காற்று நம்ம பக்கம்.. அடுத்தடுத்த 2 சம்பவங்கள்.. குஷியில் ஓபிஎஸ்.. ஒரே ஹாப்பியாம்.. அப்போ எடப்பாடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் நடந்த 2 சம்பவங்கள் காரணமாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஏக குஷியில் இருக்கிறதாம். காற்று நம்ம பக்கம் வீசுகிறது.. போக போக நிலைமை நமக்கு சாதகமாக மாறலாம் என்ற நம்பிக்கையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு இருக்கிறதாம்.

அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் இன்னும் முடிவிற்கு வரவில்லை. கட்சியில் நிர்வாகிகள் இன்னும் எடப்பாடி தரப்பு - ஓ பன்னீர்செல்வம் தரப்பு என்று இரண்டு பிரிந்துதான் கிடக்கிறார்கள்.

கடந்த அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார் . அதேபோல் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டது.

இன்னும் 4 மாதங்களில் கட்சியில் நிரந்தர பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

நீக்கம்

நீக்கம்

அதோடு அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் பலரும் கூண்டோடு நீக்கப்பட்டு உள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது. பொருளாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அதேபோல் அதிமுக சார்பாக எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்பி உதயகுமார் என்று சபாநாயகர் அப்பாவுவிற்கும் கடிதம் அனுப்பப்பட்டது.

நல்ல விஷயம்

நல்ல விஷயம்

இந்த நிலையில்தான் கலக்கத்தில் இருந்த ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு ஆதரவாக அடுத்தடுத்து 2 சம்பவங்கள் நடந்துள்ளன. முதல் விஷயம் சென்னையில் பிரதமர் மோடியுடன் நடைபெற்ற சந்திப்பு. சென்னைக்கு செஸ் ஒலிம்பியாட் விழாவை தொடங்கி வைக்க வந்த மோடி எடப்பாடி பழனிசாமியை சந்திக்க மறுத்தார். டெல்லியை எடப்பாடிக்கு நேரம் கொடுக்காத மோடி.. சென்னையிலும் எடப்பாடியை சந்திக்க மறுத்தார்.

கைகுலுக்கல்

கைகுலுக்கல்

விமான நிலையத்தில் மட்டும் எடப்பாடிக்கு மரியாதைக்கு கை கொடுத்துவிட்டு மோடி சென்றார். ஆனால் அதே மோடி ஓ பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்துள்ளார். விமான நிலையத்திற்கு வழியனுப்ப வந்த ஓ பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் மோடி பேசியதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் உடல்நிலையை மட்டுமின்றி விசாரித்தது இல்லாமல் சில முக்கியமான விஷயங்களை மோடி விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.

கோர்ட்

கோர்ட்

இது ஒரு பக்கம் இருக்க.. இன்னொரு பக்கம், அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி உள்ளது.உச்ச நீதிமன்றம் கடந்த உத்தரவில், உயர் நீதிமன்ற விசாரணை முடியும் வரை அதிமுகவில் இதே நிலை நீடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதன் காரணமாக அதிமுகவில் புதிய நியமனங்களை செய்ய முடியாத நிலை எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது எடப்பாடி இனி எந்த முடிவுகளையும் பெரிதாக எடுக்க முடியாது. வழக்கு விசாரணை முடியும் வரை அவர் எதுவும் செய்ய முடியும். பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பையும் வெளியிட முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

குஷி

குஷி

இந்த இரண்டு விஷயங்கள் காரணமாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு செம குஷியில் இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பலமுறை கேட்டும் மோடி சந்திக்க நேரம் கொடுக்கவில்லை.. எடப்பாடியே மோடியை சந்திக்க முடியாத நிலையில்.. ஓபிஎஸ் மட்டும் தனியாக போய் பார்த்துவிட்டு வந்துவிட்டார். டெல்லி சப்போர்ட் எங்களுக்குத்தான் இருக்கிறது. எடப்பாடியை டெல்லியும், பாஜக தேசிய தலைவர்களும் கட்சி இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ளவில்லை, என்று ஓபிஎஸ் அணியினர் குஷியில் இருக்கிறார்.

 வழக்கு

வழக்கு

டெல்லி சப்போர்ட் மட்டுமின்றி வழக்கும் எங்களுக்கு சாதகமாகவே சென்று கொண்டு இருக்கிறது. பொதுக்குழு சட்டப்படி நடக்கவில்லை என்ற வாதத்தை வைத்து இருக்கிறோம். இதனால் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உள்ளனர். பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கும் வகையில் வாதங்களை எடுத்து வைப்போம் என்று ஓ பன்னீர்செல்வம் நம்பிக்கையுடன் இருக்கிறதாம். முக்கியமாக வழக்கு முடியும் வரை அதிமுகவில் வேறு மாற்றங்கள் செய்ய கூடாது என்றும் நீதிமன்றம் கூறியதால் ஓபிஎஸ் தரப்பு சந்தோஷத்தில் இருக்கிறதாம். அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்களால் ஓபிஎஸ் தரப்பு குஷியில் உள்ள நிலையில்.. எடப்பாடி தரப்பு இதை எப்படி சமாளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+