அன்புமணியா இப்படி பேசியது?.. சென்னைக்கு அடிப்படை வசதிகள் உடனடியாக நிறுத்த வேண்டுமாம்.. என்ன காரணம்?
சென்னைவாசிகளின் அடிப்படை வசதிகளை நிறுத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்
சென்னை: தேர்தலில் சென்னை மக்கள் ஒரு ஓட்டுப் போட கூட வர மாட்டீங்களா? ஏன் ஓட்டுப்போட வர மாட்டேங்குறீங்க? என்ன மனநிலையில் இருக்கீங்க? எப்ப பாரு ட்விட்டர் போன் என நோண்டிட்டே இருப்பீங்களா? வெள்ளம் வரும்போது மட்டும் குறை சொல்றீங்க இல்லை? இதை தவிர அப்படி என்ன வேலை இருக்கு உங்களுக்கு? அடிப்படை வசதிகளை நிறுத்தினால்தான் சரியா வரும்" என்று அன்புமணி ராமதாஸ் சென்னைவாசிகளை எச்சரித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெறும் 43சதவீத வாக்குகளை மட்டுமே பதிவு செய்த சென்னை மக்களின் அடிப்படை வசதிகளை நிறுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் 15வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பாமக சார்பில் 2022-23 நிதியாண்டிற்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சி
வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையினை பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜிகே மணி மற்றும் முன்னாள் தொடர்வண்டித் துறை இணை அமைச்சர் ஜ ஏ கே மூர்த்தி உள்ளிட்டோர் வெளியிட்டனர். இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், நிதி நிலை அறிக்கையின் சிறப்புகள் குறித்து பேசினார்.. "எங்கள் போராட்டம் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் வெளியிடபடுவது எங்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றி என்றும் தமிழகத்தில் 60% மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளர்கள், ஆனால் அவர்களுக்கு வெறும் 13,000 கோடி நிதி ஒதுக்கீடு போதாது" என்றார்.

பாமக
நகர்ப்புற உள்ளாட்சியில் பாமகவுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்-. அதற்கு அன்புமணி பதிலளிக்கும்போது, "இந்த தேர்தலை பொறுத்தவரை அது எங்களுக்கு தோல்வியே கிடையாது.. சில ஊடகங்கள் தோல்வி என்று சொன்னார்கள்.. அது தோல்வி கிடையாது.. நாங்கள் இதை வெற்றியாக பார்க்கிறோம்.. மிகப்பெரிய வெற்றியாக கருதவில்லை.. ஆனால் வெற்றி பெற்றிருக்கிறோம். எந்த அடிப்படையில் சொல்கிறேன் என்றால், வழக்கமாக உள்ளாட்சி தேர்தல் என்றாலே ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருக்கும்.. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே பொறுப்புக்கு வந்தால்தான், நல்லது செய்ய முடியும் என்று மக்களே நம்புகிறார்கள்..

பணம்தான் வாக்குகள்
இரண்டாவதாக, பணம்.. பணம்.. பணம்தான்.. ஆளும் கட்சியிலும் சரி, ஆண்ட கட்சியும் சரி, ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.. மற்றபடி வேட்பாளருக்கோ, கட்சிக்கோ ஓட்டுப்போடவில்லை.. இதற்கு நடுவில் நாங்கள் நேரடியாகவே, நேர்மையாகவே போட்டி போட்டு மக்களுக்கு ஒரு பைசாகூட தராமல், கிட்டத்தட்ட 46 நகராட்சி உறுப்பினர்கள் 73 பேரூராட்சி உறுப்பினர்களும், 5 மாநகராட்சி உறுப்பினர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.. 70, 80 சதவீதம் கிராமம்தான் எங்களுக்கு பலம்.. அதையும் மீறி நகர்ப்புறத்தில் வெற்றி பெற்றுள்ளோம்..

வாக்கு சதவீதம்
இதிலும் இவங்க 2 பேருக்கு நடுவில் நாங்கள் பெற்றது வெற்றிதான். போன முறை உள்ளாட்சி தேர்தலை விட இப்போ நாங்கள் வளர்ந்துள்ளோம்.. வாக்கு சதவீதம் உயர்ந்துதான் உள்ளது.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெறும் 43 சதவீத வாக்குகளை மட்டுமே பதிவு செய்துள்ளனர் சென்னை மக்கள்.. இனிமேல் சென்னை மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் தரக்கூடாது.. எல்லாமே அனுபவிச்சிட்டு இருக்காங்க சென்னை மக்கள்.. ரோடு நல்லா இருக்கு.. தண்ணி நல்லா இருக்கு.. அரை மணி நேரம் கூட பவர் கட் இல்லை.. அத்தனை கட்டமைப்பு வசதிகளும் கொட்டிக்கிடக்குது சென்னையில்..

என்ன மனநிலை இது?
அதுக்காக சென்னை மக்கள் ஒரு ஓட்டுக்கூட போட கூட வர மாட்டீங்களா? பேசறது மட்டும் இந்த பதிவு, அந்த பதிவு என்று போட்டுட்டு இருக்கீங்க.. அது ஏன் ஓட்டுப்போட வர மாட்டேங்குறீங்க? என்ன மனநிலையில் இருக்கீங்க? எப்ப பாரு ட்விட்டர் போன் என நோண்டிட்டே இருப்பீங்களா? வெள்ளம் வரும்போது மட்டும் குறை சொல்றீங்க இல்லை? சாக்கடை அடைப்பு, கொசு தொல்லை, இப்படி எத்தனையோ குறை சொல்றீங்க இல்லை? ஓட்டு மட்டும் போடலேன்னா என்ன? இதை தவிர அப்படி என்ன வேலை இருக்கு உங்களுக்கு?

ஜனநாயக கடமை
இது உங்கள் ஜனநாயக கடமை இல்லையா? இத்தனைக்கும் அன்னைக்கு லீவுதானே? தர்மபுரியில் 89 விழுக்காடு விழுந்திருக்கு.. ஆனால், சென்னையில் வெறும் 43 விழுக்காடுதான். இவங்க யாருன்னா, "வாங்கினதுக்கு", விசுவாசமாக போட்டவங்க.. அதனால் மாற்றம் வேணும்னா நீங்கதான் வெளியே வரணும்.. அதைவிட்டுட்டு மாற்றம் வேணும் என்று வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துட்டு பதிவுகளை போட்டால் ஒன்றும் நடக்காது.. இதுக்குதான் சொல்றது சென்னை மக்களுக்கு வசதிகளை நிறுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications