சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"முதலிரவு".. ஆசை ஆசையாய் ரூமில் நுழைந்த மாப்பிள்ளை.. ஒரே அலறல்.. போலீசுக்கு ஓட்டம்.. யார் அந்த கவிதா

கன்னியாகுமரி பெண்ணின் மோசடி குறித்து சேலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: 6 கல்யாணம் செய்து, 7வது கல்யாணத்துக்கு ரெடியான மதுரை சந்தியா விவகாரத்தின் அதிர்ச்சியே இன்னும் விலகவில்லை.. அதற்குள் சேலத்தில் இன்னொரு அக்கப்போர் நடந்துள்ளது..!!

அந்த அப்பாவி பெயர் செந்தில்.. 48 வயதாகிறது.. சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம், சாணாரப்பட்டியை சேர்ந்தவர்.. இவர் ஒரு லாரி டிரைவர்..

11 மாதங்களுக்கு முன்பு, உடம்பு சரியில்லாமல் இவரது மனைவி இறந்துவிட்டார்.. இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.. அதனால் 2வது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்..

சைக்கோ மாப்பிள்ளை.. முதலிரவு அறையிலிருந்து அலறிய மணமகள்.. ஓடிப்போய் பார்த்து அதிர்ந்த உறவினர்கள் சைக்கோ மாப்பிள்ளை.. முதலிரவு அறையிலிருந்து அலறிய மணமகள்.. ஓடிப்போய் பார்த்து அதிர்ந்த உறவினர்கள்

 கவர்ச்சி பேச்சு

கவர்ச்சி பேச்சு

இதற்காக ஆன்லைனில் "ஜோடி ஆப்" என்ற திருமண ஆப் ஒன்றை தேர்வு செய்து, அதில் தன்னுடைய தகவல்கள், விவரங்களை எல்லாம் பதிவு செய்தார்.. கொஞ்ச நேரத்தில், கவிதா என்ற பெண் செந்திலை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.. இந்த கவிதா கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர்.. "உங்கள் விவரங்களை எல்லாம் படித்தேன்.. உங்களை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று சொல்லி உள்ளார்.. பிறகு, செந்திலின் போன் நம்பர் வாங்கி பேசி உள்ளார்.. கவிதாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாம்.

 நெருக்கம் + இணக்கம்

நெருக்கம் + இணக்கம்

அவரது கணவரும் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாராம்.. பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தபோதுதான், இந்த திருமண ஆப் தன் கண்ணில் பட்டதாகவும், செந்திலும் தன்னை போலவே துணை இல்லாமல் தவிப்பதால், மறுமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.. செந்திலும், கவிதாவும் தினமும் போனில் நெருக்கமாகவே பேசி வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில் செலவுக்கு பணம் வேண்டும் என்று செந்திலிடம் கவிதா கேட்க ஆரம்பித்துள்ளார்..

 பேங்க் அக்கவுண்ட்

பேங்க் அக்கவுண்ட்

இவரும் பேங்க் அக்கவுண்ட்டில் பணம் அனுப்பி வைத்துள்ளார்.. பிறகு இருவருமே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.. அதன்படி, கடந்த ஜுன் 24-ம்தேதி சேலத்தில் ஒரு சிவன் கோவிலில் கவிதாவுக்கு செந்தில் தாலி கட்டி உள்ளார்.. அன்றைய தினமே, புதுமனைவியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் செந்தில்.. ஆசை ஆசையாய் முதலிரவுக்காக காத்திருந்தார்.. ஆனால், கவிதாவை காணோம்.. அன்றைய இரவே, வீட்டில் இருந்த நாலரை சவரன் நகைகள், வெள்ளிக்கொலுசு, வெள்ளிப்பொருட்கள், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், போன்றவைகளுடன் தப்பி ஓடிவிட்டிருந்தார்.

 முதலிரவு

முதலிரவு

முதலிரவுக்காக காத்திருந்த செந்தில் அதிர்ந்து போயுள்ளார்.. உடனடியாக கொங்கனாபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார்.. கவிதா தன்னிடம் செல்போனில் இதுவரை பேசிய வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை போலீசாரிடம் தந்தார்.. வங்கிகணக்கில் பணம் அனுப்பிய ரசீதையும் போலீசில் ஒப்படைத்தார்.. கவிதா மீது நடவடிக்கை வேண்டும் என்றும் புகார் தந்தார்.. ஆனால், அதற்குள் கவிதா தரப்பில் இருந்து 2 பேர் வக்கீல்கள் என்று சொல்லி வந்துள்ளனர்.. வீட்டில் கொள்ளை அடித்து சென்ற, நகை, பணத்தை கவிதாவை வைத்து திரும்ப ஒப்படைப்பதாக செந்திலிடம் சொன்னார்கள்.. ஆனால், இதுவரை நகை, பணம், கவிதா எதுவுமே வரவில்லை.

 பஸ் ஸ்டாண்ட்

பஸ் ஸ்டாண்ட்

மறுபடியும் ஏமாந்துவிட்டோமே என்று மேலும் கொந்தளித்துபோன செந்தில், நேரடியாக மாவட்ட கண்காணிப்பாளரிடமே புகார் தந்துவிட்டார்.. அத்துடன் தன்னுடைய குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும், கவிதாவிடம் இருக்கும் நகை, பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கோரியுள்ளார்.. இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் செந்தில் பேசும்போது சொன்னதாவது:

 மளிகை கடை

மளிகை கடை

"நல்லாதான் பேசினாள்.. திடீர்னு பண பிரச்சனைன்னு சொன்னாங்க.. அதனால் பணம் அனுப்பினேன்.. இந்த மாதிரி 3 முறை கவிதாவுக்கு பணம் அனுப்பியிருக்கேன்.. ஒருநாள் எனக்கு போன் செய்து, உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று சொன்னாள்.. நானும் சேலம் பஸ் ஸ்டாண்ட் வரசொன்னேன்.. சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இறங்கியபோதுபோதுதான் கவிதாவை முதன்முதலாக பார்த்தேன். அப்போது கவிதா, இங்கேயே, இப்பவே எனக்கு தாலி கட்டுங்க, முதன்முதலில் உங்க வீட்டுக்குள் நுழையும்போது, பொண்டாட்டியாகத்தான் காலடி வைப்பேன் என்று சொன்னாள்..

 மஞ்சள் கயிறு

மஞ்சள் கயிறு

இதை கேட்டதும் எனக்கு ஒரு நிமிஷம் எதுவுமே புரியவில்லை.. அதனால், அங்கேயே ஒரு மளிகை கடைக்கு ஓடிச்சென்று, மஞ்சள் கயிறை வாங்கி வந்து கட்டினேன்.. பிறகு வீட்டுக்குள் அழைத்து வந்தேன்.. அதுக்குள்ள இப்படி நடந்துடுச்சு" என்று வேதனையுடன் சொல்கிறார்.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் துவக்கி உள்ளதாக தெரிகிறது.. வக்கீல்கள் என்று சொல்லி கொண்டு வந்தவர்கள் யார்? என்று தெரியவில்லை.. கவிதாவும் எங்கே என்று என்று தெரியவில்லை.. தேடிக்கொண்டிருக்கிறார்கள்..

செம்ம கிஃப்ட்

செம்ம கிஃப்ட்

இந்த சம்பவத்தில் இன்னொரு கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது.. வீட்டுக்கு தாலி கட்டி அழைத்து வந்ததுமே, இறந்துபோன மனைவியின் நகைகளை கவிதாவிடம் எடுத்து தந்தாராம் செந்தில்.. அதுமட்டுமல்ல, வீட்டில் இருந்த பீரோ சாவியை எடுத்து வந்து, இனி நீதான் இந்த வீட்டை பார்த்துக் கொள்ளணும் என்று சொல்லி சாவியை ஒப்படைத்தாராம்.. பிறகு, கவிதாவை கடைக்கு அழைத்து சென்று, 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒரு செல்போன் வாங்கி தந்துள்ளார் செந்தில்.. இது எதற்காகவென்றால், கவிதாவுக்கு திருமண பரிசாம்..

முதலிரவு

முதலிரவு

இவ்வளவையும் வாங்கி கொண்ட கவிதா, இரவு நேரம், நெருங்க நெருங்க தனக்கு உடம்பு சரியில்லை என்று சாக்கு சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.. பிறகுதான் அன்றைய தினம் மாயமாகி உள்ளார்.. அப்போதுகூட செந்தில் கவிதாவை மிகவும் நம்பி உள்ளார்.. கவிதாவுக்கு போன் போட்டு எங்கே போய்விட்டாய் என்று கேட்டுள்ளார்.. அதற்கு கவிதா, எனக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னேனே.. அதனால், சிகிச்சை பெற வந்திருக்கிறேன்.. ஒருசில நாளில், என் அம்மாவுடன் வந்துவிடுகிறேன் என்றாராம்.. ஆனால் மாதக்கணக்காகியும் கவிதா வரவேயில்லை.. இன்னொரு ட்விஸ்ட்டும் உள்ளது.. செந்திலின் ஆதார் அட்டையை பயன்படுத்தி கவிதா, நிறைய பணம் கடன் வாங்கியிருக்கிறாராம்.. இந்த விஷயம் தெரிந்துதான், செந்தில் ஆடிப்போய்விட்டார்.. அதற்கு பிறகுதான் போலீசுக்கு ஓடியுள்ளார்..!

English summary
Who is this Kanniyakumari Kavitha and why did salem man complaint against her
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X