Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ்ஸுக்கு லெட்டர்.. நெருங்கும் கிளைமாக்ஸ்.. காயின் நம்ம பக்கம் தான் - பரபர பிளானில் எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக பொதுக்குழுவை நடத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவருக்கும் பொதுக்குழு அழைப்புக் கடிதம் அனுப்ப எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

    திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்தார் இ.பி.எஸ் - ஜெயக்குமார்!

    வரும் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்திட உறுதியாக இருந்து வரும் நிலையில், அதை எதிர்த்து நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நாடியுள்ளார் ஓபிஎஸ்.

    இந்நிலையில், பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்புக் கடிதம் அனுப்ப ஈபிஎஸ் தரப்பினர் முடிவு செய்துள்ளனராம். அதற்குப் பின்னணியிலும் ஒரு திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

     ஈபிஎஸ்ஸுக்கு தலைமைப் பதவி

    ஈபிஎஸ்ஸுக்கு தலைமைப் பதவி

    அ.தி.மு.கவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. கட்சிக்கு ஒற்றைத் தலைமை என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அணியினர் இந்தப் பொதுக்குழுவில் ஈபிஎஸ்ஸுக்கு பொதுச் செயலாளராக பட்டம் சூட்டுவது என்பதில் தீர்மானமாக இருந்து வருகின்றனர். கடந்த பொதுக்குழு கூட்டத்திலேயே இந்த முடிவை எடுக்கத் தீர்மானித்தும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தின் வாயிலாக முட்டுக்கட்டை போட்டதால் அது நிறைவேறாமல் போனதில் எடப்பாடி தரப்பு அப்செட்டாகி அத்தனை தீர்மானங்களையும் நிராகரித்தது.

    இந்த முறை நிச்சயம்

    இந்த முறை நிச்சயம்

    கடந்த முறை போல இந்த பொதுக்குழுவில் பின்னடைவே இருக்காது என உறுதியாகச் சொல்கிறார்கள் எடப்பாடி தரப்பினர். கடந்த முறையை விட ஆதரவு தங்களுக்கு அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அப்போதாவது, மொத்தமுள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 பேரிடம் தான் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவாக கையெழுத்திட்டு கடிதம் வாங்கியிருந்தது எடப்பாடி தரப்பு. ஆனால், இப்போது சுமார் 2,500 பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்துடன் கூடிய கடிதங்களைப் பெற்று தயாராக வைத்திருக்கிறார்களாம்.

    பொருளாளர் பதவிக்கு போட்டி

    பொருளாளர் பதவிக்கு போட்டி

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நகர்வுகளை நோக்கி ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்குச் சென்றதால் கடுப்பான எடப்பாடி தரப்பினர், ஓபிஎஸ் வகிக்கும் ஒருங்கிணைப்பாளர் பதவியே செல்லாது என்றும் கட்சி சட்ட விதிகளைக் குறிப்பிட்டு அறிவித்தனர். மேலும், ஓ.பன்னீர்செல்வம் வகிக்கும் பொருளாளர் பதவியையும் பறிப்பதற்கு திட்டமிட்டு வருகின்றனர். அந்தப் பதவியைப் பெறுவதற்கும் எடப்பாடி அணியில் பெரும் போட்டியே நடந்து வருகிறது. இந்நிலையில் பொதுக்குழுவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சி விதிகளில் கொண்டு வரப்பட இருக்கும் திருத்தங்கள் குறித்தும் சட்ட வல்லுநர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    பொதுக்குழுவில்

    பொதுக்குழுவில்

    ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டே நீக்கும் வகையில் எடப்பாடி தரப்பில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈபிஎஸ் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஜூலை 11 அன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தக் கடிதத்தில் தலைமை நிலைய செயலாளர் என்று ஈபிஎஸ்தான் கையெழுத்திட்டுள்ளார்.

     ஓபிஎஸ்ஸூக்கு அழைப்பு

    ஓபிஎஸ்ஸூக்கு அழைப்பு

    ஓ.பன்னீர்செல்வம் தற்போது பொருளாளர் பதவியில் இருப்பதால் அவருக்கும் பொதுக்குழு அழைப்புக் கடிதம் அனுப்ப எடப்பாடி தரப்பினர் முடிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியை பறிக்கும் தீர்மானமும் இந்த பொதுக்குழுவில் கொண்டு வரப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், கடந்த முறை போல ஓபிஎஸ் பொதுக்குழுவிற்குச் செல்வாரா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

     ஜெயக்குமார் சொன்னது

    ஜெயக்குமார் சொன்னது

    நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கட்சியின் பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது. கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் ஈபிஎஸ் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுத்தோம். அப்படி இருந்தும் ஓபிஎஸ் வரவில்லை. ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுவுக்கு அவருக்கு அழைப்பு விடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும் எனத் தெரிவித்தார்.

    தவிர்க்கும் ஓபிஎஸ்

    தவிர்க்கும் ஓபிஎஸ்

    கடந்த பொதுக்குழுவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்புகளை தொடர்ந்து தவிர்த்து வருகிறார் ஓபிஎஸ். நேற்று கூட பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு சென்னையில் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது தனி அறையில் காத்திருந்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி கிளம்பிச் சென்ற பின்னரே மேடைக்குச் சென்று திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளித்தார். இதனால், அவர், அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டாலும் பொதுக்குழுவுக்குச் செல்வது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.

    சாதகமாக

    சாதகமாக

    இதையே, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் எடப்பாடி தரப்பினர், ஓபிஎஸ்ஸூக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளனராம். விதிமீறல் இல்லாமல் ஓபிஎஸ்ஸூக்கும் அழைப்பிதழை அனுப்பி விடலாம். அவர் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தைப் புறக்கணித்தாலும், நாம் நமது வேலையை சரியாகச் செய்துவிட்டதாக கோர்ட்டிலும் அடித்துப் பேசலாம் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளனராம். ஓபிஎஸ் தரப்பு என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+