உதயநிதி ஸ்டாலின் கைது பின்னணியில் அந்த நபர் யார்? "10 நாள் உள்ளே வைங்க!" போட்டுடைத்த தராசு ஷ்யாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திடீரென கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவம் மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நடவடிக்கை முற்றிலும் தேவையற்றது என்றும், இதன் பின்னணியில் பெரும் அரசியல் சதித்திட்டம் மற்றும் ஈகோ உள்ளது என்றும் மூத்த பத்திரிகையாளர் தரசு ஷ்யாம் பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

News focus tamil என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள தராசு ஷ்யாம், "அரசியல் மேடைகளில் பேசப்படும் டபுள் மீனிங் வசனங்கள் அல்லது சிலேடைகள் என்பது தமிழ்நாட்டில் காலங்காலமாக நடக்கும் ஒன்றுதான். பெண்ணினத்தையே அவமானப்படுத்திவிட்டார்கள் என்று சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

Udhayanidhi Stalin Tarasu Shyam DMK Tamil Nadu Politics

உதயநிதி ஸ்டாலின்

பெண்ணினம் என்பது வேறு, ஆபாசப் பேச்சு என்பது வேறு. ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயரைச் சுட்டிக்காட்டிப் பேசியதற்காக ஒட்டுமொத்தப் பெண்ணினத்தையுமே இழிவுபடுத்திவிட்டார்கள் என்று கொந்தளிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

அவதூறாகப் பேசினால் அவதூறு வழக்குதான் பதிவு செய்ய வேண்டும். அதை விடுத்து, கலவரத்தைத் தூண்டுகிறார், சதித்திட்டம் தீட்டுகிறார் என்றெல்லாம் கடுமையான கிரிமினல் சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்துவது எப்படி சரியாகும்?

பின்னணியில் யார் அந்த நபர்?

கடந்த வாரம் திறந்த நீதிமன்றத்திலேயே நீதிபதி இலந்திரன் இதைத் தெளிவாகக் கேட்டார். அவதூறு என்றால் அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டியதுதானே, எதற்காகச் சதித்திட்டம் மற்றும் கலவரப் பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள் என்று வினா எழுப்பினார்.

இவையெல்லாம் நீதிமன்றத்தில் நிலைத்து நிற்குமா என்றால் நிச்சயமாக நிற்காது! இந்த வழக்கில் வெற்றி பெற்று அவருக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டும் என்பதற்காக இந்த வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆரம்பகட்டத்தில் அவரை அலைக்கழிக்க வேண்டும், அதாவது இனிஷியல் ஹராஸ்மென்ட் (Initial Harassment) செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே போடப்பட்ட வழக்கு இது.

பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்

1998-ல் கலைஞர் கொண்டுவந்த 'பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்' கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நேரடியாக பாதிக்கப்பட்ட நபர் புகார் அளிக்காத நிலையில், யாரோ ஒருவரின் புகாரின் பேரில் கலவரத்தைத் தூண்டுதல், சதித்திட்டம் போன்ற கடுமையான பிரிவுகளைச் சேர்த்தது சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் நிற்காது. இது வழக்கில் வெற்றி பெற போடப்பட்ட வழக்கு கிடையாது.. மாறாக ஆரம்பகட்ட அலைக்கழிப்பை தருவதற்காகவே போடப்பட்ட இம்மெச்சூர் நடவடிக்கை.

முதலமைச்சர் இல்லத்தில் இரவு நேரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை வரும் என காவல்துறை எச்சரித்ததையும் மீறி, ஆதவ் அர்ஜுன் போன்றவர்களின் அழுத்தத்தால் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதியை சில நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே முதலமைச்சர் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின் கைது

ஆனால், இந்த நடவடிக்கையால் உதயநிதிக்கு வாரிசு அரசியல்வாதி என்ற பிம்பம் மாறி, ஒரு "போராளி" என்ற பொலிட்டிக்கல் மைலேஜ் கிடைத்துள்ளது. மேலும், சட்டரீதியான இந்த அலைக்கழிப்புக்காக உதயநிதி தரப்பில் ₹100 கோடி மான நஷ்ட வழக்கு தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற டெல்டா மாவட்டங்களில் வணிகம் முடங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.. ஆயிரக்கணக்கான போலீசாரை குவித்தது உட்பட அரசுக்கும் தனியாருக்கும் சேர்த்து ₹50 கோடி முதல் ₹75 கோடி வரை பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

"10 நாட்கள் தூக்கி உள்ளே வையுங்கள், அப்போதுதான் புத்தி வரும்" என்று முதலமைச்சர் நினைத்துச் செய்த இந்த நடவடிக்கையால் அரசுக்கு எந்தப் பயனும் நிறைவேறவில்லை.

ஜெயலலிதா கைது சம்பவம்

வரலாற்றைப் பார்த்தீர்களானால், 1996-ல் ஜெயலலிதா அம்மையார் கைது செய்யப்பட்ட போதும் சரி, 2001-ல் கலைஞர் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போதும் சரி, அப்போதைய ஆளுங்கட்சிகளுக்குப் பெரிய அளவில் பின்னடைவே ஏற்பட்டது.

கலைஞரைக் கைது செய்யும் போது முருகேசன் என்ற காவல்துறை அதிகாரி மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். ஆனால், அந்தப் பழிவாங்கும் நடவடிக்கைகளால் ஜெயலலிதா அரசாங்கத்திற்கு எந்தவித அரசியல் லாபமும் கிடைக்கவில்லை. அதன் விளைவாகவே, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் அவர்கள் கொடூரமானத் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.

இப்போது, அரசியல் விமர்சகர்களை விடவும் சாதாரண வாக்காளர்களான பொதுமக்கள் அனைத்து நிகழ்வுகளையும் மிகவும் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்...

பஸ்கள் இயங்காமல், கடைகள் அடைக்கப்பட்டு, அன்றாட வியாபாரம் முடங்கிப் பொதுமக்கள் பட்ட அவதியை வைத்துப் பார்க்கும்போது, இதைப் போன்ற கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்று அரசு அதிகாரிகளே முதலமைச்சரிடம் நிச்சயம் எச்சரித்திருப்பார்கள். அந்த எச்சரிக்கையையும் மீறி இந்தத் தேவையற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றால், அதற்கு முதலமைச்சரின் ஈகோ மட்டுமே முக்கியக் காரணம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+