சூப்பர் சிக்ஸ் சிலிண்டர் எங்கே? அன்னபூரணியில் பாதி பூரணி காணோம்.. தாராபுரத்தில் பண மழையாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர்கள் மேடைகளில் திமுக செய்த திட்டங்களை பட்டியலிட்டுப் படித்துக் காட்டுகிறார்கள்.. ஆட்சி விட்டுப் போய் சில மாதங்கள் ஆன பிறகும் கூட, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி போன்றோர் தங்களது ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த திட்டங்களை வரிசையாக லிஸ்ட் போட்டு பேசுகிறார்கள்.. அதுபோல் தற்போதைய தரப்பில் என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன? என்று கேள்வி எழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்.

சேனல் ஒன்றில் கோடீஸ்வரன் பேசும்போது, "மதுராந்தகத்துக்கு வெளியூர்களிலிருந்து ஆட்களை அழைத்து வந்து தங்க வைத்து, பணத்திலேயே தொகுதியை குளிக்க வைக்கிறார்களாம்.. தாராபுரத்தில் பணத்தை கொட்டுகிறார்களாம்.. தாராபுரம் தொகுதிக்குள் "டிபன் பாக்ஸ் பணம்" விநியோகிக்கப்படுகிறது.

Cash in Tiffin Boxes Dharapuram Vijay

இப்படிப் பணம் செலவு செய்து ஜெயித்துவிட்டு என்ன சொல்ல போகிறார்கள்? ஒரு ரூபாய் கூட நாங்கள் தேர்தலுக்கு செலவு செய்யவில்லை என்பார்கள். இத்தனை விளம்பர பலகைகள், இவ்வளவு செலவுகள் நடக்கிறதே? முதலமைச்சர் தனி விமானம் செல்கிறாரே, இதெல்லாம் யாருடைய பணம்?

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக தலைவர் விஜய் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். விஜய் எளிதில் போய் நின்றாலே அனைவரும் விசில் அடித்து ஓட்டுப் போட்டுவிடுவார்கள் என்று நினைத்தார்... ஆனால் போகுமிடமெல்லாம் வேட்பாளர்களைத் துரத்தி அடிக்கும் அளவுக்கு செல்லும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.. அதனால் இப்போது வேறவழி இல்லாமல் அவரே அடித்து ஆடி ஜெயிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளார். அவர் ரன் அடிப்பாரா அல்லது அவுட் ஆகிவிட்டுப் போவாரா என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்.

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்யபாமா ஏன் அழுகிறார்? தேர்தல் களம் அவருக்கு எவ்வளவு கடினமாக மாறியுள்ளது என்பது இதன்மூலம் தெரியவருகிறது.. தாராபுரம் மக்களுக்கு நல்லது செய்வதற்காக போட்டியிடுவதாக சத்யபாமா சொல்கிறார்.. அப்படியானால் தாராபுரத்து பக்கத்து தொகுதி செழிப்பாக உள்ளதா? தண்ணீர் பிரச்சனை, கரண்ட் பிரச்சனை இல்லையா? கோவை போன்ற போதை கலாச்சாரம் தாராபுரம் சுற்றியுள்ள மாவட்டங்களில் இல்லையா? தாராபுரத்தை தாண்டி வேறெங்கேயும் ஒயின்ஷாப்பில் 20 ரூபாய் வாங்குவது கிடையாதா?

இந்த இடைத்தேர்தலில் தவெக தோற்றால், பாடங்களை கற்று கொள்வார்கள்.. ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால், பொதுமக்களை மிகவும் சாதாரணமாகவும் அலட்சியமாகவும் எடுத்துக்கொள்வார்கள்.. தன்னை பார்த்தால் எப்படியும் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள், நம்மைக் கண்டால் ஆயிரக்கணக்கில் செல்பி எடுக்கிறார்களே, நமக்கு என்ன பயம்?" என்ற எண்ணம் அதிகமாகிவிடும். அதனால்தான் ரோடு ஷோ போன்றவை நடத்தப்படுகிறது.

இந்த ரோடு ஷோ கலாச்சாரமானது திராவிடக் கட்சிகளுக்குப் பொருந்தாது... இது மொழி தெரியாத இடங்களில் மோடி மற்றும் அமித் ஷா பாணியில் செய்யப்படும் தந்திரம் ஆகும். அரை மணி நேரத்தில் 20 கிலோமீட்டரைக் கடந்து டாட்டா காட்டிவிட்டுப் போவதில் என்ன அர்த்தம்? ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆன நிலையில், மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு அங்கே பதில் இல்லை.

திமுக தலைவர்கள் மேடைகளில் திமுக செய்த திட்டங்களை பட்டியலிட்டுப் படித்துக் காட்டுகிறார்கள்.. ஆட்சி விட்டுப் போய் சில மாதங்கள் ஆன பிறகும் கூட, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி போன்றோர் தங்களது ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த திட்டங்களை வரிசையாக லிஸ்ட் போட்டு பேசுகிறார்கள்.. அதுபோல் தற்போதைய தரப்பில் என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன?

தாய்மாமனுக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை எடுத்துக் கொண்டால், பாதி குழந்தைகளுக்கு மோதிரம் இல்லை.. அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றால் மட்டுமே தங்க மோதிரம் என்பதால் பாதி குழந்தைகளுக்குத்தான் மோதிரம் கிடைக்கும்..

திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு லேப்டாப் தந்த ஊரு இது.. லேப்டாப்பிற்கான செலவு என்ன? அப்படியிருக்கும்போது தாய்மாமன் திட்டத்தை ஏதோ பெரிய பிரம்மாண்ட திட்டமா பேசுகிறார்கள்.. பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள், டிவி, பிரிட்ஜ், ஃபேன் போன்ற பல இலவசப் பொருட்கள் முந்தைய ஆட்சி காலங்களில் வழங்கப்பட்டுள்ளன.. ஆடு, மாடுகளையும் தந்தார்களே, அதன் விலை என்ன?

இப்போ சின்னதாக 1 கிராம் மோதிரம் போட்டதுமே, தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி என்று மதுரை, உசிலம்பட்டியே அலறிப்போயிட்டாங்க போல.. இதுக்கு இந்த 5 மாசமாக கம்பு சுத்தறாங்க..

அதேபோல சூப்பர் சிக்ஸ் சிலிண்டரும் இல்லை.. அன்னபூரணி திட்டத்தில "பாதி பூர"ணிதான் வந்துள்ளது.. மிச்சம் 3 சிலிண்டர் பொங்கலுக்கு தருகிறார்களாம். எந்த புரிதலும் இல்லாமல், மற்றவர்களை பார்த்து காப்பி அடித்து திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது தவெக அரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+