சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவர்களுக்குத்தான் பதவி.. அண்ணாமலை கொடுத்த கிளியர் சிக்னல்.. ஓஹோ.. நெருக்கமாக வாட்ச் செய்யும் திமுக!

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவில் நிர்வாகிகள் மாற்றம் நடைபெற்றுள்ள நிலையில் இதை காரணமாக வைத்து திமுகவில் இருக்கும் நிர்வாகிகளை பாஜக பக்கம் இழுக்க அக்கட்சி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜக மாநில புதிய நிர்வாகிகள் பட்டியலை நேற்று மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். பாஜகவில் கட்சி ரீதியாக நிர்வாகிகள் பட்டியல் ஏற்கனவே மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே நிர்வாகிகளை மாற்றி அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

மாநில துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்.. போதைப்பொருள் ஜிஹாத் குறித்து கிறிஸ்தவர்கள் கவலை - பாஜக தலைவர் நட்டா கேரளாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்.. போதைப்பொருள் ஜிஹாத் குறித்து கிறிஸ்தவர்கள் கவலை - பாஜக தலைவர் நட்டா

முக்கிய அம்சம்

முக்கிய அம்சம்

இந்த நிர்வாகிகள் நியமனத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி மற்ற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்பிக்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் ஆகியோருக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதை திமுகவும் க்ளோசாக வாட்ச் செய்து வருகிறது. கட்சியில் இது மிக முக்கியமான பதவி ஆகும். கட்சியில் நீண்ட காலமாக இருக்கும் நிர்வாகிகளுக்கே இந்த பதவி வழங்கப்படவில்லை.

அதிமுக எம்பி

அதிமுக எம்பி

அதேபோல், அதிமுக முன்னாள் எம்பி, சசிகலா புஷ்பாவுக்கும் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவரும் மாற்று கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தவர். ஒரு பக்கம் பாஜகவின் நீண்ட கால நிர்வாகிகள் இடையே இந்த விஷயம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம். பல காலமாக நாங்கள் கட்சியில் இருக்கிறோம். எங்களுக்கு பதவி கிடைக்கவில்லை. ஆனால் மாற்று கட்சியில் இருந்து ஒரு வருடம்.. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வந்தவர்களுக்கு எல்லாம் பதவி கிடைக்கிறது புலம்பி உள்ளனராம்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம்.. திமுக கட்சிக்கு விடுக்கப்பட்ட மறைமுக தூதாக இது பார்க்கப்படுகிறது. திமுகவில் பெரிய பதவியில் இல்லாத இரண்டாம் கட்ட தலைவர்களை அழைக்கும் விதமாக இந்த சிக்னலை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. அதாவது மாற்று கட்சியில் இருந்து எங்கள் கட்சிக்கு வந்தால் அதை நாங்கள் மதிப்போம். அவர்களுக்கு சிறப்பு பதவிகளை வழங்குவோம். கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று சொல்லாமல் சொல்லப்பட்டு இருக்கிறதாம்.

மறைமுக தூது

மறைமுக தூது

முக்கியமாக திமுகவில் பல காலமாக பெரிய பதவி கிடைக்காமல் இருக்கும் சில தலைவர்களை குறி வைத்தும், அதிருப்தியில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் சிலரை குறி வைத்தும் இந்த நியமனத்தை பாஜக தரப்பு மேற்கொண்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவில் இருக்கும் நிர்வாகிகளுக்கு பெரிய பொறுப்பு தருவதாக கூறி பாஜக பக்கம் இழுக்கும் வகையில் அண்ணாமலை இந்த மூவை மேற்கொண்டு உள்ளதாக பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Recommended Video

    திடீரென பொங்கி எழுந்த Annamalai! பின்னணி | Oneindia Tamil
    திருச்சி சிவா

    திருச்சி சிவா

    நிலைமை இப்படி இருக்கத்தான் திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினார். இதனால் அவர் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை சூர்யா தரப்பு வட்டாரங்கள் மறுத்துள்ளன. இருந்தாலும், பெரிய பதவியோடு சூர்யா பாஜகவில் இணைய போகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்பிக்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் ஆகியோருக்கு ஏற்கனவே பெரிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இவர் பாஜக பக்கம் சென்றாலும், அவருக்கு பெரிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்கிறார்கள்.

    English summary
    Why Annamalai gave good posting to cadres who jumped from DMK to BJP? பாஜகவில் நிர்வாகிகள் மாற்றம் நடைபெற்றுள்ள நிலையில் இதை காரணமாக வைத்து திமுகவில் இருக்கும் நிர்வாகிகளை பாஜக பக்கம் இழுக்க அக்கட்சி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X