சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கா" எழுத்து விஐபி சிக்குகிறார்?.. ரகசிய விசாரணை நடக்கிறதாம்.. மாதம் ஒரு "குண்டு" போடும் திமுக..!

மாஜி அமைச்சர்கள் வீடுகளில் விரைவில் ரெய்டு நடத்த போகிறார்களாம்

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் களம் ஒருபுறம் சூடுபிடித்து கொண்டிருக்க, அதிமுக - திமுக தரப்பு செய்தி ஒன்று கசிந்து, அதைவிட கூடுதலாக அனலை அள்ளி கொட்டி வருகிறது.

திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடன் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் உடனடியாக யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை... கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடாமல் பழிவாங்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபடுகிறது என்று விமர்சனங்கள் எழும் என்று கருதியதால் அப்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதற்கு பிறகு 2 மாதம் கழித்து மெல்ல தன் வேலையை ஆரம்பித்தது.. இந்த இடைப்பட்ட காலத்தில் அதிகாரிகளுக்கும் முக்கிய உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இமயமலை சாமியார் யார்? சிக்கும் சித்ரா ராமகிருஷ்ணன்.. வருமான வரித்துறை தீவிர ரெய்டு.. பரபரப்பு!இமயமலை சாமியார் யார்? சிக்கும் சித்ரா ராமகிருஷ்ணன்.. வருமான வரித்துறை தீவிர ரெய்டு.. பரபரப்பு!

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

அதன்படி, புகார்களுக்கு உள்ளான சம்பந்தப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் டேட்டாவுடன் ரெடி செய்து வைத்து கொள்ள வேண்டும் என்றும், சட்டரீதியாககூட யாரும் தப்பிக்க முடியாத அளவுக்கு, அவர்களின் ஊழல் விவரங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.. அதாவது, பொய்யான குற்றச்சாட்டினை திமுக அரசு போட்டுவிட்டது என்று சொல்லாத அளவுக்கு, உண்மை தன்மைகளுடன் அத்தனை விவரங்களும் இருக்க வேண்டும் என்று திமுக மேலிடம் வாய்மொழியாக உத்தரவிட்டதாக கூறப்பட்டது.

 முன்னாள் அமைச்சர்கள்

முன்னாள் அமைச்சர்கள்

இதையடுத்து, வருமானவரி மற்றும் காவல்துறை அதிகாரிகளும், முழு ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்தனர். தொற்று குறைந்த பிறகு, மாஜிக்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை சோதனை ஆரம்பமானது.. அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, தங்கமணி, கேசி வீரமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் என பெரும்புள்ளிகள் அடுத்தடுத்து குறி வைக்கப்பட்டனர்.. அதாவது மாதம் ஒரு புள்ளி என்ற ரீதியில் ரெய்டுகள் நடந்தன.. அந்த சோதனைகளில் எல்லாம், கணக்கில் வராத ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது..

 அடுத்தது யார்?

அடுத்தது யார்?

அடுத்து யார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.. அப்போதுதான் ஓபிஎஸ் பெயர் அடிபட்டது.. அதிகாரிகள் தங்கள் கவனத்தை தேனி பக்கம் திருப்ப உள்ளதாக தகவல்கள் கசிந்தது.. ஆனால், கொரோனா மூன்றாவது அலை தொடங்கியதால் இப்போதைக்கு நம்ம பக்கம் திரும்ப மாட்டார்கள் என மாஜிக்கள் சிலர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை தன்னுடைய கடமையை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது.. அந்த துறையின் ரெய்டு பாய்ச்சல், தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாஜிக்களின் பங்களாக்கள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட ரெய்டின்போது கிடைத்த ஆதாரங்களை அலசி ஆராய்ந்து வகைப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.. அடுத்து யார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.. அப்போதுதான் ஓபிஎஸ் பெயர் அடிபட்டது.. அதிகாரிகள் தங்கள் கவனத்தை தேனி பக்கம் திருப்ப உள்ளதாக தகவல்கள் கசிந்தது.. ஆனால், கொரோனா மூன்றாவது அலை தொடங்கியதால் இப்போதைக்கு நம்ம பக்கம் திரும்ப மாட்டார்கள் என மாஜிக்கள் சிலர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை தன்னுடைய கடமையை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது.. அந்த துறையின் ரெய்டு பாய்ச்சல், தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாஜிக்களின் பங்களாக்கள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட ரெய்டின்போது கிடைத்த ஆதாரங்களை அலசி ஆராய்ந்து வகைப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது..

 அடுத்த நபர்?

அடுத்த நபர்?

லஞ்ச ஒழிப்புத்துறை தன்னாட்சி பெற்ற துறையாக இருந்தாலும் அரசின் ஆலோசனைகளுக்கேற்பவே செயல்படும் என்பதால், அரசின் ஒருசில முக்கிய உத்தரவுக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்களாம். இதற்கான உத்தரவு கிடைத்ததும் மாஜிக்கள் மீதான குற்றப்பத்திரிகை ரெடியாகுமாம். இது ஒருபுறமிருக்க, லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த குறி, உணவுத்துறையின் முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது பாயவிருக்கிறது என்கிறார்கள்,.

 பரபரப்பு

பரபரப்பு

அவர் அமைச்சராக இருந்த போது வாங்கிக் குவித்த சொத்துக்கள், அவர் முதலீடு செய்யப்பட்ட இடங்கள் ஆகியவை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்திருக்கிறது.. இது குறித்து ரகசிய விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சில ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளனவாம். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி, மேயர், சேர்மன், பேரூராட்சி தலைவர் தேர்தல்கள் முடிந்து, அவர்கள் பொறுப்பேற்றதற்குப் பிறகு, லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த பாய்ச்சல் அதிரடியாக இருக்கப்போகிறது என்கிறார்கள் சம்பந்தப்பட்ட வட்டாரத்தினர்..!

English summary
Who is the next target and corruption allegations against former ADMK ministers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X