நைட்டோடு நைட்டாக எடப்பாடி டீமுக்கு பறந்த போன்.. 4 "தலைகளாமே.. ஓபிஎஸ் வச்ச குறியில் மாஜி? ஒரே பரபரப்பு
எடப்பாடி பழனிசாமி தரப்பின் 4 முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ் டீம் பக்கம் தாவி உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: எடப்பாடி பழனிசாமி டீம் கலக்கத்தில் இருப்பதாகவும், மாறாக ஓபிஎஸ் டீம் குதூகலத்தில் திளைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.. என்ன நடக்கிறது அதிமுகவில்?
அப்பீலுக்கு சென்றுள்ளதால், அங்கு வரும் தீர்ப்பு மட்டுமே எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிகாலத்தை முடிவு செய்யக்கூடியதாக உள்ளது..
அன்று நடத்திய பொதுக்குழுவில், அவசரப்பட்டு ஏடாகூடமான தீர்மானங்களை நிறைவேற்றி, இன்று எக்கச்சக்கமான சட்ட சிக்கலில் எடப்பாடி மாட்டிக் கொண்டுள்ளதை மெல்ல மெல்லவே எடப்பாடி உணர்ந்துள்ளதாகவும் தெரிகிறது.

டோஸ் + சண்முகம்
அதனால்தான் ஒருபக்கம் சிவி சண்முகத்தை டோஸ் விட்டுக்கொண்டே, மறுபடியும் வழக்கறிஞர்களுடன் மும்முர ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறார்.. நீதிமன்ற தீர்ப்பு எதுவானாலும், அதை விமர்சிக்காமல், அந்த உத்தரவை அப்படியே ஏற்றுக்கொள்வது என்பது, இயல்பான ஒன்றுதான்.. இதற்கு எடப்பாடி பழனிசாமியும் விதிவிலக்கல்ல.. அதேசமயம், சாதகமாக வந்தால், எடப்பாடியை இனி யாராலுமே எதற்குமே அசைக்க முடியாத சக்தியாக விளங்கக்கூடும்.. ஒருவேளை பாதகமான தீர்ப்பு வந்தால், அதற்கு பிறகு எடப்பாடி என்ன மாதிரியான முடிவெடுக்க போகிறார் என்பதுதான் ரத்தத்தின் ரத்தங்களிடம் கலக்கத்தை தந்து வருகிறது.

க்ரீன் சிக்னல்
ஓபிஎஸ் வேண்டுகோளை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டபோது, இருவரும் இணைந்து செயல்பட இனி வாய்ப்பே இல்லை என்பது திட்டவட்டமாக தெரிந்துவிட்டது.. எடப்பாடி இப்படி நிராகரிப்பார் என்று ஓபிஎஸ்ஸுக்கு முன்கூட்டியே தெரிந்துதான், அவர் மறுப்பு சொன்ன அடுத்த நிமிடமே, "யார் வேண்டுமானாலும் ஒன்று சேரலாம்" என்று கூறி, டிடிவி, சசிகலாவுக்கு அழைப்பை விடுத்தார்.. அதற்கும் பாசிட்டிவ் சிக்னல் கிடைத்துவிட்டது.. ஆனால், ஓபிஎஸ் அழைத்து அவர்கள் இன்னும் அதற்கான முயற்சியை வெளிப்படையாக எடுக்காத பட்சத்தில், திடீரென வேறு ஒரு பக்கத்தில் இருந்து ஓபிஎஸ்ஸூக்கு சிக்னல் கிடைத்திருக்கிறதாம்.

ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்பு வருவதற்கு முன்பிருந்தே, எடப்பாடி தரப்பில் இருந்து ஓபிஎஸ் சில முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து கொண்டிருந்தார்.. அவர்களோ, இழுபறியை நடத்தி கொண்டிருந்தார்களே தவிர, ஓபிஎஸ்ஸுக்கு எந்த பதிலையும் சொல்லாமல் இருந்து வந்துள்ளனர்.. ஹைகோர்ட் தீர்ப்பு வந்ததுமே, ஓபிஎஸ்ஸுக்கு ஓகே சொல்லிவிட்டார்களாம்.. அந்த முக்கிய நிர்வாகிகளில் ஒருசில மாஜிக்களும் அடக்கமாம்.. அத்துடன், சில மாவட்ட செயலர்களும் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

போன் பறந்தது
அவர்களில் 4 பேர் சென்னையில் இருக்கிற மாவட்ட செயலாளர்கள் என்றும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.. இவர்கள் பன்னீர்செல்வம் தரப்பிடம், "நாங்கள் எடப்பாடி டீமில் இருந்தாலும், உங்களுக்கு எதிராக எதுவும் செய்யவிலை.. பேசவும் இல்லை" என்று தன்னிலை விளக்கம் போல் தந்திருக்கிறார்களாம்.. அந்த பேருமே ஓபிஎஸ்ஸுடன் நேரடி தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.. இந்த விஷயம், அன்றைய இரவே எடப்பாடி டீமுக்கு போன்மூலமும் பறந்துள்ளது.. இதை கேள்விப்பட்ட எடப்பாடி பழனிசாமி டீம், கடுப்பிலும் அதிர்ச்சியிலும் இருக்கிறார்களாம்.

தேன்கூடு
பொதுக்குழுவை கூட்டி, எத்தனையோ சட்டரீதியான தவறுகளை எடப்பாடி டீம் செய்திருந்தாலும், ஓபிஎஸ் அடுத்தடுத்து வியூகங்களை மேற்கொண்டு வந்தாலும், தன்னிடம் உள்ள மெஜாரிட்டி ஆதரவாளர்கள் மட்டுமே எடப்பாடி பழனிசாமியின் ஒரே பலமாக இப்போதுவரை இருந்து வருகிறது.. ஆனால், எவ்வளவு ஆதரவாளர்கள் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள் என்பதை நீதிமன்றம் ஒருபோதும் கணக்கில் எடுத்துக் கொள்ளாது.. சட்டத்துக்கு தேவை விதிமுறைகள்தான்.. அந்த விதிமுறைகள் சரியாக இல்லாத பட்சத்தில், நடவடிக்கைகள், உத்தரவுகள் பாயும்.. அவ்வளவுதான்.. எனவே, மெஜாரிட்டி என்ற ஒரு பலமும் எடப்பாடி தரப்புக்கு நீதிமன்றத்தில் சறுக்கலை ஏற்படுத்திவிடும்.. அந்த மெஜாரிட்டி என்ற பலத்தை குறைக்கவே, ஓபிஎஸ் டீமும் களவாடி வருகிறது..!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications