தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? எந்த ஊருக்கு போக எங்கே பஸ் ஏறணும்? போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 16 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. எந்த ஊருக்கு செல்ல எங்கிருந்து பேருந்து ஏறவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளவும் ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Diwali 2026

தீபாவளி சிறப்பு பேருந்துகள்

கிளாம்பாக்கம் மட்டுமின்றி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கிண்டி, திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட 16 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் 15,659 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், முன்பதிவு செய்த பயணிகள் சென்னையில் 16 இடங்களில் பேருந்துகளில் ஏறலாம். பயணிகளின் குறைகளை தீர்க்க தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளோம். ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 5ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர்

தீபாவளி விடுமுறை முடித்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சென்னை திரும்ப ஏதுவாக 11,197 பேருந்துகள் இயக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அனைத்து வகை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்து சேவையை செய்துள்ளார்கள். தற்போது அதனை தடுக்க தனி குழு அமைக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் போக்குவரத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்தார்.

சென்னையில் 16 இடங்களில் இருந்து

சென்னை திருவான்மியூர், ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், அடையாறு, பிராட்வே, எழும்பூர், அம்பத்தூர், தரமணி, தீவுத்திடல், கிண்டி, வேளச்சேரி, அசோக் பில்லர், பூந்தமல்லி, சிறுசேரி, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எந்த ஊருக்கு செல்ல எங்கே பேருந்து ஏறவேண்டும்?

1. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் உள்ளே இருந்து இயக்கப்பட உள்ளது.

2. சிஎம்டிஏ காலநிலை பூங்கா அருகில் திறந்த வெளி இடம், கிளாம்பாக்கம் (தற்காலிக பேருந்து நிலையம்)

வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

3. மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையம்: (சோதனை அடிப்படையில்)

கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

4. கோயம்பேடு பேருந்து நிலையம்:

ஈசிஆர் வழியாக காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

5. மாதவரம்:

பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்

இந்த பேருந்துகளில் செல்வதற்கு முன்பதிவு செய்வதற்கு கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்களும், கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்களும், மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் என 14 முன்பதிவு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+