உண்மையில் ‘விவசாயிகளின் முதல்வர்’ யார்? - முழு டேட்டா சொல்லும் உண்மை என்ன?
சென்னை : மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்ற இந்த ஒன்றரை வருட ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளை சைலண்ட் ஆகச் செய்திருக்கிறது வேளாண்துறை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், நெல் உற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவு அடைந்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு விளைச்சலைக் கொட்டிக் கொடுத்திருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே மிகக் கடுமையான பேரிடர்களில், தமிழக விவசாயிகள் சிக்கிச் சிதைந்து கொண்டிருந்தனர். அதுவும் கொரோனா முடக்கம் வந்த பிறகு, மேலும் அந்த நெருக்கடிகள் அதிகமாகின.
ஆனால், அந்தத் தடைகளை அனைத்தையும் உடைத்து மேட்டூர் அணையைச் சரியான பருவகாலத்தில் திறந்து, விவசாய பெருங்குடிகள் வாழ்வில் ஆயிரம் வாட்ஸ் பல்பை எரிய வைத்தார் ஸ்டாலின். அதன் பயனாக, சாகுபடி நிலங்களின் பரப்பளவு கூடியது. உழைத்த உழைப்புக்கான பலனை விவசாயிகள் அடைந்தனர்.

500க்கும் மேற்பட்ட வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்
இன்று விவசாயத்துறை இந்திய அளவில் மிகச் சிறப்பாக நிமிர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தவர் அன்றைய முதல்வர் மு.கருணாநிதிதான். அவரது ஆட்சிக்காலத்தில்தான் விவசாயிகள் நலன் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டது.
1996 முதல் 1997 வரையிலான காலகட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வேளாண்மை கூட்டுறவு வங்கிகளைத் தொடங்கியது திமுக அரசுதான். மேலும் ஊரக வளர்ச்சிக்காகப் பாதுகாப்பு பெட்டக வசதிகளுடன் கட்டடங்கள், விவசாயத் தொழிலாளிகளின் நலன் காக்க ஐஏஎஸ் அதிகாரி கோலப்பன் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்தது என சிலவற்றை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
அந்தக் குழு கொடுத்த அறிக்கையின்படி ஏர் மாடுடன் உழவு செய்யும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் என்றும் ஏர் மாடு இல்லாத தொழிலாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு 54 ரூபாய் கூலி என்றும் அன்றைய ஆட்சிக்காலத்தில்தான் உயர்த்தி வழங்கப்பட்டது. இதே காலத்தில் விவசாய நலவாரியமும் துவங்கப்பட்டது. வறுத்த வேர்க்கடலை, தாவரக்கழிவுகள் வரி 11% லிருந்து 4% ஆகக் குறைக்கப்பட்டது.
தேங்காய் கொப்பரைகளுக்கு வரி 4% லிருந்து 2% ஆகவும் குறைக்கப்பட்டது. இத்துடன் பருத்தி கொள்முதல் வரி 4% லிருந்து 2% ஆக குறைக்கப்பட்டது. ஜரிகை மீதான வரி 8% லிருந்து 2% ஆகக் குறைக்கப்பட்டது. சமையல் எண்ணெய்க்கான வரி 4% லிருந்து வரிவிலக்கு வழங்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் விவசாயக்கடன் தொகைக்கான வட்டி 13% லிருந்து 12% ஆகவும், 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் கடன் தொகைக்கான வட்டியை 16% லிருந்து 13% ஆகவும் குறைத்தார் மு.கருணாநிதி.

பாதை வரி ரத்து
இதைப்போல் யூரியா உரத்திற்கான விற்பனை வரி 4% ஆக இருந்தது 2% ஆகக் குறைக்கவும் செய்தார். இதை எல்லாம் விட விவசாய பெருங்குடி மக்களுக்கு வயது அடிப்படையில் மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தினார்.
வேளாண் தேவைக்காக விவசாயிகள் தங்களின் நிலங்களுக்கு நீர் எடுத்துச் செல்ல நீண்ட தூரம் குழாய் அமைக்க வேண்டி இருந்தது. அப்படி நீர் தேவைக்காக அரசு நிலங்களின் வழியே குழாய் அமைத்தால் அதற்குப் பாதைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இதன் மூலம் வேளாண்மை பெரிதளவில் பாதிக்கப்பட்டது. சரியான வருமானம் இல்லாமல் தவிக்கும் விவசாயிகள், வாழ்நாள் முழுக்க விளைவித்து இறுதியில் முதலுக்கே மோசம் என வாழ்ந்து வருவதை அறிந்த அன்றைய முதல்வர் மு.கருணாநிதி, தனது 2000- 2001 ஆட்சிக்காலத்தில் இந்தப் பாதை வரியை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் தொடக்க வேளாண்மை வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளைத் துவங்கியதும் திமுக ஆட்சிக்காலத்தில்தான். அவை அதிநவீன வசதிகளைக் கொண்ட வங்கிகளுக்கு இணையாகச் செயல்பட்டன. தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கியை மிகச்சிறப்பான முறையில் செயல்படுத்தினார் கருணாநிதி.

உழவர் திருநாளே தமிழர் புத்தாண்டு
தமிழ்நாட்டின் விவசாய வளர்ச்சியை 2006 இலிருந்து 2012 வரை எடுத்துப் பார்த்தால் எங்கும் இல்லாத அளவு வேளாண் உற்பத்தியானது சராசரி உறுதியைவிட அதிக அளவுக்கு உயர்த்திக் காட்டினார்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை சிறு, குறு விவசாயிகள்தான் அதிகம். இது மு.கருணாநிதி நில சீர்திருத்தத்தில் ஏற்படுத்திய புரட்சியால் வந்தது. பெரும் நிலச்சுவன்தார்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அவர்களும் வேளாண் தொழிலைவிட்டு வெளியேறுவதற்கே முயன்று வருகிறார்கள்.
இதன் இன்னொரு பகுதியாகக் கரும்பு விவசாயிகளுக்கு அரவை மின் கட்டணம் இலவசமாக்கப்பட்டது. இதன் உச்சமாக இலவச மின் திட்டம் மற்றும் பொதுவிநியோகத்திற்குப் பயன்படும் வகையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதில் சாதனைப் புரிந்தது.
இந்திய அளவில் கூட்டுறவு வங்களின் கடன் 7விழுக்காடு இருந்தது. 2007இல் தமிழ்நாட்டில் இந்த விழுக்காடு 4 ஆக்கப்பட்டது. 2008இல் 3 ஆக்கியது திமுக அரசு. நேர்மையாகக் கூட்டுறவுக் கடனை திறம்பக் கட்டுபவர்களுக்குச் சலுகையாக 2விழுக்காடு வட்டியைக் கட்டினால் போதும் என்றும் அறிவித்தார் மு.கருணாநிதி.
உழவர் திருநாளைத் தமிழர் புத்தாண்டாக கொண்டாடுவதற்கு திமுக அரசே காரணம். தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்று அறிவித்தவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிதான்.
பண்பாட்டுப் பெருமையை மீட்டுக் கொடுத்த மு.கருணாநிதியின் வழியில் இன்றைய முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். 'தி ரைஸ் எழுமின்' என்ற உலகம் தழுவிய அமைப்பு மொத்தம் 70 நாடுகளில் வசிக்கும் தமிழ் தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து லண்டனில் 'உலக தமிழ் தொழில் அதிபர்கள் மாநாட்டை' நடத்தியது.

122 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி
அதற்கான முன்னேற்பாடு செய்வதற்கான கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "தமிழ்நாட்டில் 63 ஆயிரத்து 125 பேர் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கி உள்ளார்கள்" என்பதைக் குறிப்பிட்டு இருந்தார்.
ஸ்டாலின் ஆட்சியில் நடந்துள்ள மாற்றங்கள் பற்றிப் பேசிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், "தமிழக வரலாற்றில் வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டது முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில்தான். அது மிகப்பெரிய சாதனை என்றே சொல்லவேண்டும்.
அதேபோல் நெல் உற்பத்தியில் கடந்த 46 ஆண்டுக்காலத்தில் தமிழகம் அதுவரை காணாத அளவில் பெரிய அளவு விளைச்சலைப் பெருக்கிக் காட்டி இருக்கிறோம். அதாவது கிட்டத்தட்ட 22 லட்சம் ஏக்கர் அளவுக்கு உற்பத்தி செய்துள்ளோம். 122 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி ஆகியுள்ளது.
அதேபோல் மின்னணு வேளாண் சந்தையில் (இ- நாம்) இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எந்த இடைத்தரகர்களும் இல்லாமல், விவசாயிகளே தங்களின் விளைப்பொருள்களை விற்பனை செய்து இலாபம் பார்ப்பதற்கு இந்தத் திட்டம் உதவி செய்கிறது. அதன் மூலம் தமிழக விவசாயிகள் கடந்த ஆண்டு நல்ல இலாபத்தை ஈட்டி இருக்கிறார்கள் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சம்.

முன்னோடி மாநிலம் தமிழ்நாடு
முதலில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தால் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுக்கால ஆட்சிக்காலத்திற்குள் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகளை விவசாயிகளுக்கு வழங்கி, திட்டமிட்டதைவிட அதிகப்படியான இணைப்புகளை வழங்கி முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிக்காட்டி உள்ளோம். இது இந்திய அளவில் வேறு எந்த மாநிலங்களும் செய்யாத சாதனை.
7,850 கோடி ரூபாய் இலவச மின்சாரத்திற்காக ஒதுக்கி உள்ளோம். இதை முதன்முதலாக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிதான் இந்தியாவிலேயே தொடங்கிவைத்தார். அந்தளவில் இது ஒரு முன்னோடித் திட்டம். அதனை இன்றைய திமுக அரசு தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுசென்று கொண்டுள்ளது.
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தைக் குறிப்பிட்ட வேண்டும். இதன்மூலம் ஒரு ஊராட்சிக்கு ஒரு கோடி என்று கிட்டத்தட்ட 520 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இதன்மூலம் 5 ஆண்டுகளில் வேளாண்மையில் முழுமை பெற்ற மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதைச் செயல்படுத்தி வருகிறோம்.

இந்தியாவிலேயே இரண்டாவது இடம்
அதாவது பயிர் செய்வதற்கே தகுதி இல்லாத நிலங்களைத் தேர்வு செய்து, அதில் போர்வெல் அமைத்து, அதற்கு மின் இணைப்பு மற்றும் இடுபொருள்களை வழங்கி வருகிறோம். அதன் மூலம் விளைச்சல் இல்லாத நிலங்கள் விளைநிலங்களாக மாறிவருகின்றன.
இந்த ஆட்சிக்காலத்தில் பயனாக விவசாயிகளுக்குக் கிடைத்த நல்ல விஷயம்தான் 'உழவன் ஆப்' அதன் மூலம் விவசாயிகள் தங்களின் தேவைக்கான, ட்ராக்டர் வசதி போன்ற உபகரணங்களைக் கேட்டுப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். வேளாண் துறை மூலமாக விவசாயம் சார்ந்த இளைஞர்கள் பிறதொழில் ஈடுபடுத்துவதற்காகக் கடன்களை வழங்கி வருகிறோம். இதில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தை நோக்கி தமிழகம் முன்னேறிக் கொண்டுள்ளது.
ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசுப் பொறுப்பேற்றது முதல் சரியான காலத்தில் மேட்டு அணையைத் திறந்தோம். அணையில் தண்ணீர் 100 அடிக்கு மேல் நீடித்ததால் மே மாதமே குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆகவே அந்த நீர் சரியான பருவகாலத்திற்குள் கடைமடைப் பகுதிகளில் பாய்ந்து, விளைச்சல் பெருகியுள்ளது. முதல்வரே குறிப்பிட்டதைப்போல் தண்ணீர் பற்றாக்குறையே இல்லை என்ற நிலையை இயற்கையின் கொடையால் பெற்றுள்ளோம்" என்கிறார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications