"ஹு" வெளியிட்ட லிஸ்டில் இடம்பெறவில்லை.. கோவாக்சின் போட்ட இந்தியர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கலா?
சென்னை: கொரோனாவிற்கு எதிராக உலக சுகாதார மையம் அவசர அனுமதி அளித்த வேக்சின்களின் பட்டியலில் கோவாக்சின் இடம்பெறவில்லை. இதனால் இந்த வேக்சின் எடுத்துக்கொண்ட இந்தியர்கள் வெளிநாடு செல்வது சிக்கலாகி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிட்ஷீல்ட் வேக்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவேக்சின் இந்தியாவை சேர்த்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட வேக்சின் ஆகும்.
இந்தியர்கள் பலர் கோவிட்ஷீல்ட் மருந்தை விட கோவாக்சின் நன்றாக இருப்பதாக கூட பரிந்துரை செய்து வருகிறார்கள். கோவாக்சின் மருந்து நல்ல பயனை அளித்தாலும், பெரிதாக பக்க விளைவுகள் இல்லை என்றாலும், இன்னும் கோவேக்சினை பிரிட்டன், கனடா, அமேரிக்கா போன்ற சில உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

விருப்பம்
கிட்டத்தட்ட 40 நாடுகள் கோவாக்சின் மருந்தை ஏற்றுக்கொண்டதாகவும். அந்த வேக்சினை தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யவும், இறக்குமதி செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் கூட கொரோனாவிற்கு எதிரான அவசர பயன்பாட்டிற்காக உலக சுகாதார மையம் மூலம் அனுமதிக்கப்பட்ட வேக்சின்களின் பட்டியலில் இந்தியாவின் கோவாக்சின் இடம்பெறவில்லை. அதாவது உலக சுகாதார மையம் அவசர அனுமதி அளித்த வேக்சின்களின் பட்டியலில் கோவாக்சின் இடம்பெறவில்லை.

சிக்கல்
இதனால் இந்த வேக்சினை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும், மற்ற நாடுகளில் இதை உற்பத்தி செய்வதும் சிக்கல் ஆகியுள்ளது. அதோடு பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் வேக்சின் போட்டவர்களுக்கு மட்டுமே விசா என்ற விதியை கொண்டு வர உள்ளது. இந்த விதி காரணமாக அவசர பயன்பாட்டிற்காக உலக சுகாதார மையம் அனுமதித்த வேக்சின்களை எடுத்தவர்கள் மட்டுமே இந்த நாடுகளுக்கு பயணிக்க முடியும்.

முடியாது
இந்த லிஸ்டில் கோவாக்சின் இல்லாத காரணத்தால் இந்தியாவில் அந்த வேக்சின் எடுத்தவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது சிக்கலாகும். விசா பெறுவது சிக்கலாகும். பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் அவசர அனுமதிக்காக உலக சுகாதார மையத்திடம் ஏப்ரல் 19ம் தேதியே விண்ணப்பித்தது. ஜூன் மாதத்திற்குள் இதில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்னும் இதன் மீது உலக சுகாதார மையம் முடிவு எடுக்கவில்லை.

மேலும் தகவல்
இதனால் எப்படியாவது விரைவில் உலக சுகாதார மையத்திடம் அனுமதி பெறும் முடிவில் பாரத் பயோடெக் நிறுவனம் உள்ளது. உலக சுகாதார மையம் கோவாக்சினின் கூடுதல் டேட்டாக்களை கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பிரதமர் மோடியும் கூட கோவாக்சின்தான் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாக்சின் சிக்கல்
கோவாக்சின் மருந்துக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் கோவிட்ஷீல்ட், பைசர், ஜான்சனன் ஜான்சன் வேக்சின், மாடர்னா வேக்சின், சினோபார்ம் வேக்சின், ஆகிய வேக்சின்கள் அனுமதி பெற்றுள்ளன. அதே சமயம் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள இன்னொரு வேக்சினான ஸ்புட்னிக் வி வேக்சினும் உலக சுகாதார மையம் மூலம் அனுமதிக்கப்படவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications