ஸ்டாலினுக்கு சொன்ன மோடி.. எடப்பாடிக்கு சொல்லலையே.. தைரியமான ஆள் தானா? பாயிண்டை பிடித்த புள்ளி
அண்ணாமலை ஈரோடு கிழக்கில் போட்டியிட்டு இருக்க வேண்டும் என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் மு. க ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொல்லவில்லை என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜக இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. பாஜக நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் அதிமுகவிற்கு தாவியதால் பாஜகவினர் கடுப்பில் உள்ளனர். அண்ணாமலை உள்ளிட்டோர் நேரடியாக அதிமுகவை விமர்சனம் செய்துள்ளனர். அமர் பிரசாத் ரெட்டியும் வெளிப்படையாக தன் அதிருப்தியை அதிமுகவிற்கு எதிராக காட்டி உள்ளார்.
அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா? மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது என்று பாஜகவை பதிலுக்கு செல்லூர் ராஜுவும் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக பாஜக இடையிலான மோதல் குறித்து மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

எடப்பாடி பாஜக
அவர் தனது பேட்டியில், எடப்பாடி பாஜகவை எதிர்க்க தைரியம் இன்றி இருக்கிறார். அவர் டெல்லியில் ஒரு நிலைப்பாட்டை வைத்து இருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு நிலைப்பாட்டை வைத்து இருக்கிறார். நிர்மல் குமாரை எடப்பாடி சேர்த்துக்கொண்டது தவறு இல்லை. ஆனால் நிர்மல் குமார் வெளியிட்ட அறிக்கைதான் சிக்கல். அண்ணாமலை வளர்ந்துவிடுவாரோ என்ற சந்தேகம் உள்ளது. அதனால் அவரை வீழ்த்தும் விதமாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அண்ணாமலை வலிமையானவர்தான். இதற்கு முன் இருந்த தலைவர்களை விட பாஜகவில் அண்ணாமலை வலிமையானவர். எல்லா தொகுதியிலும் 2026ல் போட்டியிடுவதற்காக அவர் தயாராகிக்கொண்டு இருக்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை ஈரோடு கிழக்கில் போட்டியிட்டு இருக்க வேண்டும். ஆனால் போட்டியிடவில்லை. போட்டு இருந்தால் எடப்பாடி இன்னும் கீழே போய் இருப்பார். பெரிய அளவில் வாக்குகளை இழந்து இருந்தார். டெபாசிட் இழந்து இருப்பார். அங்கே மட்டும் பாஜக போட்டி போட்டு இருந்தால் எடப்பாடிக்கு சிக்கல் ஆகி இருக்கும். எடப்பாடி தப்பித்துவிட்டார். பாஜக வேண்டாம் என்று புள்ளியை தற்போது எடப்பாடி எடுத்துவிட்டார். அதனால் சிவி சண்முகம் போன்றவர்கள் பாஜகவை எதிர்க்கிறார்கள். இது பாஜகவிற்கும் தெரியும். ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன மோடி எடப்பாடிக்கு வாழ்த்து சொல்லவில்லை.

உதயநிதி
எடப்பாடியால் மோடியை நேரில் சந்திக்க முடியவில்லை. ஆனால் உதயநிதி எளிதாக சந்திக்கிறார். இதனால்தான் எடப்பாடி இறங்கி வந்து இப்போது மேகலாயா, திரிபுரா தேர்தலிலும் பாஜகவிற்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். இங்கே தமிழ்நாட்டில் அண்ணாமலையுடன் மோதல், டெல்லியில் பாஜகவுடன் நட்பாக செல்வது என்று எடப்பாடி வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இதெல்லாம் தவறு. எடப்பாடி பெரிய ஆள் என்றால் அவர் நிரூபித்து காட்ட வேண்டும். ஓ பன்னீர்செல்வம் இல்லாமல் சீட் வாங்கி காட்ட வேண்டும். அவரிடம் ஒன்னும் கிடையாது.

தைரியமான ஆள்
அவர் தைரியமான ஆள் என்றால் பாஜகவை விட்டு செல்ல வேண்டியது தானே? அவர் தனியாக நின்று சீட் வாங்கி காட்டட்டும் முடியுமா? இவர்களை பற்றி பலம்தான் நமக்கு தெரியுமே. ஒற்றை தலைமை இருந்தால் அதிமுக 15% வாக்குகளை தாண்டி வாங்க முடியாது. அவருக்கு இவ்வளவுதான் பாஜக மரியாதை கொடுப்பார்கள். அவருக்கு இந்த அளவிற்குத்தான் மரியாதை கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதனால்தான் அதிமுகவின் வலிமை குறைந்துவிட்டதாக அமர் பிரசாத் ரெட்டி வெளிப்படையாக போஸ்ட் செய்துள்ளார். எடப்பாடி தனியாக வெல்ல முடியும் என்று நினைக்கிறார். அது முடியாது என்று நாங்கள் சொல்கிறோம்.. அதை எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும், என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications