எடப்பாடி சொந்த மண்ணில்.. ஸ்டாலின் களமிறக்கிய பிரம்மாஸ்திரம்.. எம்பி ஆகும் சிவலிங்கம்.. யார் இவர்?
சென்னை: மாநிலங்களவை தேர்தலில் இந்த முறை சேலத்துக்காரர் ஒருவருக்கு திமுக வாய்ப்பு வழங்கி உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கோட்டையில் இருந்து முக்கிய புள்ளிக்கு எம்பி ஆகும் வாய்ப்பை திமுக வழங்கி உள்ளது.
மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. திமுக வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் போட்டியிட உள்ளனர். 4வது வேட்பாளராக திமுக சார்பில் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட தேர்வாகி உள்ளார்.

வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக நான்கு மற்றும் அதிமுக இரண்டு இடங்களை இந்த தேர்தலில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவைக்கான தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும், அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் வரும் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அன்புமணி ராமதாஸ், தொமுச சண்முகம், சந்திரதேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைய போகிறது
இதில் திமுக சார்பாக வாய்ப்பு பெற்றுள்ள எஸ். ஆர். சிவலிங்கம் (S. R. Sivalingam) தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். அவர் உத்தேச லிஸ்டில் கூட இல்லாமல் சர்ப்ரைஸ் தேர்வாக வந்துள்ளார். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி தொகுதியிலிருந்து இவர் 1989 மற்றும் 1996 தேர்தல்களில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தேர்வானவர். இடையில் 1991 தேர்தலில் இதே தொகுதியில் தோல்வி அடைந்தார். பின்னர் 2001 சட்டமன்ற தேர்தலில் இங்கே கடைசியாக போட்டியிட்டு மீண்டும் தோல்வி அடைந்தார். எம்பி தேர்தலில் 2011ல் இவர் சேலம் தெற்கில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொடர்ந்து திமுகவில் நீண்ட காலமாக இருக்கும் உறுப்பினர் ஆவார். திமுகவிற்காக களத்தில் உழைக்க கூடியவர். ஆடம்பரம் இல்லாதவர்.
இவர் தாக்கல் செய்த சொத்து விவரங்களின் படி இவரின் சொத்து மதிப்பு 1,57,41,590 ரூபாய் ஆகும். 32,92,697 ரூபாய் கடன் உள்ளது. இவர் வைத்துள்ள கார் லோனில் வாங்கியது. அதேபோல் இவர் விவசாயம் செய்வதாக வேட்புமனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் கோட்டையை சேர்ந்த இவருக்கு எம்பி ஆகும் வாய்ப்பை திமுக வழங்கி உள்ளது. கொங்கு மண்டலத்தில் திமுக தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இங்கே பாஜக - அதிமுக கூட்டணியால் மீண்டும் அதிமுக எழுச்சி அடையும் வாய்ப்புகள் தெரிகின்றன. கடந்த சட்டசபை தேர்தலில் இங்கே திமுக பெரிய அளவில் சறுக்கியது. அதிலும் சேலத்தில் கடுமையாக சறுக்கியது. அதோடு எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தில் இருந்து ராஜ்ய சபாவிற்கு யாரையாது எம்பியாக அறிவிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
இதை எல்லாம் மனதில் வைத்தே மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
கமலுக்கு வாய்ப்பு
கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 2 லோக்சபா சீட்டும், 1 ராஜ்யசபா சீட்டும் பெற்றுவிட வேண்டும் என திட்டமிட்டு காய்களை நகத்திய கமலுக்கு, 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கி அவரை சம்மதிக்கவைத்துவிட்டது திமுக.
கடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில், ஒரு லோக்சபா சீட் தருகிறோம் ; உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என கமலிடம் ஆரம்பத்திலிருந்தே சொல்லப்பட்டது. அதை அவர் ஏற்கவில்லை. தனிச் சின்னத்தில் தான் நிற்போம் என ஒற்றை காலில் நின்றார். இதையடுத்து கடைசியில் ராஜ்யசபா சீட்டு வாங்க அவர் சம்மதம் தெரிவித்தார். இந்த நிலையில்தான் 4வது வேட்பாளராக திமுக சார்பில் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட தேர்வாகி உள்ளார்.
-
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications