தள்ளி நின்ற எடப்பாடி.. கை மாறிய பேப்பர்.. “எதுக்குப்பா வம்பு?”.. எல்லாம் அந்த சம்பவத்தால் தானாம்!
சென்னை : முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு நாளான நேற்று எடப்பாடி பழனிசாமி அணியினர், எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் உறுதிமொழியேற்றனர். சமீபத்தில் ஜெயலலிதா நினைவு நாளில் எடப்பாடி பழனிசாமி 'ஜெயலலிதா இறந்த நன்னாளில்..' என உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், இந்த முறை "எதற்கு வம்பு?" என்று, எம்.ஜி.ஆர் நினைவு நாள் உறுதிமொழியை முன்னாள் அமைச்சர் வைகைசெல்வனை மைக்கில் வாசிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஜெயலலிதா மறைந்த நாள் தொடர்பாக, அப்பல்லோ அறிக்கைக்கும், ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கைக்கும் இடையே வேறுபாடு உள்ளது. எனினும், வழக்கம்போல டிசம்பர் 5ஆம் தேதியன்றே நினைவு நாளை அனுசரித்தனர் அதிமுகவினர்.
ஜெயலலிதா நினைவு நாளின்போது, ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ் தரப்பினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டபோது, எடப்பாடி பழனிசாமி முதலில் உறுதிமொழியைக் கூற, அவரது ஆதரவாளர்கள் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றனர். 'அம்மா மறைந்த நன்னாளில்' என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றது சர்ச்சைக்குள்ளானது.
ஒரு தலைவரின் மறைவு என்பது, அவரது தொண்டர்களுக்கு சோகமான நாள்தானே, ஆனால், ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நன்நாளில் என்று உறுதியேற்கிறார்களே என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

ஜெ. நினைவு நாள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு நாளையொட்டி கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்களோடு ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஆறாம் ஆண்டு நினைவு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா மறைந்த நன்னாளில்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அப்போது உறுதிமொழியை எடப்பாடி பழனிசாமி, பேப்பரை பார்த்து மைக் முன்பு வாசிக்க அதனை அதிமுகவினர் பின்தொடர்ந்து கூறினர். அப்போது 'அம்மா மறைந்த நன்னாளில்' என எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி ஏற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேப்பரில் இந்நாளில் என எழுதப்பட்டிருந்த வார்த்தையை எடப்பாடி பழனிசாமி, இந்நன்னாளில் என இரண்டு முறை வாசித்தார். ஜெயலலிதாவின் இறந்த நாளை நன்னாள் என எடப்பாடி பழனிசாமி வாசித்தது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

தொக்காக சிக்கிய எடப்பாடி
எடப்பாடி பழனிசாமியின் இந்த உறுதிமொழி ஏற்பு வீடியோ, சமூக வலைதளங்களில் பயங்கரமாக பரவியது. எடப்பாடி பழனிசாமிக்கு, ஜெயலலிதா மறைந்த நாள் நன்னாள் தானே, அவர் மறைந்த காரணத்தால் தானே இவர் நான்கு ஆண்டுகள் அவரால் முதல்வராக முடிந்தது. அதனால் ஜெயலலிதா இறந்த நாளை நன்னாள் எனச் சொல்வதில் தவறில்லை என நெட்டிசன்கள் விமர்சித்தனர். ஓபிஎஸ் அணியினரும் இதை தொக்காகப் பிடித்துக்கொண்டு, எடபபடி பழனிசாமி அட்டாக் செய்தனர். எடப்பாடி தவறுதலாக இதைப் படித்ததாக நான் கருதவில்லை, அவர் மனதில் உள்ளதை அப்படியே அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி விமர்சித்தார்.

கை மாறிய மைக்
இந்நிலையில், அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் நினைவு நாளான நேற்று அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் எடப்பாடி அணியினர் உறுதிமொழி ஏற்றனர். கடந்த முறை ஜெயலலிதாவின் நினைவு நாளில் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையான நிலையில், இந்த முறை உறுதிமொழியேற்பை பலரும் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர். இந்நிலையில், எம்.ஜி.ஆர் நினைவு நாளில் ஏற்கப்பட்ட உறுதிமொழியை அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் மைக் முன்பு முன்மொழிந்தார். "எதற்கு வீண் வம்பு?" என்று கருதியே எடப்பாடி பழனிசாமி, வைகைச்செல்வனையே மைக் முன்பு உறுதிமொழியை வாசிக்க வைத்தாராம்.

40 தொகுதிகளிலும் வெற்றி
வைகைச்செல்வன் முன்மொழிய எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள், "எம்.ஜி.ஆர் புகழை எந்நாளும் காப்போம். தூய உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆரை நெஞ்சிலே தாங்கி, அவர் விட்டுச் சென்ற பணிகளை, லட்சியப் பாதையில் தடம் மாறாது பயணிப்போம். தடுமாறாமல் பயணிப்போம். எம்.ஜி.ஆர் புகழ் காக்க உறுதி ஏற்போம். எம்.ஜி.ஆர் காட்டிய பாதையில், அம்மாவின் வழி நடந்து, பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி கொள்வோம். தீய சக்தியால் பாதிக்கப்பட்ட, தமிழகத்தைக் காப்பாற்ற, சூளுரைப்போம், குளுரைப்போம் என புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆரின் நினைவு நாளில் உறுதி ஏற்போம்." என உறுதிமொழி மேற்கொண்டனர்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி












Click it and Unblock the Notifications