சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காரை நிறுத்துங்க.. திடீரென சொன்ன முதல்வர்.. இறங்கியதும் கேட்ட கேள்வி.. தேனியில் என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தற்போது தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நேற்று இரவு மக்களை சந்தித்து பேசினார்.

Recommended Video

    தேனி: காவலர் குடியிருப்பு பகுதிக்கு திடீர் விசிட் செய்த CM ஸ்டாலின் - வீடியோ

    தேனியில் பல்வேறு விழாக்களில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கிருந்து கார் மூலம் அவர் தேனிக்கு செல்கிறார்.

    5 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.. தீயாய் வீசும் காற்று.. டெல்லி மக்களுக்கு எச்சரிக்கை 5 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.. தீயாய் வீசும் காற்று.. டெல்லி மக்களுக்கு எச்சரிக்கை

    தேனியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் தங்க இருக்கிறார். அங்கு பல்வேறு அரசு விழாக்களில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

    தேனி கார்

    தேனி கார்

    இந்த நிலையில் நேற்று இரவு தேனிக்கு முதல்வரின் கார் சென்று கொண்டு இருந்தது. உசிலம்பட்டி அருகே கார் சென்ற போது திடீரென காரை நிறுத்தும்படி முதல்வர் ஸ்டாலின் சொன்னார், முதல்வர் வருகையை அறிந்து கொண்டு அந்த பாதையில் மக்கள் பலர் நின்று கான்வாயை பார்த்துக்கொண்டு இருந்தனர். இவர்களை பார்த்ததும் உடனே காரை நிறுத்தும்படி முதல்வர் ஸ்டாலின் சொன்னார்.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    இதையடுத்து அங்கு காவலர் மற்றும் தீயணைப்பு துறையினரின் குடியிருப்பு அடுத்தடுத்த கட்டிடங்களில் இருந்தது. அங்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்.. மக்களிடம் இயல்பாக பேசினார். அங்கு இருந்த பெண்களிடம் என்ன இருக்கிறது என்று கேட்டார்.. அதற்கு அவர்கள் சார் தண்ணீர் இருக்கிறது குடிக்கிறீர்களா என்றனர். ம்ம்ம் கொண்டு வாங்க என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லவும் பெண்கள் உள்ளே ஓடிப்போய் தண்ணீர் எடுக்க சென்றனர்.

    சாப்பிடலாம் வாங்க

    சாப்பிடலாம் வாங்க

    உடனே சாப்பாடுலாம் கொடுக்க மாட்டீங்களா என்று உரிமையாக கேட்டார்.. அதற்கு சார் தோசை இருக்கு சாப்பிடுறீங்களா என்று கேட்டனர். இல்லை சும்மா கேட்டேன் தண்ணீரே கொண்டு வாருங்கள் என்று கூறினார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் எத்தனை வருடமாக இங்கே இருக்கிறீர்கள்.. வசதிகள் எல்லாம் எப்படி இருக்கிறது. வீடு பிடித்து இருக்கிறதா என்று விசாரித்தார்.

     வீடுகள் சோதனை

    வீடுகள் சோதனை

    இதையடுத்து உள்ளே சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு சில வீடுகளை ஆய்வு செய்தார். காவல் குடியிருப்பு எப்படி இருக்கிறது. எந்த தரத்தில் இருக்கிறது என்று சோதனை செய்தார். முதல்வர் ஸ்டாலின் இப்படி திடீரென கான்வாயை நிறுத்தி சோதனை செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று தேனியில் பல்வேறு கூட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Why CM Stalin stopped his car on his way to Theni from Madurai? முதல்வர் ஸ்டாலின் தற்போது தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நேற்று இரவு மக்களை சந்தித்து பேசினார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X