"தூரிகை" தூக்கில் தொங்கியதா?.. "காப்பாத்துங்க என் பொண்ணை".. அலறிய கபிலன் மனைவி.. இதுதான் காரணமா?
பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன
சென்னை: எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல என்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, இளைய சமுதாயத்துக்கு தைரியம் தந்த பெண்ணா, இப்படி ஒரு முடிவை எடுத்தது என்று தமிழக மக்கள் உறைந்து போயுள்ளனர்..
பிரபல பாடலாசிரியர் மகள் கபிலன் மகளின் தற்கொலை அதிர்ச்சியில் இருந்து, தமிழ்திரையுலகம் இன்னும் மீளவில்லை.
நேற்று மாலை 4 மணி அளவில், வீட்டில் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.. அப்போது அங்கு வந்த அவரது அம்மா உஷா, இதனை பார்த்து அலறியடித்து வெளியே ஓடி வந்து "என் பொண்ணை காப்பாத்துங்க" என்று அலறி சத்தம் போட்டுள்ளார்...

உஷா + உஷா
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து, தூரிகையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.. தீவிர சிகிச்சையும் தரப்பட்டிருக்கிறது.. அதற்கு பிறகுதான், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருமணத்துக்கு குடும்பத்தினர் வற்புறுத்தியதால்தான் இப்படி முடிவை எடுத்ததாக முதல்கட்டமாக சொல்கிறார்கள்.. தூரிகையின் உடலை கைப்பற்றிய போலீசார், சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்துள்ளனர்.அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது..

தூரிகை
தூரிகையை அவரது பெற்றோர் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தியது தான் அவரின் தற்கொலை முடிவுக்கு காரணம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாம். பாடலாசிரியர் கபிலனின் மகள் வேறு யாரையாவது காதலித்து வந்தாரா? காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில், தான் இப்படியொரு முடிவை எடுத்து விட்டாரா என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தூரிகை
பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை.. மிகுந்த அக்கறையுடன், ஆழமாகவும், அழகாகவும் யோசித்து இந்த பெயரை தன்னுடைய மகள் பிறந்ததும் சூட்டினார் கபிலன். எம்பிஏ படித்திருந்தாலும், முற்போக்கு சிந்தனையுடைய, அதேசமயம் துணிச்சல் நிறைந்த பெண்ணாகவும் தூரிகை வலம் வந்துள்ளார்.. முற்போக்கு இயக்க தலைவர்கள், திராவிட இயக்க தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.. ஆங்கிலத்தில் கட்டுரைகளையும், விரிவுரைகளையும் எழுதுவது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது..

ஆக்கம் + ஊக்கம்
எழுத்தாற்றல் மிக்கவர்களே என்றாலும், இப்படி ஆங்கில வடிவில் கட்டுரைகளாக வடித்துவிட முடியாது.. இந்த இளம்வயதிலேயே, ஏராளமான கட்டுரைகளை தூரிகை எழுதி வந்துள்ளார்.. ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து வந்துள்ளார். வார இதழ் ஒன்றை தொடங்கி நடத்தி வந்த நிலையில், உத்வேகம் தரும் பதிவுகளை தன்னுடைய பேஸ்புக்கில் பதிவிட்டு வருபவர். இதில் பெண்களுக்கான ஆக்கபூர்வ பிரச்சினைகள் குறித்து பேட்டிகள் எடுத்து பதிவிட்டு வந்துள்ளார். கடைசியாக கடந்த 1ம் தேதி மெரினாவில் பாலின சமத்துவம் குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு அதை தனது டிஜிட்டல் இதழில் பதிவிட்டுள்ளார்.

ஹாட்ஸ் ஆஃப் நடிகை வசந்தி
விக்ரம் படத்தில் நடித்த டீனா பெரும்பாராட்டைப் பெற்றிருந்த நிலையில், இதுகுறித்தும் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டோ பதிவிட்டு வாழ்த்தியிருந்தார்.. அதில், "நீங்கள் இன்று நம்பிக்கையற்றவர்களாக உணர்ந்தால், இந்த படங்களைப் பார்த்து, நமது காத்திருப்புக்கும் பலன் இருப்பதை நம்புங்கள்.. நிச்சயமற்ற தன்மையைத் ஆரத்தழுவி அதன் அழகை அனுபவிக்கவும், நல்ல காரியங்கள் நடக்க எப்போதும் நேரம் எடுக்கும். ஹாட்ஸ் ஆஃப் நடிகை வசந்தி" என்று வாழ்த்தியுள்ளார்.

முற்போக்கு
ஊக்கமும் ஆக்கமும் மட்டுமே அடுத்தக்கட்டத்துக்கு நம்மை எடுத்து செல்லும் என்ற வாதத்தை ஆழமாக நம்பியவர் தூரிகை.. இப்படி பெண்களின் முன்னேற்றத்திற்காக, பெண்களின் உரிமைகளுக்காக சிந்தித்த பெண், வாழ்க்கையில் முற்போக்கான பல விஷயங்களை பேசியும் எழுதியும் வந்த ஒரு பெண், இப்படி ஒரு முடிவை எடுத்ததை யாராலும் நம்ப முடியவில்லை.. சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்த வேண்டி உள்ளது.. சைக்காலஜி படித்த துணிச்சலான பெண் சித்ரா.. எத்தனையோ இளம்பெண்களுக்கு, ஒரு எனர்ஜி டானிக்காகவே திகழ்ந்தார்.. அவர் தற்கொலை செய்தார் என்பதை இன்றுவரை அவரது ரசிகர்கள் நம்பவேயில்லை.

கருகும் வாழ்வு
இப்படி படித்த, தைரியமான, துணிச்சல் மிக்க பெண்களே, உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுத்துவிடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. தற்போதுள்ள குழந்தைகளும் அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்... சின்ன சின்ன விஷயங்களுக்கு பெரிய பெரிய முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.. "உட்கார்ந்து பேசினாலே, எல்லாம் சரியாகிவிடும்" என்பதெல்லாம் படித்த பட்டம் பெற்ற இந்த பெண்களுக்கு தெரியாமல் இல்லை. என்றாலும் "உணர்ச்சிவசப்படுதல்" என்ற உளவியல் பிரச்சனைகளில் சிக்கிவிடுவதால், அவர்களின் படிப்பு, அந்தஸ்து, அறிவு, ஒட்டுமொத்த வாழ்க்கை என அனைத்துமே தீயில் கருகிவிடுகின்றன..!

தூக்கில் தொங்கியதா?
தூரிகையின் மரணம் குறித்து, திராவிடர் கழக பேச்சாளரும், வழக்கறிஞருமான அருள்மொழி கண்ணீர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.. "மனமெங்கும் அலைகிறது உன் புன்னகை... பாசம் நிறைந்த உன் பார்வை.. நாற்காலியின் கைப்பிடிக்கு பதிலாக என் மடியில் அமர்ந்திருக்கலாம் என்ற சின்னக் கொஞ்சல்.. வலிமை மிக்க 50 பெண்கள் என்ற ஆங்கிலத்தொகுப்பில் என் படமும் என்னைப்பற்றிய குறிப்பும் வரச்செய்த உன் பேரன்பு,அதற்காக எனக்கு ஒப்பனை செய்து புகைப்படம் எடுக்கச் செய்தபோது சிரித்து மகிழ்ந்த கலகலப்பு அடுத்தவாரம் ஒரு நிகழ்ச்சி.. நீங்க வரிங்க என்ற உரிமை.. எல்லாம் சேர்ந்த அந்த தூரிகை தூக்கில் தொங்கியதா???
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications