அதிமுக அலுவலகத்தை கைப்பற்றிய ஓபிஎஸ்! உள்ளே இருந்து பறந்த போன் கால்.. யாரிடம் பேசினார்? என்ன நடந்தது?
சென்னை: அதிமுக அலுவலகத்தை கைப்பற்றிய ஓ பன்னீர்செல்வம் அங்கிருந்து சில முக்கியமான நபர்களுக்கு போன் செய்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக அலுவலகத்திற்கு வெளியே இதனால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு மட்டும் செயற்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழுவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதிமுக செயற்குழுவில் தற்போது 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

மீட்டிங்
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவது, இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது, ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இந்த 16 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் தற்போது நிறைவேற்றப்பட உள்ளன. இதன்பின் அதிகாரபூர்வமாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்படுவார்.

மோதல்
இன்னொரு பக்கம் அதிமுக அலுவலகத்தை கைப்பற்றிய ஓ பன்னீர்செல்வம் அங்கு ஆலோசனை செய்து வருகிறார். அதோடு அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதன் பின் வாசல் வழியாக வெளியே கொண்டு சென்றனர். பின் வாசல் வழியாக வெளியே வந்து அந்த கோப்புகளை வாகனத்தில் ஆதரவாளர்கள் வைத்தனர். இதை தடுக்க எடப்பாடி ஆதரவாளர்கள் தீவிரமாக முயன்றனர்.

தீவிர முயற்சி
இதனால் எடப்பாடி - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டனர். இந்த மோதல் காரணமாக வன்முறை காடாக மாறியது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம். மோதலுக்கு இடையில் எடப்பாடி படம் இடம்பெற்ற பதாகையை கிழித்து, தீ வைத்து எரித்தனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

கைது
இதையடுத்து அங்கு இருந்த எடப்பாடி ஆதரவாளர்கள் பலர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர். அதோடு சில ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளும் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர். அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் இருக்கும் அதே நேரத்தில்தான் பொதுக்குழு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்தது. பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து தீர்ப்பு வந்தது. இதையடுத்து ஓபிஎஸ் அங்கிருந்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்தார்.

போன் கால்
ஓபிஎஸ்ஸுக்கு அவரின் வழக்கறிஞர் அணி போன் செய்தது. தீர்ப்பு குறித்து போனில் ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்தில் இருந்தபடியே பேசினார். அடுத்து என்ன செய்யலாம், உயர் நீதிமன்ற இரட்டை நீதிபதி அமர்வுக்கு செல்வது, தேர்தல் ஆணையத்திற்கு செல்வது உள்ளிட்ட விஷயங்களை ஓபிஎஸ் போன் மூலம் ஆய்வு செய்தார். இதற்காக அதிமுக விதிகள் மற்றும் கோப்புகள் பல தேவை. இந்த கோப்புகளைத்தான் ஓபிஎஸ் தரப்பு கைப்பற்றி வெளியே எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications