சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வண்ணாரப்பேட்டையை மு.க.ஸ்டாலின் எட்டி பார்க்காதது ஏன்.. இஸ்லாமியர்களிடையே எழும் அதிருப்தி

வண்ணாரப்பேட்டைக்கு முக ஸ்டாலின் ஏன் செல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டாலின் ஏன் வண்ணாரப்பேட்டைக்கு வரலை என்று எச்.ராஜா கேட்டாரே.. அதுபோலவே இஸ்லாமிய பெருமக்களில் சிலரும் கேட்க துவங்கி உள்ளனராம்.. இதுபோக வேறு சில அதிருப்திகளும் திமுக மீது எழ தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக தமிழகத்தை பொறுத்தவரை திமுகவுக்கு இஸ்லாமியர் வாக்குகள் எப்போதுமே அதிகம்.. முஸ்லீம் சமூகத்தின்மீது ஆரம்பத்தில் இருந்தே நல்லுணர்வுடன் திகழ்ந்தார் கருணாநிதி.

1967-ல் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்ததே முஸ்லீம் வாக்குகள்தான்.. அண்ணாவுக்கு பிறகு திமுகவை வழிநடத்திய கருணாநிதியிடமிருந்தும் அந்த முஸ்லிம் வாக்குகள் கடைசிவரை பிரியவே இல்லை.. எந்த தேர்தல் வந்தாலும், சேதாரமின்றி தங்கள் வாக்குகளை திமுகவுக்கு அள்ளி வழங்கிவிடுவார்கள்!

திமுக

திமுக

ஆனால் இவ்வளவு நம்பிக்கை வைத்த இஸ்லாமியர்களில் சிலர் தற்போது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.. இதற்கு என்ன காரணம் என்று நாம் ஒரு சிலரிடம் பேசினோம்.. அப்போது அவர்கள் தெரிவித்ததாவது, "யார் யாரோ வண்ணாரப்பேட்டைக்கு வந்து போனார்கள்.. ஆனால் திமுக தலைவர் அங்கு இதுவரை செல்லாமல் இருக்கிறார்.. மற்ற கட்சியாக இருந்தால் பரவாயில்லை.. திமுகவே இப்படி செய்யலாமா? அவர்கள்தான் முதலில் வந்து நின்றிருக்க வேண்டும்" என்கிறார்கள்.

ராஜ்ய சபா சீட்

ராஜ்ய சபா சீட்

இதை தவிர அவர்கள் சொல்லும் வேறு காரணம் ராஜ்ய சபா சீட் தந்தது பற்றிதான்.. "ரொம்ப எதிர்பார்த்தோம் ராஜ்ய சபா சீட் கிடைக்கும்ன்னு.. எப்பவுமே இப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது இல்லை, இப்போ எதுக்குன்னா, சிஏஏ விவகாரம் போய்ட்டிருக்கு.. ஒரு எம்பி இந்த சமூகம் சார்ந்து இருந்தால்தானே, நாளைக்கு இதை பற்றி டெல்லியில் குரல் எழுப்பி கேள்வி கேட்க முடியும்?" என்றார்கள்.

நவாஸ் கனி

நவாஸ் கனி

உண்மையில், இந்த திமுக ஏன் ராஜ்ய சபா சீட் இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கவில்லை என தெரியவில்லை.. ஆனால் ஏற்கனவே ராமநாதபுரத்தில் நவாஸ்கனிக்கு சீட் தந்தோம் என்று ஒரு காரணம் சொல்லுகிறது.. அதையும் மறுக்க முடியாதுதான்.. அதே சமயம், இஸ்லாமிய ஓட்டுக்கள் எப்படியோ அதிமுக, பாஜகவுக்கு போகாது என்று அளவுக்கதிகமாக திமுக தலைவர் நம்புகிறார் என்றே தெரிகிறது.. அது தவறில்லை.

சூழ்நிலை

சூழ்நிலை

அதே சமயம் இஸ்லாமியருக்கும் வாய்ப்பு வழங்கியிருந்தால் இந்த சமயத்தில் திமுகவுக்கு அது கூடுதல் பலமாக அமைந்திருக்கவே செய்யும்.. இதன் பலனை சட்டசபை தேர்தலின்போது எளிதாக அறுவடை செய்யவும் உதவியிருக்கும்.. எனினும், யாருக்கு சீட் தர வேண்டும் என்பது அக்கட்சியின் சூழ்நிலையை பொறுத்த முடிவு என்றே இதை நாம் விட்டுவிடலாம்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

ஆனால் வண்ணாரப்பேட்டை விவகாரத்தில் இஸ்லாமிய மக்கள் சிலர் அதிருப்தியாக உள்ளதாக சலசலக்கப்படுகிறது.. இந்த புகாரையும் அதிருப்தியையும் முழுமையாக நாம் ஏற்க முடியாது.. காரணம் இந்த விவகாரத்தில் திமுகதான் அவர்களை தூண்டி விடுகிறது என்று ஒரு பெயரை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்.. இதை முதல்வரே சட்டசபையில் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருந்தார்.. அப்படி இருக்கும்போது, வண்ணாரப்பேட்டைக்கு திமுக தலைவர் போயிருந்தால், அது நிலவிவரும், குற்றச்சாட்டுகளை மெய்ப்பித்தது போல ஆகிவிடும் என்று கருதியே போராட்டக்களத்துக்கு போகாமல் ஸ்டாலின் தவிர்த்திருக்கலாம் என்றே தெரிகிறது.

கையெழுத்து

கையெழுத்து

அது மட்டுமல்ல.. இஸ்லாமிய சமூகத்தினர் மீது அக்கறை இருப்பதால்தானே 2 கோடி கையெழுத்து வாங்கி அனுப்பியிருக்காரு.. இந்த கையெழுத்தை பார்த்துதானே மிரண்டுதானே பாஜக தலைமை விக்கித்து நின்றது.. அப்படி இருக்கும்போது, வண்ணாரப்பேட்டைக்கு ஸ்டாலின் போகவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றுதான் சொல்ல தோன்றுகிறது!

English summary
The question has been raised as to why dmk leader mk stalin has not come to vannarapettai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X