திமுக கூட்டணியில் இணையுது மக்கள் நீதி மய்யம்? கமல் ஹாசன் போட்டியிட போகும் தொகுதி எது?
சென்னை; திமுக கூட்டணியில் இணையும் பட்சத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வர தொடங்கி உள்ளன.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுகளை வேகமாக எடுத்து வருகின்றன. லோக்சபா தேர்தலையொட்டி திமுக- மார்க்சிஸ்ட் இடையே நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே திமுக 2 தொகுதிகளின் பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பாக மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதி எம்பியாக அந்த கட்சியின் ஏகேபி சின்ராஜ் உள்ளார். ஆனால் புதுமுகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று உங்கள் கட்சியிலேயே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எம்பி ஏகேபி சின்ராஜ் வரும் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என கூறியுள்ளார். அதனால் புதுமுகம் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது போக மதிமுகவிற்கு வழங்கப்படும் தொகுதி குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல் கூட்டணி: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர்கள் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்கிறார்கள்.
2024 லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப நாட்களாக தெரிவித்து வருகிறார். அவர் பேசுகிற இடங்களில் எல்லாம் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக முடிந்த அளவு பதிவு செய்து கொண்டே இருக்கிறார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகிவிட்டது என்றும் கூறி உள்ளார்.
இந்திய கூட்டணியில் இணைந்து திமுக தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் லோக்சபா தேர்தலை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாக வரக்கூடிய கருத்து கணிப்பு செய்திகளும் கூட தமிழ்நாட்டில் இந்த இந்திய கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவே வந்து கொண்டு இருக்கிறது.
கோவையில் போட்டி: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளாராம். அதன்படி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசித்த மநீம தலைவர் கமல்ஹாசன், கோவையில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பேசி இறுகிறார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை இந்த வாரம் இறுதியில் கமல்ஹாசன் சந்தித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.அவர் கோவையில் போட்டியிடும் பட்சத்தில் ஏற்கனவே கோவையில் போட்டியிட திட்டமிட்டுள்ள சிபிஎம் கட்சிக்கு வேறு இடம் வழங்கப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.
வேறு தொகுதியா? : கோயம்புத்தூர் இல்லையென்றால் பாரி வேந்தர் தொகுதியில் போட்டியிட்ட பெரம்பலூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தென் சென்னையை கமல் விரும்பினாலும்.. அங்கே மீண்டும் தமிழச்சி தங்க பாண்டியன் நிற்க வைக்கப்படலாம் என்கிறார்கள்.
திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் பெரம்பலூர் போட்டியிட்ட எம்பி பாரிவேந்தர் கடந்த சில நாட்களாக திமுகவை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கி பேசி வந்தார். அதோடு இவர் பாஜகவுடன் நெருக்கமும் காட்டி வந்தார். தமிழ்நாட்டில் திமுக 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 38ல் வென்றது.
இதில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி எம்பி பாரிவேந்தர் கூட பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்தார். இவர் என்னதான் ஐஜேகே கட்சியாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் இவர் திமுக எம்பிதான். சமீபத்தில் இவர் பிரதமர் மோடியை நேரடியாக பாராட்டினார். அதோடு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில்தான் கோவையில் மீண்டும் போட்டியிட சிபிஎம் விரும்பும் பட்சத்தில்.. பெரம்பலூர் தொகுதியில் கமல்ஹாசன் இறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதோடு இல்லாமல்.. கமல்ஹாசன் இங்கே வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு, இந்தியா கூட்டணியும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சர் பதவியை கொடுக்க காங்கிரசுக்கு திமுக பிரஷர் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை?












Click it and Unblock the Notifications