Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அமைச்சரவையில் இருந்து 3 பேர் அதிரடி நீக்கம்.. யாரெல்லாம் தெரியுமா? இந்த லிஸ்ட்டை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சரவை நாளை மாலையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் புதிதாக அமைச்சராகும் நிலையில் 6 பேரின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையே தான் நாளை அமைச்சரவையில் இருந்து 3 பேர் நீக்கம் செய்யப்பட உள்ளனர். அவர்கள் யார்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.

தமிழக அமைச்சரவை நாளை மாலை 3.30 மணிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக அரசு சார்பில் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும்தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

tamil nadu cabinet mano thangaraj ginegee ks masthan

அதன்படி உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். கரூர் தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜி, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் எம்எல்ஏவும், தமிழக அரசின் தலைமை கொறடாவுமான கோவி செழியன், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்ட 4 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.

இதில் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் ஆகியோர் ஏற்கனவே அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். சமீபத்தில் அவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் நாளை மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். அதேபோல்
அமைச்சர்கள் பொன்முடி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், ராஜகண்ணப்பன், மெய்யநாதன் ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளன. அதேபோல் நிதிஅமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துறை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது புதிதாக 4 பேர் அமைச்சராகும் நிலையில் 3 பேர் நீக்கம் செய்யப்பட உள்ளனர். அதன்படி தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் கே ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கம் செய்யப்பட உள்ளனர்.

இதில் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்படும் கே ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் தலைமை கொறடா பதவி என்பது வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேவேளையில் ஆவின் விவகாரம், பால் வினியோகம் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் மனோ தங்கராஜிடம் இருந்து அந்த பொறுப்பு பறிக்கப்பட்டு அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.அதேபோல் செஞ்சி மஸ்தான் குடும்ப உறுப்பினர்கள் மீது தொடர்ந்து கட்சி தலைமைக்கு புகார் சென்ற நிலையில் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட உள்ளார்.

தமிழக அமைச்சரவையை பொறுத்தமட்டில் முதல்வர் ஸ்டாலின் உள்பட மொத்தம் 35 பேர் இடம்பெறலாம். தற்போது தமிழக அமைச்சரவையில் 34 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்படும்போது அமைச்சரவையில் 4 இடங்கள் காலியாக இருக்கும். இந்த 4 காலியிடங்களில் தான் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி செழியன், ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் புதிய அமைச்சராக்கப்பட உள்ளனர். நாளை இந்த அமைச்சரவை மாற்றம் நிகழும்போது தமிழக அமைச்சரவை 35 உறுப்பினர்களுடன் முழுவதுமாக நிரம்பி இருக்கும். அதன்பிறகு புதிதாக ஒருவரை அமைச்சராக்க வேண்டும் என்றால் யாராவது ஒருவரை நீக்கம் செய்தால் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+