கடுகடுத்த முகம்.. 2 முறை வெளியே வந்துவிட்டு.. திடீரென உள்ளே ஓடிய ஓபிஎஸ்.. என்னாச்சு? பரபர சம்பவம்
சென்னை: அதிமுக பொதுக்குழு இன்று நடக்க உள்ள நிலையில் ஓ பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார். இதற்கு முன்பாக அவர் வீட்டில் இரண்டு முறை தொண்டர்களை சந்தித்தார். அப்போது அவர் நடந்து கொண்ட விதம் வினோதமாக இருந்தது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு இன்று காலை 9.15 மணிக்கு சென்னை வானகரத்தில் நடக்க உள்ளது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இன்று காலை 9 மணிக்கு அதிமுக பொதுக்குழு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. பொதுக்குழுவை நடத்தலாமா வேண்டாமா என்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும்.

எடப்பாடி
இந்த நிலையில் பொதுக்குழு நடக்கும் வானகரம் மண்டபம் நோக்கி எடப்பாடி பழனிசாமி சென்று கொண்டு இருக்கிறார். தனது தொண்டர்கள் புடை சூழ பிரச்சார வேனில் அவர் வானகரம் நோக்கி சென்று கொண்டு இருக்கிறார். கடந்த முறை போலவே இந்த முறையும் அவருக்கு மிக பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக பொதுக்குழுவில் இன்று இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தீர்மானம் இன்று நிறைவேற்றப்படும்.

என்ன நடந்தது?
பழனிசாமி பொதுக்குழுவில் பங்கேற்க சென்றுள்ள நிலையில் பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்திற்கு செல்கிறார். தனது இல்லத்தில் இருந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் கட்சி அலுவலகம் எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் மூலம் பூட்டப்பட்டுள்ளது. அதோடு அதிமுக தலைமை அலுவலகத்தில் பன்னீர்செல்வம் - பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதல்
அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டுள்ள நிலையில், அங்கு ஒ.பன்னீர்செல்வம் செல்வதால் எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் அவரை தடுக்கும் விதமாக அங்கு கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு இருக்கிறார்கள். இன்று அதிமுக அலுவலகம் செல்லும் முன் தனது வீட்டில் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்தார். வைத்தியலிங்கம், ஆர்சிபி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஆலோசனை செய்தார். அவர் வீடு முழுக்க தொண்டர்கள் நிரம்பி வழிந்தனர்.

கடுகடுப்பு
ஆனால் ஓ பன்னீர்செல்வம் கடுகடுப்பான முகத்தோடு காணப்பட்டார். எப்போதும் அவர் முகத்தில் இருக்கும் சாந்தம் இன்று காணப்படவில்லை. மிகவும் கடுகடுப்பாக அவர் இருந்தார். அதோடு வீட்டிற்கு உள்ளே தொண்டர் ஒருவரை அவர் திட்டினார். அதன்பின் அதிமுக அலுவலகம் செல்ல வெளியே சென்றவர் 10 மீட்டர் நடந்துவிட்டு மீண்டும் திரும்பி வீட்டிற்கு உள்ளே வந்தார். என்ன நினைத்தாரோ வெளியே சென்றுவிட்டு மீண்டும் உள்ளே வந்தார்.

மீண்டும் சந்திப்பு
வீட்டிற்கு உள்ளே வேகமாக ஓடி வந்து வந்து மீண்டும் தொண்டர்களை சந்தித்துவிட்டு அங்கு போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். இந்த முறை அவர் முகத்தில் கொஞ்சம் மகிழ்ச்சி தெரிந்தது. முன்பு தான் திட்டிய நிர்வாகியை அழைத்து சிரித்தார். அதன்பின் மீண்டும் சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சகுனத்திற்காக திரும்பி வந்தாரா அல்லது வேறு காரணமா என்று தெரியவில்லை. வெளியே சென்றவர் மீண்டும் உள்ளே வந்துவிட்டு மீண்டும் வெளியே சென்றதால் நிர்வாகிகள் இடையே குழப்பம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications