சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 சின்ன பசங்க இருக்காங்களே.. தனுஷ் - ஐஸ்வர்யா குழந்தைகளின் கஸ்டடி யாருக்கு? சட்டம் சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இவர்களின் 18 வருட திருமணம் முடிவிற்கு வந்துள்ளது.

நேற்று சமூக வலைதளங்களில் இது தொடர்பான அறிவிப்பை தனுஷ் வெளியிட்டார். இதை தொடர்ந்து ஐஸ்வர்யாவும் தனது விவாகரத்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இன்னும் சட்ட ரீதியாக இவர்கள் விவாகரத்து பெறவில்லை என்றாலும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர்.

4 டோஸ் போட்டும் யூஸ் இல்லையாம்.. ஓமிக்ரானை தடுக்க முடியாமல் திணறிய வேக்சின்கள்.. இஸ்ரேல் பரபர ஆய்வு! 4 டோஸ் போட்டும் யூஸ் இல்லையாம்.. ஓமிக்ரானை தடுக்க முடியாமல் திணறிய வேக்சின்கள்.. இஸ்ரேல் பரபர ஆய்வு!

இவர்கள் இருவருக்கும் 15, 11 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் நிலை

குழந்தைகள் நிலை

இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் குழந்தைகள் யாருடைய கட்டுப்பாட்டில் இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. குடும்ப நல வழக்கறிஞர்கள் சிலரிடம் இது தொடர்பாக ஆலோசனை செய்தோம். 2 குழந்தைகள் யாருடைய கட்டுப்பாட்டில் இருப்பார்கள் என்பது தொடர்பாக விசாரித்தோம். அதன்படி, இந்தியாவில் குழந்தைகள் மீதான கஸ்டடி உரிமை அம்மா, அப்பா இருவருக்கும் சமமாகவே இருக்கும்.

கஸ்டடி உரிமை

கஸ்டடி உரிமை

குழந்தை மீதான கஸ்டடி ஒருவருக்கு கொடுக்கப்படுகிறது என்றால் இன்னொருவருக்கு தன் குழந்தை மீது எந்த உரிமையும் இல்லை என்று கூற முடியாது. அவரும் ஒரு பெற்றோர்தான். மாறாக அந்த குழந்தையை அவ்வப்போது சென்று சந்திக்கும், நேரம் செலவிடும் உரிமை மட்டும் அளிக்கப்படும். கஸ்டடி எடுக்கும் அம்மாவோ, அப்பாவோ அந்த குழந்தைக்கு பிரைமரி ஆதரவாக அறிவிக்கப்படுவார்கள். கஸ்டடி கிடைக்காத அம்மாவிற்கோ, அப்பாவிற்கோ குழந்தையை பார்க்கும் உரிமை மட்டும் அளிக்கப்படும்.

டைவர்ஸ் விதி

டைவர்ஸ் விதி

தம்பதிகள் டைவர்ஸ் செய்யும் சமயத்தில் அவர்களுக்கு 18 வயது குறைவான பெண் குழந்தை இருந்தால் அந்த பெண் குழந்தையின் கஸ்டடி பெரும்பாலான சமயங்களில் அம்மாவிற்கே கொடுக்கப்படும். சில சமயங்களில் இதற்கு விதிவிலக்கு இருந்துள்ளது. பெரும்பாலான வழக்குகளில் குழந்தைகளை கஸ்டடி எடுப்பதில் அம்மாவிற்கு கொஞ்சம் கூடுதல் உரிமை வழங்கப்படும். இதற்கு முன் பல டைவர்ஸ் வழக்குகளில் இப்படி நடந்துள்ளது.

ஆண் குழந்தைகள்

ஆண் குழந்தைகள்


ஆண் குழந்தைகள் 9 வயதுக்கு குறைவாக இருந்தால் பெரும்பாலும் அவர்களுக்கான கஸ்டடி அம்மாவிற்கே வழங்கப்பட்டு உள்ளது. ஆண் குழந்தைகள் 9 வயதை கடந்துவிட்டால் குழந்தைகளின் கருத்தும் கஸ்டடி எடுப்பதில் கேட்கப்படும். யாருடன் இருக்க விரும்புகிறார்கள் என்று கேள்வி கேட்கப்படும். இது போன்ற சமயங்களில் குழந்தைகளின் பராமரிப்பு செலவை எப்படி பிரித்துக் கொள்வது என்றும் முடிவு செய்யப்படும்.

மற்ற கஸ்டடி

மற்ற கஸ்டடி

பெரும்பாலும் அதிக வருமானம் பெறும் அப்பாவோ, அம்மாவோ கூடுதல் பராமரிப்பு செலவை ஏற்பார்கள். அம்மா ஒருவேளை abusive குணம் கொண்டவர் என்று உறுதி செய்யப்பட்டால் மட்டும் அப்பாவிற்கு குழந்தைகளை பராமரிக்கும் கஸ்டடி அளிக்கப்படும். இது போக சில வழக்குகளில் Joint கஸ்டடி அளிக்கப்படும். அதாவது இரண்டு பெற்றோரும் குழந்தையை சுழற்சி முறையில் கஸ்டடி எடுத்து பராமரிப்பார்கள்.

Recommended Video

    Dhanush & Aishwarya Announced their Separation | தலைவர் வருந்தபடுவார்!!
    கஸ்டடி விவரம்

    கஸ்டடி விவரம்

    இது போக Sole கஸ்டடி உள்ளது. இதில் ஒரு பெற்றோர் abusive என்று கண்டுபிடிக்கப்பட்டால் இன்னொரு பெற்றோருக்கு முழு கஸ்டடி கொடுக்கப்படும். இன்னொரு கஸ்டடி Third-party custody ஆகும். இதில் ஒருவேளை பெற்றோர் குழந்தையை பராமரிக்க முடியாத நிலையில் இல்லை அல்லது உயிரோடு இல்லை என்றால் தாத்தா, பாட்டி போன்ற கார்டியனுக்கு கஸ்டடி கொடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன, என்று வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    அவர்களின் கூற்றுப்படி தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்தில், ஆண் குழந்தைகள் இருவரும் 9 வயதை கடந்தவர்கள். இதனால் ஒருவேளை லீகல் முறைப்படி இருவரும் டைவர்ஸ் பெற்றால் அந்த குழந்தைகளிடமும் கஸ்டடி குறித்த அபிப்ராயம் கேட்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    Who will get the custody of the kids in case Dhanush and Aishwarya officially divorced?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X