சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூக்கிடுவேன்.. ஜாக்கிரதையாக இருங்க.. வீடியோவை பார்த்ததும் கண்கள் சிவந்த ஸ்டாலின்.. நடந்தது என்ன?

பொதுவெளியில் நம்மை சுத்தி ஆயிரம் கேமராக்கள் இருக்கும், நாம் நல்லது செய்கிற எதுவும் அந்த கேமராக்கள் வெளியிடாது. கெட்டதை மட்டும் தான் செய்யும் என்று அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறி இருக்கிறாராம்.

Google Oneindia Tamil News

சென்னை: இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் கேபினெட்டில் இருந்தே தூக்க நேரிடும் என்று முதல்வர் ஸ்டாலின் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்து இருக்கிறாராம்.

ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கவனிப்பதற்காக சென்ற அமைச்சர் ஆவடி நாசர், நாற்காலிகளை கொண்டு வர தாமதமானதால் அவர்கள் மீது கல் வீசி, ஆவேசமாக நடந்தகொண்ட சம்பவம் ஏகத்துக்கும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கல் வீசும் அந்த வீடியோவை பார்த்த மக்கள் முகம் சுளித்தனர். இதை பாஜகவினரும் தீவிரமாக பகிர்ந்து வந்தனர்.

எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை.. ஈரோட்டில் குவியும் அதிமுக நிர்வாகிகள்..மாலை வேட்பாளர் அறிவிப்பு?எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை.. ஈரோட்டில் குவியும் அதிமுக நிர்வாகிகள்..மாலை வேட்பாளர் அறிவிப்பு?

பாஜக

பாஜக

பாஜகவினர் இந்த விவகாரத்தை பிடித்துக்கொண்டு கடுமையாக விமர்சனம் செய்தனர். தேசிய அளவிலும் சில ஊடகங்கள் இந்த வீடியோவையோ ஷேர் செய்து இருந்தனர். அமைச்சர் கட்சி தொண்டரை விளையாட்டாக அப்படி நடத்தினார். இதில் சீரியாஸாக எதுவும் இல்லை என்று திமுக நிர்வாகிகள் பலர் விளக்கம் கொடுத்து இருந்தனர். இது விளையாட்டான சம்பவம் என்பதால்தான் அங்கு இருந்த நிர்வாகிகள் சிரித்தனர். மற்றபடி இதில் சீரியஸாக அமைச்சர் நடந்து கொள்ளவில்லை என்று திமுக நிர்வாகிகள் சில விளக்கம் அளித்தனர்.

சோசியல் மீடியா

சோசியல் மீடியா

ஆனால் சோசியல் மீடியாக்களில் இது வைரலானதையடுத்து திமுக தலைமை மிகவும் அதிர்ச்சியடைந்தது. திமுக அமைச்சர்கள் பலர் இப்படி அடிக்கடி ஏதேனும் சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதற்கு முன் அமைச்சர்கள் சிலர் தவறாக பேசி சர்ச்சையில் சிக்கினர். வாய் தவறி அவர்கள் பேசிய விஷயங்கள் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியது. சமீப நாட்களில் அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் சர்ச்சைகளில் சிக்கினர். இது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில், "எப்படியாவது தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கும் மதவெறி நச்சு சக்திகள் மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்க பார்க்கின்றன. அதற்காகக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் பேச்சுகளை வெட்டியும் ஒட்டியும், குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் தவறான பொருள்படும்படியான வாசகங்களுடன் வெளியிட்டு, அவற்றைத் தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள்." எனக் கூறியிருந்தார்.

நிகழ்ச்சி

நிகழ்ச்சி

பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஒருபக்கம் திமுக தலைவர், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் இருக்கிறது என் நிலைமை. என்னை மேலும் துன்பப்படுத்துவது போல மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உருவாக்கினால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது? காலையில் கண் விழிக்கும்போதே நம்மவர்கள் யாரும் புது பிரச்சனையை உருவாக்கி இருக்கக்கூடாது என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். இதனால் சில இரவுகள் என்னால் தூங்க முடியாமல் போகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் ஆவடி நாசர் கல் வீசிய வீடியோவை பார்த்த ஸ்டாலினின் முகம் சுருங்கியது என்கிற அறிவாலயம் தரப்பினர், ''வீடியோவை பார்த்த மாத்திரத்தில் நாசரை தொடர்புகொண்டு வறுத்து எடுத்து விட்டார் தலைவர் (ஸ்டாலின்).

சுத்தி ஆயிரம் கேமரா

சுத்தி ஆயிரம் கேமரா

பொதுவெளியில் நம்மை சுத்தி ஆயிரம் கேமராக்கள் இருக்கும். நாம் நல்லது செய்கிற எதுவும் அந்த கேமராக்கள் வெளியிடாது. கெட்டதை மட்டும் தான் செய்யும். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதுதான் உங்களுக்கு கடைசி அட்வைஸ். இனியும் இது மாதிரி நடந்துக்கிட்டிங்கன்னா, கேபினெட்டிலிருந்து தூக்கிவிடுவேன் என அவரிடம் கடுமையாக கோபப்பட்டார் தலைவர். நாசரும், ஏதோ உணர்ச்சி வேகத்தில் பண்ணிட்டேன் தலைவரேன்னு சொல்லி மன்னிப்புக் கேட்டுள்ளார்'' என்கிறார்கள் அறிவாலய உடன்பிறப்புகள்.

English summary
Why does CM Stalin get angry with Ministers after some videos circulated in social media?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X