யார் "2 புள்ளிகள்".. மண்டை காயும் அறிவாலயம்.. உருவாகிறதா திமுக Vs பாஜக?.. அரும்புகிறதா தாமரை?
திமுகவுக்கு செக் வைக்க பாஜக, அதிமுகவின் துணையுடன் புது அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது
சென்னை: திமுகவுக்கு எதிரான புது அஸ்திரத்தை பாஜக கையில் எடுத்து உள்ளது.. அதற்கு உதவியாக அதிமுகவும் உள்ளதாக கூறப்படுகிறது..!
வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி வருகிறது.. அதிமுகவை முந்திக் கொண்டு போகிற வேகத்தை பார்த்தால், தனித்து களமிறங்கினாலும் ஆச்சயரிப்படுவதற்கில்லை என்றும் சொல்கிறார்கள்.
அதிலும் இந்த எம்பி தேர்தலில் 5 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் மாநில தலைமை செயல்பட்டு வருகிறது..

திமுக
இதற்காக, மக்களின் கவனத்தை கவரும் வகையில், தன் பாணி அரசியலை மாற்றி கொண்டுள்ளது.. திமுக, அதிமுக இரு கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது, ஒன்றையொன்றை தாக்கி கொள்வதும், மாநில அரசை கண்டித்து இன்னொரு கட்சி ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதும் வழக்கம். அதைதான் கடந்த சில மாத காலமாகவே அண்ணாமலை கையில் எடுத்துள்ளார்.. அதிலும் தற்போது பிரதமர் வந்துபோனதில் இருந்தே அண்ணாமலை வேறு ஒரு ரூட்டை பிடித்துள்ளாராம்..

ஆதாரங்கள்
அந்தவகையில்தான், திமுகவின் 2 அமைச்சர்களின் ஊழல் புகார் குறித்து அண்ணாமலை வெளிப்படையாக பேசியது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இரண்டு அமைச்சர்களின் ஊழல் ஆதாரங்களை வெளியிடுவேன் என்று செய்தியாளர்களிடம் அண்ணாமலை ஏன் சொல்லி வருகிறார்? உண்மையிலேயே அப்படி 2 பேர் இருக்கிறார்களா? அல்லது வேண்டுமென்றே தமிழக பாஜக கொளுத்தி போடுகிறதா என்று தெரியவில்லை.. ஆனால், இப்படி சொல்வதன் மூலம் திமுக மீதான நல்லெண்ணம் ஓரளவு மக்களிடம் குறையும் என்று நம்பப்படுகிறது.

அதிமுக சைலண்ட்
மற்றொரு பக்கம், அண்ணாமலை சொன்ன வேகத்தை பார்த்தால், அந்த 2 பேர் யாராக இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் திமுகவுக்குள்ளேயே எழுந்து வருகிறது. திமுகவை விமர்சித்து முதல் குரலை கொடுத்துவிடுவதுடன், கையோடு ஒரு ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்து வரும் பாஜகவை, அதிமுகவும் வேடிக்கை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.. அதாவது, பாஜக எடுத்து வைக்கும் அத்தனை முயற்சிக்கும், மறைமுகமான ஆதரவை அதிமுக தெரிவித்து வருவதாகவே கருதப்படுகிறது...

ரிப்போர்ட்
அதற்கேற்றபடி, அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் எழுந்து வரும் நிலையில், அதை சமாளிக்கவே அதிமுகவுக்கு பெரும்பாடாக உள்ளது. அதேசமயம், இந்த முறை பிரதமர் சென்னை வந்தபோது, ஒரு முக்கியமான வேலையையும் அதிமுக மேலிடம் செய்துள்ளது.. அதன்படி, திமுக குறித்த புகார்கள், குறைகளை எல்லாம் லிஸ்ட் போட்டு, அதை மோடியிடமே தந்துவிட்டதாம்.. ஒருபக்கம் அதிமுக திமுக குறித்து ரிப்போர்ட் தரும் அதேசமயத்தில்தான், அண்ணாமலையும் அந்த 2 அமைச்சர்கள் ஊழல் என்று பேட்டியும் தந்துள்ளார்..

திமுக Vs பாஜக
ஆக, திமுக Vs பாஜக என்ற பிம்பத்தை அரசியல் தளத்தில் உருவாக்க அதிமுகவே பாஜகவுக்கு மறைமுகமாக உதவி கொண்டு இருப்பதாகவும் முணுமுணுக்கப்படுகிறது. மற்றொருபுறம், பாஜகவை திமுக இந்த அளவுக்கு விமர்சிக்க விட என்ன காரணம்? அண்ணாமலை சவால் விட்டு கொண்டிருக்கிறார் என்றால், அதற்கு யார் பொறுப்பு? ஏன் அவருக்கு யாருமே பதில் அளிக்கவில்லை? என்ற கேள்விகளும் பரவலாக எழுகின்றன..

அரும்பும் தாமரை
பொதுவாக இலங்கை விஷயங்களில் இதுவரை பாஜக தலையிட்டது இல்லை... அப்பாவி மீனவர்கள் படுகொலை விஷயத்தில்கூட பெரிதாக செயல்பாடுகளை காட்டாத நிலையில், அண்ணாமலை அங்கேயே நேரடியாகவே சென்றுவிட்டு வந்தார்.. அப்போதாவது திமுக விழித்து கொண்டிருக்கலாமே? அடுத்தடுத்த போராட்டங்களை அறிவிக்கும் அளவுக்கு பாஜக செல்லும் நிலையில், திமுக இனியாவது தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்குமா தெரியவில்லை.. ஆனாலும், அதிமுக உதவியுடன் பாஜகவின் "தாமரை" மெல்ல மெல்ல தமிழகத்தில் அரும்பி வந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை..!
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications