"கவர்ச்சி" அரசியலில் காணாமல் போன சோனாலி.. "பாஜக" கனவு வானில் மின்னி மறைந்த நட்சத்திரம்.. பெருத்த அடி
நடிகை சோனாலி போகத்தின் டிக்டாக் வீடியோக்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்
சண்டிகர்: 41 வயதான சோனாலி போகத்தின் இழப்பு பாஜகவினருக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதுடன், அவரது நினைவுகளையும், டிக்டாக் வீடியோக்களையும் ரசிகர்கள் நேற்று முதல் ஷேர் செய்து வருகிறார்கள்.. யார் இந்த சோனாலி?
2006ல் ஒரு தனியார் டிவியில், நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கியவர்... சோனாலி ஒரு நடிகையும் கூட.
சில டிவி சீரியல்களில் நடித்துள்ளார். அதன்பிறகு, 2019ல் வெப்சீரிஸில் நடித்து, ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று அசத்தினார்.

சோனாலி
டிக் டாக் ஆப் அப்போது மிக பிரபலமாக இருந்த சமயமது.. இந்த ஆப்பை மிக சரியாக பயன்படுத்தி கொண்டார் சோனாலி.. தான் நடித்த பதிவுகளை பதிவிட்டதன் மூலம் தேசிய அளவில் புகழ் பெற்றார்... இந்திப் பாடல்கள் மட்டுமல்லாமல் பல மொழிப் பாடல்களுக்கும் இவர் டிக்டாக் செய்வது இவரது ஸ்பெஷாலிட்டி.. மலையாளம், இந்தி என எல்லா மொழி பாடல்களுக்கும் வாயசைத்து நடித்த டிக்டாக் வீடியோக்களுக்கு தனி ரசிகர் கூட்டம் கிடைத்தது. இந்த வீடியோக்களில், கவர்ச்சியும் இடைஇடையே புகுந்து விளையாடிவிட்டு போகும்.. இதற்காகவே ஏராளமான ரசிகர்கள் நாளுக்கு நாள் பெருகினார்கள்.

ஸ்டார் + மூவ்
இவருக்கு பொதுமக்களிடம் இருக்கும் ஈர்ப்பை கண்டு, பாஜக தேர்தலில் இவரை பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்தது.. வழக்கமாக, கவர்ச்சி அரசியலை நம்பி, பெருவாரியான நட்சத்திர கூட்டங்களை கட்சியில் இணைத்து கொள்வதும், அவர்களை வைத்து பிரச்சாரம் செய்வதும், பாஜகவின் அரசியல் மூவ்களில் ஒன்று.. அதன்படிதான், சோனாலிக்கும் வலையை விரித்தது.. டிக்டாக் வீடியோ செய்து கொண்டிருந்த சோனாலிக்கே இது கொஞ்சம் ஷாக்தான்..

சக்ஸஸ் பார்ட்டி
இதையடுத்து, ஹரியானா சட்டசபைத் தேர்தலில் இவருக்கு வாய்ப்பு தரப்பட்டது.. இந்தியாவிலேயே டிக் டாக் மூலம் பிரபலமான ஒருவருக்கு அரசியல் கட்சி ஒன்று சீட் தருவது இதுவே முதல் முறையாகும்.. அந்த வகையில் பாஜக புதிய சாதனை படைத்தது.. ஆதம்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது.. ஆனால் இவரை எதிர்த்து அப்போது, காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த குல்தீப் பிஷ்னாய் என்பவர் போட்டியிட்டார்..

செம பாப்புலர்
பிரச்சாரமும் களைகட்டியது.. சோனாலியின் ரசிகர்கள் அவருக்கு சீட் கிடைத்ததைக் கொண்டாட ஆரம்பித்தனர்.. இதற்காகவே அவரது டிக்டாக் வீடியோக்களை ஷேர் செய்து வைரலாக்கினர்.. சோனாலியும் உற்சாகமாக தேர்தல் பிரசாரக் களத்தில் குதித்தார்.. சோனாலி தேர்தலில் வெல்கிறாரோ இல்லையோ.. மக்களின் மனதை நிறையவே வென்றுள்ளார். இவர் டிக்டாக் செய்த வீடியோக்கள் ஹரியானாவில் செம பாப்புலர். இப்போதும் கூட அவர் தொடர்ந்து டிக்டாக் செய்து கொண்டுதான் உள்ளார். அதேபோல மக்கள் மனதையும் டிக் செய்து வெல்வாரா என்பது ஹாட்டான எதிர்பார்ப்பாக உள்ளது.

நட்சத்திர வேட்பாளர்
பாஜகவில் சீட் தந்தது பற்றி அப்போது செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தொகுதி மக்களை கவர டிக் டாக் ஆப் மூலமாகவும் பிரச்சாரம் செய்ய போகிறேன், குறிப்பாக தேச பக்தி சம்பந்தமான வீடியோக்களை வெளியிட போகிறேன்" என்று ஒரே போடாக போட்டார் சோனாலி.. மற்ற தொகுதிகளைவிட, சோனாலி பிரச்சாரம் மேற்கொண்ட தொகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.. வீடியோவில் மட்டுமே இத்தனை காலமும் சோனாலியை பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு, நேரடியாகவே சோனாலியை பார்க்க வாய்ப்பு கிடைத்ததால், எங்கெல்லாமோ இருந்து பஸ், வண்டிகளை பிடித்து வந்து ஆர்வம் காட்டினார்கள்..

கவர்ச்சி பாலிட்டிக்ஸ்
அதிலும் இளசுகள் கூட்டம் முண்டியடித்து கொண்டு வந்து சோனாலியின் பிரச்சாரத்துக்கு வருகை தந்தது.. இவருக்கு கூடும் கூட்டத்தை பார்த்தால், கண்டிப்பாக எம்எல்ஏ ஆகிவிடுவார் போல தெரிகிறதே என்றுகூட பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. பொதுவாக, பாஜக பெண் அரசியல்வாதிகள் நிறைய பேர் டிக் டாக் செய்துள்ளனர். ஆனால், இவர் டிக் டாக் செய்துவிட்டு அரசியலுக்குள் வந்ததால், மக்களின் கவனத்தை அதிகமாகவே கவர்ந்தார்.. ஆனால், அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார்..

பாப்புலாரிட்டி + அட்ராக்ஷன்
எந்தவித அரசியல் பின்புலம் இல்லாத நிலையில், பாப்புலாரிட்டியை மட்டுமே வைத்து பாஜக சீட் தந்தாலும், மக்கள் பிரச்சனையை எந்தவகையிலும் கையாளாமல், அடித்தட்டு மக்களிடம் நெருங்கியும் செல்லாமல், கட்சியில் சேர்ந்த உடனேயே பதவி கிடைத்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கும் நப்பாசைக்காரர்களுக்கு சோனாலி போகத் ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறார்.. அதேபோல, டிக் டாக் செய்த ஒருவர் ஸ்ட்ரைட்டாக அரசியலுக்குள் கொண்டு வந்தது புதிய முயற்சியே என்றாலும், கவர்ச்சியை பார்த்து மட்டுமே நம் மக்கள் மயங்கிவிட மாட்டார்கள் என்பதும், வெறும் பாப்புலாரிட்டி மட்டுமே ஒருவரை உச்சத்துக்கு கொண்டு வந்துவிடாது என்பதுவும் பாஜகவுக்கு ஆகச்சிறந்த பாடமாக விளங்கியிருக்கலாம்..!
-
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா?












Click it and Unblock the Notifications