மதுரவாயல் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடப்போவது யார்? முட்டி மோதும் மூவர்
சென்னை: சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுக சிட்டிங் எம்.எல்.ஏ காரப்பாக்கம் கணபதி மீண்டும் களமிறங்க விரும்புகிறார். அதேபோல் அப்பகுதியின் ஒன்றிய கழக செயலாளராக உள்ள அ. ம. துரை வீரமணி என்பவரும் காய் நகர்த்தி வருகிறாராம்.
அதேநேரம் கடந்த முறை மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட தற்போதைய தி.மு.க-வின் ஐடி விங் மாநில நிர்வாகி பத்மபிரியாவும் சீட் எதிர்பார்க்கிறார்..
ஒரு காலத்தில் சென்னையின் புறநகர் பகுதியாக இருந்த மதுரவாயல் பகுதி இன்று, சென்னையின் ஒரு அங்கமாகவே மாறி உள்ளது. சென்னை மாநகராட்சியின் நுழைவு வாயிலாக உள்ள மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் அயப்பாக்கம், நொளம்பூர், கரம்பாக்கம், வானகரம், ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், நெற்குன்றம் மற்றும் மொகப்பேர் மற்றும் அம்பத்தூரின் சில வார்டுகள் உள்ளன.

அதேபோல் கோயம்பேடு, போரூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகியவையும் மதுரவாயல் தொகுதியாக உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், மிகப்பெரிய தொழில் வளமும், அசுரத்தனமான ரியல் எஸ்டேட் வளர்ச்சியும் உள்ள தொகுதியாக மதுரவாயல் தொகுதி இருக்கிறது.

மதுரவாயல் தொகுதியை பொறுத்தவரை கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவில் அமைச்சராக இருந்த பெஞ்சமினை தோற்கடித்து திமுகவின் காரப்பாக்கம் கணபதி வெற்றி பெற்றார். சிட்டிங் எம்.எல்.ஏ என்ற அடிப்படையில் காரப்பாக்கம் கணபதி மீண்டும் களமிறங்க விரும்புகிறார்.
அதேபோல் அப்பகுதியின் ஒன்றிய செயலாளராக உள்ள அ. ம. துரை வீரமணி என்பவரும் காய் நகர்த்தி வருகிறாராம். இவர் 2021 ஆம் ஆண்டு மதுரவாயல் பகுதியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தை நடத்தியிருந்தார். அப்போது ஸ்டாலினே பாராட்டி இருந்தார். பாரம்பரியமான திமுக குடும்பத்தை சேர்ந்த இவரின் தந்தை மொழிப்போர் தியாகி என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் கடந்த முறை மக்கள் நீதி மய்யம் சார்பில் 33 ஆயிரம் வாக்குகள் பெற்ற தி.மு.க-வின் ஐடி விங் மாநில நிர்வாகி பத்மபிரியாவும் சீட் எதிர்பார்க்கிறார். அவர் மீண்டும் போட்டியிட முயற்சிப்பதாக வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

மக்கள் நீதி மய்யத்திற்கு எத்தனை சீட் கிடைக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும், கோவை தெற்கு, மதுரவாயல், வேளச்சேரி ஆகிய தொகுதிகளை பெற வேண்டும் என்று காய்நகர்த்தி வருகிறது. அதேபோல் திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மதுரவாயல் தொகுதியை கேட்க ஆயத்தமாகி வருகிறதாம்.
மதுரவாயல் தொகுதியை திமுக கூட்டணி கட்சிக்கு விட்டுத்தரப் போகிறதா அல்லது தானே களம் காண போகிறதா என்பது ஒரு புறம் இருந்தாலும் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட இந்த மூன்று பேர் இடையேயும் கடுமையான போட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முறை யாருக்கு சீட் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்!












Click it and Unblock the Notifications