அரசியல் சூறாவளி! காங்கிரஸ் மூத்த நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி! விஜயுடன் ரகசிய சந்திப்பு! பரபர ஆலோசனை
சென்னை: காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி தவெக விஜய் உடன் சந்திப்பு நடத்தி உள்ளார். அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இரண்டு பேரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் விஜயை பாராட்டும் விதமாக பிரவீன் சக்ரவர்த்தி போஸ்ட் செய்திருந்தார். இன்று இருவரும் சந்திப்பு நடத்தி உள்ளனர். இதில் கூட்டணி தொடர்பாகவும், ஆளும் திமுக தொடர்பாகவும், தமிழக அரசியல் விவகாரங்கள் தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு திடீரென ஆதரவாக பேசி இருக்கிறார். அவர் செய்துள்ள போஸ்ட் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி செய்துள்ள போஸ்டில், இந்திய அரசியல் கட்சிகள், தங்கள் தலைவர்களின் பேரணிகளுக்குப் பெரும் கூட்டத்தைக் கூட்ட கணிசமான நேரம், பணம் மற்றும் உழைப்பைச் செலவிட்டு வருகின்றன. ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் நிலைமை இதற்கு நேர் எதிரானது. தங்கள் பேரணிகளில் அதிக மக்கள் கூடுவதால், கூட்டத்தைக் குறைப்பதே அவர்களுக்குள்ள சவாலாக உள்ளது, இது பலருக்கும் வியப்பளிக்கிறது என்று விஜய்யை, தமிழக வெற்றிக் கழகத்தை பாராட்டுவது போல பேசி இருந்தார்.

யாரிந்த பிரவீன் சக்ரவர்த்தி?
காங்கிரஸ் நிபுணர்கள் & தரவு பகுப்பாய்வு குழுவின் தலைவராக பிரவீன் சக்ரவர்த்தி இருக்கிறார். இவர் முன்னாள் மைக்ரோசாப்ட்/ஐபிஎம்/வால் ஸ்ட்ரீட் பொருளாதாரம் பிரிவுகளில் பணிகளை செய்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் இவர் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட இருந்தது. ஆனால் திமுக இதை கடுமையாக எதிர்த்தது. இவருக்கும் திமுக நிர்வாகிகளுக்கும் இருக்கும் மோதல் உலகம் அறிந்தது.
இதன் காரணமாகவே அவரை கடுமையாக எதிர்த்தது. அப்போதே இவர் ஆட்சியில் பங்கு கேட்டு விவாதங்களை ஏற்படுத்தி இருந்தார். அப்போது திமுக எதிர்ப்பால் இவருக்கு பதிலாக சுதாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவர் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பியாக வெற்றியும் பெற்றார். அதன்பின் ராஜ்ய சபாவிற்கு இவர் செல்ல முயன்றார். ஆனால் இதற்கு எதிராகவும் காங்கிரஸிடம் திமுக பிரஷர் போட்டதாக கூறப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில்தான் பிரவீன் சக்ரவர்த்தி தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு திடீரென ஆதரவாக பேசி இருக்கிறார். அவர் செய்துள்ள போஸ்ட் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. தவெக ஆதரவை விட திமுக எதிர்ப்பின் காரணமாகவே இவர் இப்படி போஸ்ட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தவெக குஷி
பிரவீன் சக்ரவர்த்தியின் இந்த போஸ்ட் மற்றும் சந்திப்பு காரணமாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர். அடடா காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் எங்களை பாராட்டுகிறார். விஜயை புகழ்கிறார். எங்களை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்.
அவ்வளவுதான் போங்க .. திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிகிறது. காங்கிரஸ் எங்கள் பக்கம் வரப்போகிறது. அதற்கான எடுத்துக்காட்டுதான் இது. ஒவ்வொரு காங்கிரஸ் நிர்வாகியாக பேச தொடங்கிவிட்டனர். இவர் விஜயை பாராட்டுகிறார். இன்னும் பல காங்கிரஸ் நிர்வாகிகள் இப்படி பாராட்டுவார்கள் என்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உற்சாகம் அடைந்து போஸ்ட் போட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications