தார் என்றாலும், இன்றும் அவரது அதே அரசியல் எடுபடுமா என்பது சந்தேகம்தான்.. கிட்டத்தட்ட தோல்வியடைந்த அரசியல்வாதியாகத்தான் அவர் பார்க்கப்படுகிறார்... பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து விட்டதால் சசிகலாவிற்கோ, ஓபிஎஸ்ஸுக்கோ எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை.. இரட்டை தலைமையில் இருந்தபோது, இதே ஓபிஎஸ் பண்ருட்டியை எத்தனை முறை சந்தித்திருப்பார்? இதே சசிகலா எத்தனை முறை சந்தித்திருப்பார்? ஆக, இது ஒரு சந்தர்ப்பவாத சந்திப்பு என்பதைதவிர, வேறு ஒன்றும் இதில் சொல்வதற்கில்லை என்கிறார்கள்.

 பண்ருட்டி

பண்ருட்டி

மூன்றாவதாக, பண்ருட்டியை வைத்து வன்னியர்களுடன் நெருங்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு அவர் பெரிய அளவுக்கான வன்னியர் சமூக தலைவராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவில்லை.. தேர்தல் சமயங்களில் திமுக எப்படி துரைமுருகனை முன்னிறுத்தி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துமோ, அதுபோல்கூட, பண்ருட்டியை வைத்து அதிமுக தலைவர்கள் கடந்த 10 வருட காலத்தில், வன்னிய சமுதாய வாக்குகளை கவர நினைத்தது இல்லை.. கூட்டணியில் உள்ள ராமதாஸ்கூட, பெரிதாக இவரை பற்றி பேசியதும் இல்லை.

சாதி சாயம்

சாதி சாயம்

வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே பண்ருட்டியை அச்சமூக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் சொல்ல முடியாது.. காரணம், இடஒதுக்கீடு பெற்று தந்தபோது, அதே அதிமுகவுக்கு சம்பந்தப்பட்ட வன்னியர்களே பெரும்பாலும் ஓட்டுப்போடவில்லை என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. சமீபகாலமாகவே, கொங்கு & முக்குலத்தோர் என பிரிந்து கிடக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் சாதி அரசியலை அதிமுக கையில் எடுக்கும் போக்கை இனியாவது மாற்றிக் கொள்ள வேண்டி உள்ளது.. பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற சீனியர்களின் ஆலோசனைகளை வேண்டுமானால் பெற்றுக் கொண்டு, கட்சியை பலப்படுத்த முயலலாமே தவிர, மீண்டும் சாதி சாயம் பூசிக் கொள்வது, அக்கட்சிக்கே இழுக்காக அமைந்துவிடும் போல தெரிகிறது.

English summary
Where is AIADMK going and What are OPS and Sasikala's plans with panrutti ramachandran பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுக தலைவர்கள் சந்திக்க என்ன காரணம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X